Published:Updated:

`சொந்தத் தங்கச்சி வித்யாவோட இறப்பு நிச்சயம் விஜய்யை பாதிச்சிருக்கும்!'- விஜய்யின் சித்தி ஷீலா

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷீலா

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஷீலா. இவர் நடிகர் விக்ராந்தின் அம்மா ; நடிகர் விஜய்யின் சித்தி. சிறுவயது விஜய், விக்ராந்த் குறித்து பல விஷயங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

Published:Updated:

`சொந்தத் தங்கச்சி வித்யாவோட இறப்பு நிச்சயம் விஜய்யை பாதிச்சிருக்கும்!'- விஜய்யின் சித்தி ஷீலா

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஷீலா. இவர் நடிகர் விக்ராந்தின் அம்மா ; நடிகர் விஜய்யின் சித்தி. சிறுவயது விஜய், விக்ராந்த் குறித்து பல விஷயங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷீலா

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஷீலா. பாக்கியலட்சுமி, பாரதிதாசன் காலனி போன்ற தொடர்களிலும் இவர் நடித்திருந்தார். இவர் நடிகர் விக்ராந்தின் அம்மா ; நடிகர் விஜயின் சித்தி. ஒரு காலைப்பொழுதில் அவருடைய இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசினோம்.

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷீலா
`பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷீலா

"என் மகன் விக்ராந்தும் நானும் ஒரே டைம்ல தான் மீடியாவுக்குள்ள வந்தோம். அதுக்கப்புறம் கொஞ்சம் பிரேக் எடுத்துட்டேன். ரெண்டு பசங்களுக்கும் கல்யாணம் எல்லாம் பண்ணி நம்ம கடமை எல்லாம் முடிஞ்ச பிறகு வீட்டுல சும்மா உட்கார்ந்து இருக்க போர் அடிச்சது. எல்லார் மாதிரியும் நான் சீரியலுக்கு வர முக்கியக் காரணம் குட்டி பத்மினி தான். அவங்க தான் சீரியல் உலகிற்குள் என்னை அழைச்சுட்டுப் போனாங்க. அதிலிருந்து தொடர்ந்து சீரியல்களில் நடிச்சிட்டு இருக்கேன்" என்றவரிடம் நடிகர் விஜய் குறித்துக் கேட்டோம்.

"விஜய் பிறக்கும்போது நான் பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். எங்க குடும்பத்தில் முதல் குழந்தை அவர் தான். அப்ப நாங்க எல்லாரும் ஒண்ணா தான் இருந்தோம். நாங்க வளரும் போது எங்க கூடவே விஜய்யும் வளர்ந்தாரு. விஜய் கைக் குழந்தையா இருந்தப்ப அவரைக் குளிப்பாட்ட அம்மா, அக்காலாம் பயப்படுவாங்க. நான் தான் குளிப்பாட்டுவேன். அது என்னவோ சின்னக் குழந்தைங்களை குளிப்பாட்ட எனக்கு சுலபமா இருக்கும். அவரை நான் தான் குளிப்பாட்டுவேன்.

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷீலா
`பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷீலா

சின்ன வயசுல இருந்தே விஜய் ரொம்ப அமைதியான பையன்தான். ஸ்கூலில் பொதுவா பசங்க சேட்டை பண்றாங்கன்னு கம்ப்ளைன்ட் பண்ணுவாங்க.. அது அந்தப் பருவத்தில் ரொம்ப நார்மலா நடக்குறதுதானே.. அப்படி கூட எந்தக் கம்ப்ளைன்ட்டும் விஜய் மேல வந்ததில்ல. விஜய்யும் என் பசங்களும் ரொம்ப க்ளோஸ் ஆக இருப்பாங்க. எப்பவும் அக்கா வீட்ல தான் என் பசங்க இருப்பாங்க. அந்த பாண்டிங் இப்ப வரைக்கும் இருக்கு!

