Published:Updated:

ரொம்பப் பிடிக்கும்!

ஆர்த்தி சுபாஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்த்தி சுபாஷ்

எப்பொழுதும் எம்.ஜி.ஆர். இறந்தும் எப்படி அவர் மக்கள் மனசுல வாழ்ந்துட்டு இருக்கார்னு தோணும்!

ரொம்பப் பிடிக்கும்!

எப்பொழுதும் எம்.ஜி.ஆர். இறந்தும் எப்படி அவர் மக்கள் மனசுல வாழ்ந்துட்டு இருக்கார்னு தோணும்!

Published:Updated:
ஆர்த்தி சுபாஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்த்தி சுபாஷ்

இந்தச் சின்னத்திரைப் பிரபலங்களின் பர்சனல் ஃபேவரைட் குறித்துத் தெரிந்துகொள்ள அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ரொம்பப் பிடிக்கும்!

ராஜ்கமல், நடிகர்

பிடித்த தலைவர் - எப்பொழுதும் எம்.ஜி.ஆர். இறந்தும் எப்படி அவர் மக்கள் மனசுல வாழ்ந்துட்டு இருக்கார்னு தோணும்!

சமீபத்தில் வாங்கிய பொருள் - சொந்தமா ஷூட்டிங் ஹவுஸ் கட்டணும். அந்த வீட்டின் மூலமா பலருக்கும் நல்லது நடக்கணும்னு நினைச்சு கடன் வாங்கி அந்த வீடு கட்டினோம். அதற்காக வாங்கிய கடனைத்தான் இப்ப மும்முரமா அடைச்சிட்டு இருக்கோம். இன்னும் மூணு வருஷத்துக்கு எனக்குத் தெரிஞ்சு எதுவும் வாங்க மாட்டோம்னு நினைக்கிறேன்.

நீங்க ஃபாலோ பண்ற டயட் - புராஜெக்ட் பொறுத்துதான் டயட் ஃபாலோ பண்ணுவேன். இப்ப ‘அபியும் நானும்' தொடரில் ‘நீங்க எப்படி இருப்பீங்களோ அப்படியே இருங்க’ன்னு சொன்னாங்க. அதனால டயட் எதுவும் ஃபாலோ பண்ணல.

பிடித்த ஸ்நாக்ஸ் - கார்ன் பப்ஸ் ரொம்பப் பிடிக்கும்!

பிடித்த காமெடி நடிகர் - நாகேஷ் ஐயா... அவர் உருவம் எளிமையா இருந்தாலும் அவர் பண்ற காமெடி, அவரோட பாடி லாங்குவேஜ் எல்லாம் வாய்ப்பே இல்லைங்க. அதே மாதிரி கவுண்டமணி அண்ணனும் என் ஃபேவரைட்.

உங்களுடைய பிளஸ் - எத்தனை கஷ்டம் வந்தாலும் சிரிச்சிட்டே கடந்து போயிடணும்ங்கிற எண்ணம், எல்லார்கிட்டேயும் எந்த ஈகோவும் இல்லாமப் பழகும் குணம்!

ஆர்த்தி சுபாஷ்
ஆர்த்தி சுபாஷ்

ஆர்த்தி சுபாஷ், நடிகை

பிடித்த தலைவர் - பெரியார்

சமீபத்தில் வாங்கிய பொருள் - மேக்கப் பாக்ஸ்

நீங்க ஃபாலோ பண்ற டயட் - அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க!

பிடித்த ஸ்நாக்ஸ் - நான் வெஜ்ல எல்லாமே ரொம்பப் பிடிக்கும்

பிடித்த காமெடி நடிகர் - வடிவேலு!

உங்களுடைய பிளஸ் - எங்க போனாலும், அங்க இருக்க சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி எல்லா இடங்களிலும் ஜெல் ஆகிடுவேன்!

ரொம்பப் பிடிக்கும்!

பார்வதி, நடிகை

பிடித்த தலைவர் - ஐயா ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

சமீபத்தில் வாங்கிய பொருள் - கார்

நீங்க ஃபாலோ பண்ற டயட் - சாயங்காலம் கிரீன் டீ குடிக்கிறதை வழக்கமா வச்சிருக்கேன்.

பிடித்த ஸ்நாக்ஸ் - Any Dessert

பிடித்த காமெடி நடிகர் - எப்பவும் மனசு விட்டு சிரிக்க வைக்கிற நாகேஷ், வடிவேலு.

உங்களுடைய பிளஸ் - என்னோட பொறுமை