Published:Updated:

பிக் பாஸ்... செப்டம்பரில் சீஸன் 4... போட்டியாளர்களுக்கு முதல் கண்டிஷன் என்ன தெரியுமா?!

பிக் பாஸ் சீஸன் 4 எப்போது தொடங்குமென்ற கேள்விக்கு ஷோ தயாரிப்பாளர்களான எண்டமோல் தரப்பிடம் விசாரித்தோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்த் தொலைக்காட்சி உலகில் 2017ல் அறிமுகமாகி பலத்த வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுப்பாளராக களம் இறங்கியது இதற்கு ஒரு காரணம். இரவு 9 மணி ஆனதும் ஊரே டிவி முன் உட்கார்ந்தது. அதே சமயம், `ஸ்கிரிப்ட் படி நடக்கிறது’ என்று ஒருபுறம் விமர்சனங்களும் எழுந்தன.

ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட முதல் சீஸனில் ஆரவ் டைட்டில் வென்றார்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

அடுத்த ஆண்டு சீஸன் 2. `ஷோ தமிழுக்குப் புதிதாக இருந்தால் ஓர் எதிர்பார்ப்பில் ஹிட் ஆனது. இரண்டாவது சீஸன் அப்படி இருக்காது’ எனப் பேசினார்கள். இந்த முறை கமல் அரசியல்வாதியாகவும் மாறியிருந்தார். போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் முக்கியத்துவம் தந்தது சேனல். குடும்பப் பிரச்னைக்காக வெளியில் தினமும் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருந்த `தாடி’ பாலாஜி – நித்யா ஜோடியை ஷோவுக்குள் கொண்டு வந்தார்கள். ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மஹத், ஷாரிக் என இளம் பட்டாளம் களமிறங்கியதில் கிளாமர் லுக்கும் கிடைத்தது. இறுதியில் ரித்விகா டைட்டில் வென்றார்.

கடந்தாண்டு மூன்றாவது சீஸன். கவின், சாண்டி, லாஸ்லியா, சேரன், வனிதா விஜயகுமார், மதுமிதா உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்கள். இந்த முறையும் கன்டென்டுக்குப் பஞ்சமே இல்லை. சரவணன் ஓப்பனாகப் பேசிய ஒரு வார்த்தைக்காக அதிரடியாக ஷோவிலிருந்து வெளியேற்றப்பட்டார். சக போட்டியாளர்கள் சிலருடன் ஏற்பட்ட மோதல் காரணமாகத் தன் கையை பிளேடால் அறுத்துக்கொண்ட மதுமிதாவும் ஷோவிலிருந்து வெளியேறினார். கடைசியில் முகேன் டைட்டில் வென்றார்.

நடந்து முடிந்த மூன்று சீஸன்களுமே சரியாக ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்கி நூறு நாள்கள் நடந்தன. அதற்கு ஒரு மாதம் முன்பாகவே அதாவது மே மாதமே கமல் பங்கேற்கும் ப்ரமோ ஷூட் தொடங்கி விடும். ஆனால் இந்தாண்டு?

ஓவியா
ஓவியா

கொரோனாவால் இது எதுவும் நடக்கவில்லை. மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீரியல்களின் ஷூட்டிங்கே கடந்த சில தினங்களுக்கு முன்தான் மீண்டும் தொடங்கியது. அதற்குள் சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு வந்துவிட, தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பிக் பாஸ் இந்தாண்டு நடக்குமா?

நிகழ்ச்சியுடன் தொடர்புடைய சிலரிடம் பேசினேன்.

``நிச்சயம் இருக்கும். லாக்டௌன் போயிட்டிருக்கிறதால இது தொடர்பா விரிவா எதையும் இப்ப பேச முடியாது. லாக்டௌன் முடிஞ்சதும், அறிவிப்பு வெளியாகும். அரசு கடைப்பிடிக்கச் சொல்கிற ஷூட்டிங் விதிமுறைகளைக் கடைப்பிடிச்சுத்தான் ஷூட்டிங் நடக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போட்டியாளர்களா பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகிறவர்களுக்கு முதல் கண்டிஷனே கோவிட் `டெஸ்ட் எடுக்கணும்கிறதுதான்.

இன்னும் சிலரோ, `லாக் டௌன் நாள்களிலேயே போட்டியாளர்களை இறுதி செய்துவிடுவது’ எனச் சேனல் முடிவு செய்திருந்ததாகவும், கமலிடம் இதுபற்றிச் சேனல் தரப்பிலிருந்து சொன்னபோது, `இப்போது வேண்டாம். சூழல் சரியாகட்டும்’ என கமல் சொன்னதாகவும் சொல்கிறார்கள்.

சரி, ஷோ எப்போது தொடங்கும் என பிக் பாஸ் தயாரிப்பாளர்களான `எண்டமோல்’ தரப்பிலேயே கேட்டோம்.

பிக் பாஸ்
பிக் பாஸ்
மீண்டும் சீரியஸ் லாக்டெளன், மீண்டும் சீரியல் ஷூட்டிங் நிறுத்தம்! - புது எபிசோடுகள் ஒளிபரப்பாகுமா?!

``ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்கியிருக்கணும். கொரோனாவால அது நடக்கலை. ஜூலையில ஒளிபரப்பு தொடங்கிடலாம்னு நினைச்சோம். இப்ப இருக்கிற சூழலுக்கு அதுவும் சாத்தியப்படாதுனு தோணுது. இந்தக் `கோவிட்’ லாக் டௌன் ஆகஸ்ட்டுக்குள் முடிவுக்கு வந்திடும்னு நம்புறதால செப்டம்பர்ல ஒளிபரப்பைத் தொடங்கலாம்னு திட்டமிட்டிருக்கோம். விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வரும். நிச்சயம் கமல் சார்தான் தொகுப்பாளராக இருப்பார்’’ என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு