Published:Updated:

``சித்ரா சந்தோஷமா இருக்கான்னு தப்பா நினைச்சுட்டோம்!" - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுஜிதா

சித்ராவுடன் சுஜிதா

`சிறந்த துணை நடிகை'க்கான விஜய் டெலிவிஷன் விருதைக் கடந்த ஆண்டு வென்றவருக்கு, `சிறந்த அண்ணி' விருதையும் இந்த சீரியல் பெற்றுக்கொடுத்திருக்கிறது. விருது மேடையில் தனக்கு ஸ்பெஷல் வீடியோ ஒளிபரப்பப்படவே, நெகிழ்ந்து கலங்கினார். வாழ்த்துகள் கூறி சுஜிதாவிடம் பேசினோம்.

``சித்ரா சந்தோஷமா இருக்கான்னு தப்பா நினைச்சுட்டோம்!" - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுஜிதா

`சிறந்த துணை நடிகை'க்கான விஜய் டெலிவிஷன் விருதைக் கடந்த ஆண்டு வென்றவருக்கு, `சிறந்த அண்ணி' விருதையும் இந்த சீரியல் பெற்றுக்கொடுத்திருக்கிறது. விருது மேடையில் தனக்கு ஸ்பெஷல் வீடியோ ஒளிபரப்பப்படவே, நெகிழ்ந்து கலங்கினார். வாழ்த்துகள் கூறி சுஜிதாவிடம் பேசினோம்.

Published:Updated:
சித்ராவுடன் சுஜிதா

பிறந்த 40-வது நாள் குழந்தைப் பருவத்திலிருந்து 37 ஆண்டுகளாக நடித்து வருகிறார் சுஜிதா. சின்னத்திரையில் நெடிய அனுபவம் கொண்டவருக்கு, விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் ஹிட் புராஜெக்ட்டாக அமைந்திருக்கிறது. இதே சீரியலுக்காக 'சிறந்த துணை நடிகை'க்கான விஜய் டெலிவிஷன் விருதைக் கடந்த ஆண்டு வென்றவருக்கு, `சிறந்த அண்ணி' விருதையும் இந்த சீரியல் பெற்றுக்கொடுத்திருக்கிறது. விருது மேடையில் தனக்கு ஸ்பெஷல் வீடியோ ஒளிபரப்பப்படவே, நெகிழ்ந்து கலங்கினார். வாழ்த்துகள் கூறி சுஜிதாவிடம் பேசினோம்.

விருது மேடையில்...
விருது மேடையில்...

``விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சி சமீபத்துல நடந்துச்சு. அதுல, ரெண்டாவது முறையா எனக்கு விருது கிடைச்சது. குழந்தைப் பருவத்துல இருந்தே நடிச்சுகிட்டு இருக்கேன். இதுக்காக ஸ்பெஷலா ஏவி போட்டாங்க. அதுல, `முந்தானை முடிச்சு' நினைவுகள் பத்தி பாக்யராஜ் சாரும், `பூவிழி வாசலிலே' நினைவுகள் பத்தி சத்யராஜ் சாரும் பேசினாங்க. குழந்தைப் பருவத்தை சினிமா நடிப்பில் கழிச்சேன். டீன் ஏஜ் பருவத்துல பெரும்பகுதி சீரியல் நடிப்புலயே போயிடுச்சு. இதனால, சரியா ஸ்கூல், காலேஜ் போகாத ஏக்கம் எனக்கு அதிகம் இருந்துச்சு. அதையெல்லாம் அந்த ஸ்பெஷல் வீடியோ மறக்க வெச்சதுடன், நான் இழந்த விஷயங்களைவிட, நிறைய பேரோட அன்பைப் பெற்றிருக்கேன்னு தோணுச்சு. அந்த ஏவியால மேடையில ரொம்பவே நெகிழ்ச்சியாகிட்டேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிறைய சீரியல்ல நடிச்சிருக்கேன். குழந்தை பிறந்ததுக்குப் பிறகு குடும்பத்துக்காக சின்ன பிரேக் எடுத்துகிட்டேன். இந்த இடைப்பட்ட காலத்துல நிறைய புது ஆர்டிஸ்ட்ஸ் வந்துட்டாங்க. ஆனாலும், `30 வயசுக்கு மேலான நிலையில, என்னை நம்பி `பாண்டியன் ஸ்டோர்ஸ்' வாய்ப்பு வந்துச்சு. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை பாசிட்டிவ்வா பிரதிபலிக்கிற கதைங்கிறதால நடிக்க ஒப்புக்கிட்டேன். இந்த சீரியல் தொடங்கினப்போ, `வானத்தைப்போல', `ஆனந்தம்'னு பல படங்களோட தழுவல்னு சமூக வலைதளங்கள்ல நிறையவே மீம்ஸ், ட்ரோல் வந்துச்சு. அதைப் பார்த்து, எங்க பங்குக்கு நாங்களும் கிண்டல் செஞ்சு ஷூட்டிங் ஸ்பாட்ல சிரிப்போம்.

