Published:Updated:

பட்டிமன்றப் புகழ் பாரதி பாஸ்கர் அப்பல்லோவில் அனுமதி... திடீர் உடல்நலக் குறைபாடு!

பாரதி பாஸ்கர்

சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் முக்கிய பேச்சாளராகத் தொடர்ந்து பேசிவருபவர் பாரதிபாஸ்கர். இவர் உலகின் முன்னணி தனியார் வங்கியில் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

பட்டமன்றத்தின் மூலம் உலகத் தமிழர்களிடையே புகழ்பெற்றவர் பாரதி பாஸ்கர். கெமிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எம்பிஏ படித்திருக்கும் இவர் உலகின் முன்னணி தனியார் வங்கியில் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். வங்கி பணிகளுக்கிடையே சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து தொடர்ந்து பேசிவந்தார் பாரதி பாஸ்கர்.

பாரதி பாஸ்கர் - ராஜா இருவரின் பேச்சுக்குதான் அதிக பாராட்டுகள் கிடைக்கும். பாரதி பாஸ்கர் கொடுக்கும் ஒவ்வொரு கவுன்ட்டரும் அவ்வளவு ரசிக்கவைக்கும். கடந்த இருவாரங்களுக்கு முன்பு சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் மூவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்திருந்தார்கள்.

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரை சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என முதல் தகவல்கள் வருகின்றன.

பாரதி பாஸ்கர் விரைவில் நலம்பெற்று மீண்டு வருவார் என்கிறார்கள் அவரது நண்பர்கள்.