Published:Updated:

Bigg Boss: `அநாவசியமாக யாரிடமும் பேச மாட்டேன்' பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் `பாவம் கணேசன்' நேஹா

நேஹா

சன் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணப் பரிசு' தொடரின் மூலம் நம்மிடையே அறிமுகமானவர் நேஹா. தற்போது அவர் பிக்பாஸில் என்ட்ரியாகி இருக்கிறார்.

Bigg Boss: `அநாவசியமாக யாரிடமும் பேச மாட்டேன்' பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் `பாவம் கணேசன்' நேஹா

சன் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணப் பரிசு' தொடரின் மூலம் நம்மிடையே அறிமுகமானவர் நேஹா. தற்போது அவர் பிக்பாஸில் என்ட்ரியாகி இருக்கிறார்.

Published:Updated:
நேஹா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'பாவம் கணேசன்'. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேஹா ராமகிருஷ்ணா இந்தத் தொடரில் கதாநாயகியாகவும், `கலக்கப்போவது யாரு' நவீன் கதாநாயகனாகவும் நடித்து வந்தனர். சன் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணப் பரிசு' தொடரின் மூலம் நம்மிடையே அறிமுகமானவர் நேஹா.

நேஹா
நேஹா

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `பிக்பாஸ் கன்னடா சீசன் 9'-ல் நேஹா ஒரு போட்டியாளராக களம் இறங்கியிருக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாக இது குறித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில்,

` பல அழகான நினைவுகளை பிக்பாஸ் வீட்டினுள் சேகரித்துக் கொள்ளப் போகிறேன். பேசுறதைத் திரிச்சு பேசும் பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. நெகட்டிவாகவோ, அநாவசியமாகவோ யாரிடமும் பேச மாட்டேன். இங்கு ஒன்னும் அங்கு ஒன்னுமாக பேச மாட்டேன்!' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நேஹா
நேஹா

நேஹா திருமணமாகி கணவருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். சீரியலில் சாந்தமானவராகவே இவரைப் பார்த்திருக்கிறோம். பிக்பாஸ் வீட்டினுள் அவர் எப்படி இருப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

`பாவம் கணேசன்' தொடரில் நடித்த நவீன் உட்பட பல நடிகர்கள் நேஹாவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

நேஹா
நேஹா

விஜய் டிவியில் நடித்துக் கொண்டிருந்த நாயகி கன்னட பிக்பாஸில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். விரைவிலேயே விஜய் டிவியில் ஆரம்பமாக இருக்கும் தமிழ் பிக்பாஸில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என தமிழ் பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். தமிழ் பிக் பாஸில் சீரியல் நடிகர்கள் யார் கலந்துகொள்ள வேண்டும் என நீங்கள் விரும்பும் நடிகர்களின் பெயர்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்.