நான் பர்சனலா விஜயைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அவர்கிட்ட பேச முடியல. ரொம்ப பிசியா இருக்கார். இப்ப அவர் மிகப்பெரிய உயரத்துல இருக்கார். அதைப் பார்க்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஆனாலும், நான் விஜயை ரொம்ப மிஸ் பண்றேன்!" என்றவர் தொடர்ந்து பேசினார்.

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷீலா
`பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷீலா

"வித்யா இறந்து போகும்போது நாங்க எல்லாருமே கூடவே தான் இருந்தோம். மூன்று வயசாகும்போது அவ இறந்துட்டா. அப்போதெல்லாம் இந்த அளவுக்கு மெடிக்கல் அட்வான்ஸா இல்லை. நல்ல அழகா இருப்பா... சூப்பரா பாட்டு பாடுவா.. கண்ணு முன்னாடி நடந்த சொந்தத் தங்கச்சியோட இழப்பு நிச்சயம் அவரை பாதிச்சிருக்கும். விஜய் அதுக்கப்புறம் கொஞ்சம் டல் ஆகிட்டாரு" என்றவரின் குடும்பம் குறித்துக் கேட்டோம்.

"எங்க ஃபேமிலி மீடியா குடும்பம். என் கணவரும், மூத்த மருமகளும் மட்டும் தான் மீடியாவைச் சேர்ந்தவங்க இல்ல. உதயகுமார் சார் தான் சந்தோஷை விக்ராந்த் ஆக மாற்றினார். அவரை ஃபீல்டுக்குள்ள கொண்டு வந்ததுக்கு முதலில் அவருக்குத்தான் நன்றி சொல்லிக்கணும். டிகிரி முடிச்சதும் விக்ராந்த்தை பீல்டுக்குள்ள கொண்டு வரலாம்னு நினைச்சேன். அவங்க அப்பாவுக்கு விக்ராந்த் கிரிக்கெட்டில் சாதிக்கணும்னு ஆசை. ரொம்ப நல்லா கிரிக்கெட் ஆடிட்டு இருந்தார். அப்ப கிரிக்கெட் வேற மாதிரி இருந்துச்சு. அவரே ஆக்டிங் போறேன்னு செலக்ட் பண்ணார். சின்ன வயசுலயே நடிக்க வர்றார் மக்கள் ஏத்துக்கணும் ; லக் வேணும்னு நினைச்சேன். அவரை மக்கள் ஏத்துக்கிட்டாங்க. இப்ப வரைக்கும் இன்டஸ்ட்ரியில் அவருக்கு நல்ல பெயர் இருக்கு.

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷீலா
`பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷீலா

ஆரம்பத்தில் விஜய் நடிக்க வந்ததே எங்களுக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்துச்சு. அவர் நடிக்கப் போவார்னு நாங்க யாருமே எதிர் பார்க்கல. அவர் டான்ஸ் ஆடுறதைப் பார்க்கும்போதெல்லாம் நம்ம விஜய் தானா இது? இப்படி சூப்பரா டான்ஸ் ஆடுறாரேன்னு தோணும். விஜய் டான்ஸ் கிளாஸூக்கெல்லாம் போனதே இல்ல. ஆனாலும் பாருங்க எவ்ளோ சூப்பரா ஆடுறார். கண்டிப்பா இதெல்லாமே ஆசிர்வாதம் தான்! சமீபத்தில் வருகிற படங்களில் விஜயை அதிகமா பிடிச்சிருக்கு. ரொம்ப ஸ்மார்ட் ஆக இருக்கார்.

இப்ப சீரியல் பண்றவங்க சினிமாவும் பண்றாங்க. எனக்குக் கூட விஜய் படத்துல நடிக்கணும்னு ஆசை. இது மூலமா விஜய் பார்த்து, `சித்தி வாங்க உங்களுக்கு படத்துல ஒரு கேரக்டர் இருக்கு!'னு கூப்பிட்டார்னா உடனே போயிடுவேன். அதுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்!" என்றார்.

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷீலா
`பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஷீலா

பர்சனல், புரொபஷனல் உட்பட பல விஷயங்கள் குறித்து ஷீலா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!