
பிடித்த துணைக் கதாபாத்திரம் - நான் ஆங்கர் என்பதால் என்னுடன் கோ ஆங்கராக இருக்கிறவங்களைத்தான் பிடித்த துணைக் கதாபாத்திரமாகக் கருதுகிறேன்.

இந்தப் பிரபலங்களிடம் அவர்களுடைய ஃபேவரைட் பக்கங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள சில கேள்விகளை முன்வைத்தோம்.
அர்ச்சனா, தொகுப்பாளினி
ஃபேவரைட் கேம் - பரமபதம். அது நம்முடைய வாழ்க்கைப் பாடம் இல்லையா..? இப்ப வரைக்கும் நானும் என் மகளும் அந்த கேம்தான் விளையாடுவோம்.
பிடித்த கலர் - கறுப்பு
சமீபத்தில் பார்த்து வியந்த திரைப்படம் - ‘ஹோம்’ என்கிற மலையாளத் திரைப்படம். அந்தத் திரைக்கதை ரொம்ப உண்மையாக இருந்தது.

மறக்க முடியாத பாராட்டு - என் வாழ்நாள் முழுவதும் நான் பொக்கிஷமாக நினைத்துப் பெருமைப்படும் தருணம்னா அது சூப்பர் ஸ்டாரிடமிருந்து கிடைத்த பாராட்டு. அவரை நான் பேட்டி எடுத்திருந்தேன். அந்தப் பேட்டி முடிந்த பிறகு அவர் எனக்கு தீபாவளி வாழ்த்துகள் சொல்லி அவர் வீட்டுக்கு எங்க ஒட்டுமொத்த டீமையும் கூப்பிட்டிருந்தார். சொந்தத் தந்தையைப்போல அவ்வளவு அன்பா பல விஷயங்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டார். அவர்கிட்ட இருந்து கிடைச்ச அந்த ஒரு பாராட்டு எப்பவுமே என்னால மறக்க முடியாது!
பிடித்த துணைக் கதாபாத்திரம் - நான் ஆங்கர் என்பதால் என்னுடன் கோ ஆங்கராக இருக்கிறவங்களைத்தான் பிடித்த துணைக் கதாபாத்திரமாகக் கருதுகிறேன். அப்படி என்னுடன் சேர்ந்து பல ஆண்டுகள் ஆங்கரிங் பண்ணின சிட்டிபாபு சார் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தீபக், ஆர்.ஜே விஜய்யும் அதில் அடக்கம்!

விஷால், நடிகர்
ஃபேவரைட் கேம் - கிரிக்கெட்
பிடித்த கலர் - ஊதா, கறுப்பு
சமீபத்தில் பார்த்து வியந்த திரைப்படம் - ராக்கெட்ரி
மறக்க முடியாத பாராட்டு - என் அம்மா, அப்பா எப்பவும் சீரியல் பற்றிப் பாராட்ட மாட்டாங்க. ஒரு முறை ‘டி.வி-யில் உன் நடிப்பைப் பார்த்து நானும், அப்பாவும் அழுதுட்டோம்’னு அம்மா சொன்னாங்க. வீட்ல அவ்வளவு சுலபமா பாராட்ட மாட்டாங்க. அப்படி அவங்ககிட்ட இருந்து கிடைச்ச பாராட்டுதான் ரொம்ப ஸ்பெஷல்!
பிடித்த துணைக் கதாபாத்திரம் - ‘காலா’ படத்தில் நடித்திருந்த மணிகண்டனை ரொம்பப் பிடிக்கும். தொடர்ந்து அவர் நடிச்ச எல்லாப் படங்களிலும் சூப்பரா பண்ணிட்டு இருக்கார்.

விஷ்ணு, நடிகர்
ஃபேவரைட் கேம் - கிரிக்கெட்
பிடித்த கலர் - ஊதா
சமீபத்தில் பார்த்து வியந்த திரைப்படம் - கே.ஜி.எப் 2
மறக்க முடியாத பாராட்டு - சிறந்த நடிகருக்காக ஜீ தமிழில் விருது வாங்கினேன். அந்தப் புகைப்படத்தை எனது கரியரில் முக்கியமான நபர்களான பிரதீப் சாருக்கும், ரமணகிரி வாசன் அவர்களுக்கும் அனுப்பியிருந்தேன். அதைப் பார்த்துட்டு ரெண்டு பேரும் பெருமைப்பட்டாங்க. ‘நான் அறிமுகப்படுத்தின பையன்’ என்கிற பெருமிதத்தை ரெண்டு பேருடைய கண்களிலும் பார்த்தேன். அவங்களைப் பெருமைப்பட வச்சதைத்தான் மிகப்பெரிய பாராட்டாக நினைக்கிறேன்.
பிடித்த துணைக் கதாபாத்திரம் - ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ரெண்டு பேருடைய நடிப்பும் ரொம்பப் பிடிச்சிருந்தது.