சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்... எக்ஸாம் எழுதாததால் ஆங்கர் ஆனேன்!”

ஆர்த்தி சுபாஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்த்தி சுபாஷ்

‘உனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணு’ன்னு சொன்னார். சரின்னு எக்ஸாம் எழுதாம ஆடிஷனில் கலந்துகிட்டேன்.

‘ஆதித்யா' தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்த ஆர்த்தி சுபாஷ் தற்போது, சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘பாண்டவர் இல்லம்' தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

``காலேஜ் படிக்கும்போதே ஆங்கராகிட்டீங்களாமே..?’’

“ஆமா. என் அப்பா மீடியா புரொபஷனில் இருந்ததால ஆரம்பத்திலேயே நடிப்புக்கு நோ சொல்லிட்டாங்க. அண்ணனும் நடிக்கிறதுக்காக டிரை பண்ணிட்டு இருந்ததால எனக்கு நடிக்கிறதுல ஆர்வம் இல்லை. ஆனா, நான் எப்பவுமே கலகலன்னு பேசிட்டே இருப்பேன். மணிக்கணக்கா நிறுத்தாமப் பேசணும்னு சொன்னாலும் பேசுவேன். அப்பாவோட ஃப்ரெண்ட் ஒரு ஃபங்ஷனில் பார்த்துட்டு ‘ஆங்கரிங் பண்ண ஆர்வம் இருக்கா’ன்னு கேட்டாங்க. ‘இருக்கு’ன்னு சொல்லவும், மக்கள் டி.வி-யில் ‘வானவில்'னு ஒரு ஷோவை ஆங்கரிங் பண்ணக் கூப்பிட்டாங்க. படிச்சிட்டே ஆங்கரிங்கும் பண்ணிட்டு இருந்தேன். பல நாள் காலேஜுக்கு சேலை கட்டிட்டுதான் போயிருக்கேன். நான் ஒர்க் பண்றேன்னு எங்க டிபார்ட்மென்ட்ல செம மரியாதை. பயங்கர கெத்தான டைம் அது!

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்... எக்ஸாம் எழுதாததால் ஆங்கர் ஆனேன்!”

அப்புறம் சின்னச் சின்ன லோக்கல் சேனலில் ஆங்கரிங் பண்ணிட்டிருந்தேன். என் ஃப்ரெண்ட்ஸ், ‘சன் டி.வி-யில் ஆங்கருக்கான ஆடிஷன் நடக்குது... டிரை பண்ணிப் பாரு’ன்னு சொன்னாங்க. அந்தச் சமயம் எனக்கு ஃபைனல் இயர் செமஸ்டர் எக்ஸாம் நடந்துட்டிருந்துச்சு. ஆடிஷனுக்குப் போகணும்னா எக்ஸாம் எழுத முடியாது. அப்பாகிட்ட பர்மிஷன் கேட்டேன். ‘உனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணு’ன்னு சொன்னார். சரின்னு எக்ஸாம் எழுதாம ஆடிஷனில் கலந்துகிட்டேன். ரெண்டு ரவுண்ட்ல செலக்ட் ஆகி மூணாவது ரவுண்ட்ல உயரம் கம்மியா இருக்கேன்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. இதுவரை அப்படி எந்தவொரு ஆடிஷனுக்கும் போய் நான் ரிஜெக்ட் ஆனதில்லைங்கிறதனால கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஆனா, அந்த ஆடிஷன் மூலமா ‘ஆதித்யா' சேனலுக்கு ஆங்கரிங் பண்ணக் கூப்பிட்டாங்க. அப்பவே, இன்னும் ஒரு வருஷத்துல ‘என்னை ரிஜெக்ட் பண்ணினவங்களே மறுபடி கூப்பிட்டு சன் டி.வி-யில் ஆங்கரிங் பண்ண வைக்கணும்’ என்கிற குறிக்கோளோட ஆதித்யாவில் நுழைஞ்சேன். அதே மாதிரி, ஒரு வருஷத்துல என் குறிக்கோளை அடைஞ்சேன்.”

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்... எக்ஸாம் எழுதாததால் ஆங்கர் ஆனேன்!”

