சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

ரிஹானா
பிரீமியம் ஸ்டோரி
News
ரிஹானா

நான் முஸ்லிமாக இருந்தாலும் எல்லாக் கோயிலுக்கும் போகிற பழக்கம் உண்டு.

சின்னத்திரை பிரபலங்களின் ஃபேவரைட் பக்கங்கள்!

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

பிரவீன் ராஜ் தேவசகாயம், நடிகர்

பிடித்த விளையாட்டு - எனக்கு சமையல் ரொம்பப் பிடிக்கும். என்னோட ஃப்ரீ டைம்ல அதிகமா சமைக்கத்தான் ஆசைப்படுவேன். அதனால எனக்குப் பிடிச்ச விளையாட்டே சமையல் தான்!

ஃபேவரைட் சாக்லேட் - KitKat

பிடித்த கோயில் - எனக்கு எல்லாக் கடவுள்களின் மீதும் நம்பிக்கை உண்டுங்கிறதனால அப்படிக் குறிப்பிட்டு சொல்ல முடியல!

சமீபமாக முணுமுணுக்கும் பாடல் - ‘காந்தாரா’ பாடல்கள் ரொம்பப் பிடிச்சிருக்கு.

ஃபேவரைட் மேக்கப் புராடக்ட் - Cheek tint

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

ரிஹானா, நடிகை

பிடித்த விளையாட்டு - அப்படி குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவுமில்லை.

ஃபேவரைட் சாக்லேட் - Dairy Milk

பிடித்த கோயில் - நான் முஸ்லிமாக இருந்தாலும் எல்லாக் கோயிலுக்கும் போகிற பழக்கம் உண்டு. குறிப்பிட்டுச் சொல்லணும்னா வடபழனியில் ஒரு சிவன் கோயில் இருக்கு. அந்தக் கோயில் ரொம்பப் பிடிக்கும்.

சமீபமாக முணுமுணுக்கும் பாடல் - `உள்ளம் கொள்ளை போகுதடா' சீரியலில் வருகிற `உள்ளம் கொள்ளை போகுதடா' பாட்டு. சமீபமா பாடிட்டிருக்கேன்.

ஃபேவரைட் மேக்கப் புராடக்ட் - மேக் லிப்ஸ்டிக்

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

ரத்னா, செய்தி வாசிப்பாளர்

பிடித்த விளையாட்டு - பாஸ்கட் பால்

ஃபேவரைட் சாக்லேட் - சாக்லேட் அதிகம் சாப்பிட மாட்டேன். ஸ்வீட்ல கேரட் அல்வா ரொம்பப் பிடிக்கும்.

பிடித்த கோயில் - திருவண்ணாமலையிலுள்ள ரமணாஸ்ரமம்

சமீபமாக முணுமுணுக்கும் பாடல் - ‘சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ’, ‘பொன்மாலைப் பொழுது’, ‘பொட்டு வைத்த முகமோ’ போன்ற பழைய பாடல்கள் தான் என் ஃபேவரைட்.

ஃபேவரைட் மேக்கப் புராடக்ட் ஐ லைனர்.