கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: டிரீம் ஹவுஸ் கட்டணும்

தீபக், மீரா கிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
News
தீபக், மீரா கிருஷ்ணா

ரொம்பப் பிடிக்கும்!

சின்னத்திரை நடிகர்களின் ஃபேவரைட் பக்கங்கள்!

தீபக்
தீபக்

தீபக், நடிகர்

பிடித்த காமெடி திரைப்படம் - என்றென்றும் புன்னகை.

ஃபேவரைட் காலர் டியூன் - தாண்டவம் திரைப்படத்தில் வருகிற பி.ஜி.எம்.

பிடித்த ரோட்டுக்கடை உணவு - இட்லி, சாம்பார்.

ஃபேவரைட் ஷாப்பிங் ஏரியா - தி.நகர்.

நீண்ட நாள்களாக வாங்க ஆசைப்படும் பொருள் - பிளே ஸ்டேஷன்.

சம்யுதா
சம்யுதா

சம்யுதா, நடிகை

பிடித்த காமெடி திரைப்படம் - ப்ரண்ட்ஸ்

ஃபேவரைட் காலர் டியூன் - எம்.எஸ். தோனி திரைப்படத்தில் வருகிற ‘கொஞ்சம் உன் காதலால்’ பாட்டு என் ஃபேவரைட்.

பிடித்த ரோட்டுக்கடை உணவு - கொத்து பரோட்டா.

ஃபேவரைட் ஷாப்பிங் ஏரியா - மாலில்தான் அதிகம் ஷாப்பிங் பண்ணுவேன்.

நீண்ட நாள்களாக வாங்க ஆசைப்படும் பொருள் - சின்ன வயசில இருந்தே ஹூண்டாய் i20 கார் ரொம்பப் பிடிக்கும். அந்தப் பழைய மாடல் இப்ப நிறுத்திட்டாங்க. புதுசா வந்திருக்கிற மாடல் எனக்குப் பிடிக்கலை. அதனால அந்த ஆசை அப்படியே நின்னுடுச்சு.

மீரா கிருஷ்ணா
மீரா கிருஷ்ணா

மீரா கிருஷ்ணா, நடிகை

பிடித்த காமெடி திரைப்படம் - வில்லு, ப்ரண்ட்ஸ், மைக்கேல் மதன காமராஜன்னு நிறைய காமெடி படங்கள் பிடிக்கும்.

ஃபேவரைட் காலர் டியூன் - ‘கபி கபி மேரே தில் மே’ ரீமிக்‌ஸ் ஆல்பம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த காலர் டியூன் ரொம்ப நாளா வச்சிருந்தேன்.

பிடித்த ரோட்டுக்கடை உணவு - தி.நகரில் ஒரு ரோட்டுக்கடை இருக்கு. அங்க ரொம்ப சுவையா நிறைய வெரைட்டி டிஷ் இருக்கும். அதே மாதிரி, எக்மோர் பக்கம் தட்டு இட்லிக் கடை இருக்கும். அதுவும் என் ஃபேவரைட்.

ஃபேவரைட் ஷாப்பிங் ஏரியா - பாண்டி பஜார், தி.நகர்

நீண்ட நாள்களாக வாங்க ஆசைப்படும் பொருள் - சொந்தமா என்னோட டிரீம் ஹவுஸ் கட்டணுங்கிறதுதான் நீண்ட நாள் ஆசை.