``சீரியல் வாய்ப்பு எப்படி வந்தது?’’

“படங்கள், சீரியல்னு தொடர்ந்து கேட்டுட்டே இருந்தாங்க. அப்பா ‘நடிக்க வேண்டாம்’னு சொன்னதால வந்த வாய்ப்புகளை வேண்டாம்னு சொன்னேன். சன் டி.வி-யில் இருந்து ‘பாண்டவர் இல்லம்' சீரியலுக்காகக் கேட்டப்போ மறுபடி அப்பாகிட்ட பர்மிஷன் கேட்டேன். அவர், இதுவரை வேண்டாம்னு சொன்னதை மறுபடி அவர்கிட்ட நான் கேட்டதேயில்லை. இந்த சீரியலுக்காகக் கேட்டதும் எனக்குப் பிடிச்சதனால கேட்குறேன்னு மறுப்பு சொல்லாம சம்மதிச்சாங்க. அப்பா சொன்ன சில அறிவுரைகளை ஞாபகத்தில் வச்சுக்கிட்டு சீரியலுக்குள் நுழைஞ்சேன்.”

``சீரியல் அனுபவம் எப்படி?’’

“ஆங்கரிங்கைப் பொறுத்தவரை அடிக்கடி வெளி இடங்களுக்குப் போவோம். அதேமாதிரி, புதுப்புது மனிதர்களைச் சந்திப்போம். ஆனா, சீரியலில் ஒரே செட். பார்த்த முகங்களையே ரெண்டு, மூணு வருஷம் பார்க்கணும். அதுவே ஆரம்பத்தில் எனக்கு செட்டாகலை. நடிப்பில் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். முழுசா நடிப்பைப் பற்றித் தெரிஞ்ச பிறகு அதை விட மனசில்லை.”

விகடன் TV: ஆங்கர் to ஆக்டர்... எக்ஸாம் எழுதாததால் ஆங்கர் ஆனேன்!”

``சீரியலுக்காகப் பல விஷயங்கள் கத்துக்குறீங்களாமே..?’’

“ஆமா. சீரியல் ஆரம்பத்தில் என்னோட புரொமோ ஷூட் எடுக்கிறதுக்காக எனக்கு புல்லட் ஓட்டத் தெரியுமான்னு கேட்டாங்க. அதுவரைக்கும் எனக்கு புல்லட் ஓட்டத் தெரியாது. ஆனாலும், ‘தெரியும் சார்’னு சொல்லிட்டேன். என் அண்ணன்கிட்ட புல்லட் கத்துத்தரச் சொல்லி ஒரு மணி நேரத்தில் கத்துக்கிட்டேன். ஓரளவு ஓட்டி சமாளிச்சிடலாம்னு ஷூட்டுக்குப் போனா, ‘சேத்துல டபுள்ஸ் ஓட்டணும்... அதுவும் கையை விட்டுட்டு'ன்னு சொன்னாங்க. அப்பவும் முகத்துல எந்த மாற்றமும் இல்லாம `ஓகே, பண்றே’ன்னு சொல்லிட்டு அந்த சீன் பண்ணினேன். பயம்தான் நம்மளோட எதிரி. பயத்தை ஓரம் வச்சிட்டோம்னா நிச்சயம் சாதிக்க முடியும்.”

``மறக்கமுடியாத அனுபவம்..?’’

“ஆரம்பத்தில் பெரிய அளவில் என்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்கலை. சீரியலில் கிராமத்து கெட்டப்ல இருப்பேன். நேர்ல பக்கா மார்டனா டிரெஸ் பண்ணியிருக்கிறதனால பலருக்கும் என்னை அடையாளம் தெரியாது. ஒருமுறை மதுரை, சேலம் பக்கமெல்லாம் ஷூட்டுக்காகப் போயிருந்தோம். அங்கே ஒரு பாட்டி என்னைக் கூப்பிட்டு, அவங்க வீட்டுப் பொண்ணைத் திட்டுற மாதிரி உரிமையா கூப்பிட்டுத் திட்டினாங்க. அந்தத் தருணம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!”