sujitha
sujitha

ஒரு படத்தோட, சீரியலோட சாயல்லதான் இன்னொரு புராஜெக்ட் இருக்கும். அப்படி இருந்தாலும்கூட நம்ம புராஜெக்ட்டை எப்படிக் கொண்டு போறோம்ங்கிறதுலதான் வெற்றி இருக்கும். ஒரு படத்தைக்கூட ரெண்டரை மணி நேரத்துல முடிச்சுடலாம். ஆனா, ரெண்டரை வருஷமா ஹிட் கிராஃப் குறையாம இந்த சீரியலைக் கொண்டுபோறோம். டி.ஆர்.பி ரேட்டிங் விஷயங்களுக்காக எந்த சமரசமும் செஞ்சுக்காம, பாசிட்டிவிட்டி கண்ணோட்டத்துல மட்டுமே இந்த சீரியலைக் கொண்டுபோறோம். அதை மக்களும் ஏத்துகிட்டாங்க. எனக்கு கம்பேக்கா அமைஞ்ச இந்த சீரியல் மூலமா, எல்லோருடைய மனசுலயும் அண்ணியா இடம்பிடிச்சிருக்கிறதுல ரொம்பவே மகிழ்ச்சி. ஆனா, இந்த இடத்துல சித்ராவோட இழப்புதான் வருத்தத்தைக் கொடுக்குது" என்று சற்றே அமைதியானார்.

``இந்த சீரியல் டீம்ல எல்லோருமே ரொம்பவே ஃபிரெண்ட்லியா இருப்போம். நிச்சயமா எங்களுக்குள்ளயும் சில மனக்கசப்புகள் எப்பயாச்சும் வரும். அதை உடனுக்குடன் சரிசெஞ்சு, ஷூட்டிங் ஸ்பாட்ல அரட்டை, ஆட்டம் பாட்டம்னு மகிழ்ச்சியா இருப்போம். இந்த புராஜெக்ட்டை ரொம்பவே கொண்டாடினது சித்ராதான். கண்ணுபட்டதுபோல அவளோட இறப்பு அமைஞ்சிடுச்சு. `உங்ககிட்ட நிறைய கத்துக்கணும்கா'னு அடிக்கடி என்கிட்ட சொல்லுவா. வேலை விஷயமா, ஃபேஷன் விஷயங்கள் பத்தியும் நிறைய பேசுவோம். நிச்சயதார்த்தத்துக்கு அவ எங்க யூனிட்ல யாரையும் கூப்பிடல. `யாரோ சொல்லித்தான் இந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சுது. நீயே சொல்லியிருந்தா சந்தோஷமா இருந்திருக்கும்'னு அவகிட்ட உரிமையுடன் கேட்டேன்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் டீம்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் டீம்

`கொரோனா நேரம்ங்கிறதால 50 பேருக்கு மேல கூடக்கூடாது. அதனாலதான் கூப்பிடலக்கா'ன்னு ஸாரி கேட்டா. அப்புறம் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கிற தகவலைச் சொன்னா. அவளோட கல்யாணத்தைச் சிறப்பா நடத்தணும்னு மொத்த சீரியல் டீமும் நிறைய பேசியிருந்தோம். கோவிட் பிரச்னை இருந்த நேரம். அதனால, ஒருத்தர்கிட்ட இன்னொருத்தர் நெருங்கிப் பழகுறது, கூடிப் பேசுறதைக் குறைச்சுகிட்டோம். அதனால, சித்ராவோட மனநிலையைச் சரியா கணிக்க முடியல. அந்த நேரத்துல அவ மனசுல இருந்த விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டு, மனம்விட்டுப் பேசியிருந்தாக்கூட அவளோட பாரம் குறைஞ்சு இருக்கும்.

நல்லா வளர்ந்துட்டு இருக்கா, ரசிகர்கள் அதிகரிச்சுட்டாங்க, கல்யாணம் செஞ்சுக்கப் போறா... அதனால சந்தோஷமா இருக்கான்னுதான் நாங்க நினைச்சுகிட்டு இருந்தோம். தப்பான ஒரு நபரைத் தேர்வு செஞ்சுட்டோம்னு தெரிஞ்சா, உடனே அந்த லைஃப்ல இருந்து விலகி வந்து பிடிச்ச மாதிரி வாழ்றதுதானே சரியா இருக்கும். நாலு பேரு என்ன சொல்லுவாங்கன்னு தடுமாறினா, நமக்குத்தான் இழப்பா மாறும். அந்தத் தெளிவுல சித்ரா சரியான முடிவை எடுத்திருக்கணும். ஆனா, அவசரப்பட்டுட்டா.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் டீம்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் டீம்

