
எல்லோரையும் மாதிரிதான். என் பர்ஸில் முக்கியமான ஆவணங்கள் எப்பவும் இருக்கும்!
இந்தச் சின்னத்திரை பிரபலங்களின் பர்சனல் ஃபேவரைட் குறித்துத் தெரிந்துகொள்ள அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

வெங்கட், நடிகர்
பிடித்த ஊர் - சுவிட்சர்லாந்து
பிடித்த விளையாட்டு - செஸ், பேட்மின்டன்
பிடித்த பாடகி - ஸ்வேதா மேனன், ஸ்ரேயா கோஷல்
மறக்கமுடியாத ட்ரிப் - மாலத்தீவு
கைப்பையில் வைத்திருக்கும் முக்கியமான பொருள் - எல்லோரையும் மாதிரிதான். என் பர்ஸில் முக்கியமான ஆவணங்கள் எப்பவும் இருக்கும்!
பிடித்த டூவீலர் - டி.வி.எஸ் அப்பாச்சி

மெளனிகா, நடிகை
பிடித்த ஊர் - சித்தூர், ஆந்திரா
பிடித்த விளையாட்டு - த்ரோ பால்
பிடித்த பாடகி - சித்ராம்மா
மறக்கமுடியாத ட்ரிப் - ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் போயிருந்தேன். அந்த ட்ரிப் ரொம்பப் பிடிச்சிருந்தது.
கைப்பையில் வைத்திருக்கும் முக்கியமான பொருள் - மொபைல் சார்ஜர்
பிடித்த டூவீலர் - வெஸ்பா (Vespa)

நீலிமா ராணி, நடிகை
பிடித்த ஊர் - தஞ்சாவூர்
பிடித்த விளையாட்டு - கிரிக்கெட்
பிடித்த பாடகி - ஸ்வர்ணலதா
மறக்கமுடியாத ட்ரிப் - கேதார்நாத், பத்ரிநாத் போயிருந்தேன். அந்த ட்ரிப் ரொம்பவே ஸ்பெஷல்.
கைப்பையில் வைத்திருக்கும் முக்கியமான பொருள் - ஐடி கார்டு, டெபிட் கார்டு.
பிடித்த டூவீலர் - எலெக்ட்ரிக் பைக்