சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

ஐஸ்வர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
ஐஸ்வர்யா

இதுவரை கடல்வழிப் பயணம் செய்ததில்லை. சீக்கிரமே போயிட்டு சொல்றேன்.

இந்தப் பிரபலங்களிடம் அவர்களுடைய ஃபேவரைட் பக்கங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள சில கேள்விகளை முன்வைத்தோம்.

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

ஐஸ்வர்யா, நடிகை

பிடித்த ஸ்வீட் - பாசுந்தி, குலோப்ஜாமூன், பால்கோவா பிடிக்கும்.

ரிப்பீட் மோடில் கேட்கும் பாடல் - ‘குரு’ படத்தில் வரும் ஆருயிரே பாட்டு, ‘மதராசப்பட்டினம்’ படத்தில் வருகிற ‘பூக்கள் பூக்கும் தருணம்’ பாடல்... அப்புறம், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ‘விசிறி’ பாடல்

பிடித்த இசைக்கருவி - புல்லாங்குழலின் இசையைக் கேட்க ரொம்பப் பிடிக்கும்.

ஃபேவரைட் ஸ்போர்ட்ஸ் - பேட்மின்டன்.

பிடித்த கடல்வழிப் பயணம் - இதுவரை கடல்வழிப் பயணம் செய்ததில்லை. சீக்கிரமே போயிட்டு சொல்றேன்.

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

சரவண விக்ரம், நடிகர்

பிடித்த ஸ்வீட் - பால் கோவா, மைசூர்ப்பாகு.

ரிப்பீட் மோடில் கேட்கும் பாடல் - ‘நானே வருவேன்’ ஆல்பம், ‘வெந்து தணிந்தது காடு’ ஆல்பம் கேட்டுட்டே இருக்கேன்.

பிடித்த இசைக்கருவி - கிட்டார் ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில்தான் கறுப்பு நிற கிட்டார் வாங்கி என் ஆபீஸ் ரூமில் வச்சிருக்கேன். சீக்கிரம் வாசிக்கக் கத்துக்கணும்.

ஃபேவரைட் ஸ்போர்ட்ஸ் - கபடி விளையாடுறது ரொம்பப் பிடிக்கும்.

பிடித்த கடல்வழிப் பயணம் - இதுவரைக்கும் அப்படி டிராவல் பண்ணினது இல்ல. ஆனா, பெரிய கப்பலில் நீண்ட தூரம் கடல்வழிப் பயணம் பண்ணணும்னு ஆசை இருக்கு.

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

அஸ்ரிதா, நடிகை

பிடித்த ஸ்வீட் - காஜூ கத்லி

ரிப்பீட் மோடில் கேட்கும் பாடல் - ‘அபியும் நானும்’ படத்தில் வருகிற ‘வா வா என் தேவதையே’ பாடல்.

பிடித்த இசைக்கருவி - புல்லாங்குழல்.

ஃபேவரைட் ஸ்போர்ட்ஸ் - பேட்மின்டன்.

பிடித்த கடல்வழிப் பயணம் - இதுவரைக்கும் அப்படியான அனுபவம் கிடைக்கல. ஆனா, படகில் பயணம் செய்ய ரொம்பப் பிடிக்கும்.