சினிமா
Published:Updated:

விகடன் TV: முல்லைக்கு நான் செட் ஆகலையா?

காவ்யா
பிரீமியம் ஸ்டோரி
News
காவ்யா

சித்ரா சம்பாதிச்சு வச்சிருந்த ரசிகர் கூட்டம் பெரிசு. திடீர்னு அவங்க இடத்துல நான் வந்து நின்னப்ப பர்ஃபாமன்ஸ்ங்கிறது பெரிய சவாலா இருந்தது.

நடிகை சித்ராவின் திடீர் மரணத்துக்குப் பிறகு அவர் நடித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாகக் கமிட் ஆனவர் காவ்யா. ‘‘தொடருக்குள் வந்து ஆறு மாதங்கள் உருண்டோடிவிட்டாலும், இன்றும் சித்ரா இடத்தில் இவரை ஏற்க மறுக்கிறார்கள்’’ எனக் கேள்விப்பட, காவ்யாவிடமே பேசினேன்.

‘‘முல்லைங்கிற அந்தக் கதாபாத்திரத்துக்கு என்னைத் தேர்ந்தெடுத்து, ஆடிஷன் நடத்திதான் கமிட் செஞ்சாங்க. முதல் சீரியலான ‘பாரதி கண்ணம்மா’வுல சும்மா வந்து ஒரு ஓரத்துல நின்னுட்டுப் போகற மாதிரியான கேரக்டர்தான். டக்குனு இப்படி ஒரு வாய்ப்பு எதிர்பாராத சூழல்ல அமைஞ்சப்ப, நம்பிக் கூப்பிடுறாங்கன்னுதான் சம்மதிச்சேன். மத்தபடி சீரியலே என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு சர்வைவலுக்காப் பண்ணிட்டிருக்கிற விஷயம்தான்.

விகடன் TV: முல்லைக்கு நான் செட் ஆகலையா?

ஆம்பூர்ல இருந்து சென்னை வந்து ஆர்க்கிடெக்சர் படிச்சிக்கிட்டே குறும்படங்கள், விளம்பரப் படங்கள்னு பண்ணினதெல்லாம் சினிமாவை நோக்கிய பயணம்தான். வழியில ரெண்டு சீரியல் அமைஞ்சது. நடிச்சபடியே சினிமாவை நோக்கி இன்னுமே ஓடிட்டுதான் இருக்கேன்.

சித்ரா சம்பாதிச்சு வச்சிருந்த ரசிகர் கூட்டம் பெரிசு. திடீர்னு அவங்க இடத்துல நான் வந்து நின்னப்ப பர்ஃபாமன்ஸ்ங்கிறது பெரிய சவாலா இருந்தது. நானா தேடிப் போகலை. வந்த வாய்ப்புதானேன்னு நினைச்சு முடிஞ்ச வரை என்னுடைய உழைப்பைக் காட்டினேன். எப்படியோ நாள்கள் ஓடிடுச்சு. ‘முல்லை’ங்கிற கேரக்டருக்கு நான் செட் ஆகலைன்னா உடனே மாத்திட மாட்டாங்களா? ஆறு மாசமாகவா வச்சிட்டிருக்காங்க?

விகடன் TV: முல்லைக்கு நான் செட் ஆகலையா?

அதேநேரம், ‘முல்லை’யைத் தாண்டி சித்ராவுக்குன்னு நிறைய ரசிகர்கள் இருந்திருப்பாங்க இல்லையா, அவங்க மனசுல சித்ரா இன்னும் கொஞ்ச காலத்துக்காவது இருந்திட்டேதான் இருப்பாங்க. அந்த ரசிகர்கள்தான் அப்பப்ப ஏதாவது சொல்றாங்கனு நினைக்கிறேன். அவங்க ஒருவித வலியில பேசறாங்க. அதுக்கு எதிர்வினை புரியறதுலயோ, அவங்க மேல கோபப்படுறதுலயோ அர்த்தமில்லை’’ என்றவரிடம், ‘ஊரடங்கு நாள்கள் எப்படிப் போகின்றன?’ எனக் கேட்டேன்.

‘‘கடந்த லாக்டௌன்லயும் சரி, இப்பவும் சரி, சொந்த ஊருக்கு வந்துட்டேன். சொந்த வீட்டுல அப்பா அம்மாவுடன் பொழுதுகளைச் செலவழிக்கக் கிடைச்ச ஒரு சந்தர்ப்பமா நினைக்கிறேன்’’ என்கிறார்.