சித்ராவின் இறப்புச் செய்தியைக் கேட்டப்போ அதை நம்பவே நிறைய நேரம் தேவைப்பட்டுச்சு. அவளோட இறப்புக்கான காரணம் எங்களுக்குத் தெரியல. அதனால, எங்களாலயும் எந்த முடிவுக்கும் வர முடியாது. அதேசமயம் அவளோட மரணத்துக்கு நீதி கிடைக்கணும். அவளோட இறப்புக்குக் காரணமானவங்க தண்டிக்கப்படணும். இனியும் தனிப்பட்ட பர்சனல் காரணங்களால யாரும் தவறான முடிவைத் தேடிக்கக்கூடாது" என்றவரின் குரல் உடைகிறது.

பர்சனல் விஷயங்கள் மற்றும் லாக்டெளன் அத்தியாயத்துக்குள் நுழைந்தவர், ``ரஜினி, கமல், பாக்யராஜ், சத்யராஜ்னு நான் ரசிக்கிற நிறைய கலைஞர்களுடன், விவரம் தெரியாத வயசுல நடிச்சிருக்கேன். அவங்க மடியில தவழ்ந்திருக்கேன். குழந்தை நட்சத்திரமா நடிச்ச அந்தக் காலகட்டம் எனக்கு ஞாபகமே இல்ல. என்னோட அந்தப் பருவத்தை என்னோட அம்மாதான் மகிழ்ச்சியா கழிச்சாங்க. டீன் ஏஜுக்குப் பிறகு நடிக்கிற இந்தக் காலகட்டத்தைத்தான் என்னால உணர முடியுது. முத்தக்காட்சி இருக்கும். கிளாமரா நடிக்கணும்னு அறியாமையிலயே சினிமாவுல அதிகம் நடிக்காம இருந்துட்டேன். நல்ல வாய்ப்புகள் அமைஞ்சா சினிமாவுலயும் நடிப்பேன்.

குடும்பத்தினருடன் சுஜிதா
குடும்பத்தினருடன் சுஜிதா

காலேஜ் லைஃப் மாதிரி ஒரே குழுவினருடன் சில வருஷங்கள் வேலை செய்ற சீரியல் நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. மாதச் சம்பள வாழ்க்கை முறை மாதிரி, சீரியல் நடிப்பு எனக்கு ரொம்பவே செட் ஆகிடுச்சு. போன வருஷம் லாக்டெளன் தளர்வுகளுக்குப் பிறகு நடிக்க வந்தப்போ ரொம்பவே பயம் இருந்துச்சு. எங்க டீம்ல ஹேமா கர்ப்பமா இருந்தா. என்னோட தங்கச்சியும் அப்போ கர்ப்பமா இருந்தா. என் பையன் குழந்தையா இருக்கான். ஷூட்டிங் வந்துட்டுப் போகும் என்னால, குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்படுமோனு தினமும் பயந்தேன்.

படப்பிடிப்பை நம்பி நிறைய குடும்பங்கள் இருக்கிறதால, வேறு வழியில்லாம சிரமங்களைப் பொறுத்துகிட்டோம். நெருங்கி நடிக்கிற காட்சிகளைத் தவிர்த்தோம். வேறு வழி இல்லாம, சில காட்சிகள்ல மிக அவசியமான சில நடிகர்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்துகிட்டோம். மேக்கப் போனா பரவாயில்லைனு, நடிக்காத நேரம் மாஸ்க் போட்டுப்பேன். பயன்படுத்துற பொருள்களை அடிக்கடி துடைச்சுகிட்டே இருப்பேன். பிரமை பிடிச்ச மாதிரியேதான் பலரும் ஷூட்டிங் வந்துட்டுப் போனோம். இப்போ கொரோனா ரெண்டாவது அலையின் பரவல் அதிகமா இருக்கிறதால மறுபடியும் பயம் அதிகரிச்சிருக்கு.

குடும்பத்தினருடன் சுஜிதா
குடும்பத்தினருடன் சுஜிதா

என்னோட பையன் தன்வின் ரெண்டாவது படிக்கிறான். `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலோட தெலுங்கு வெர்ஷனலயும் நடிக்கிறேன். மாசத்துல ஏழெட்டு நாள்கள்தான் எனக்கு லீவ் கிடைக்கும். அதனால, ஹோம்வொர்க் செய்ற நேரத்துல அவனுக்கு என்னால உதவ முடியுறதில்ல. அந்த நேரத்துல அவன் என்னை ரொம்பவே மிஸ் பண்றான். நான் இல்லாத நேரத்துல அவனை என் கணவர் கவனிச்சுக்கிறார்" என்று முடித்தார் சுஜிதா.