கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

மகாலிங்கம், தியா, மிர்ச்சி விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
மகாலிங்கம், தியா, மிர்ச்சி விஜய்

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு... அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு... பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு..

சின்னத்திரை பிரபலங்களின் ஃபேவரைட் பக்கங்கள்!

மகாலிங்கம்
மகாலிங்கம்

மகாலிங்கம், பாடகர்

பிடித்த திரைப்படம் - அழகி

மறக்க முடியாத கிஃப்ட் - என் மனைவி கொடுத்த அரைஞாண் கயிறு.

உங்களுடைய முதல் சம்பளம் - டீக்கடையில் வேலை பார்த்தப்ப ஒருநாள் சம்பளமாக 15 ரூபாய் வாங்கினேன்.

பிடித்த பாடல் வரி - ஊருக்காக வாழும் கலைஞன் தன்னை மறப்பான்... தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்!

பிடித்த வாட்ச் - ரோலக்ஸ் வாட்ச் எடுக்கணும்னு ஆசை. அது என்கிட்ட இல்ல, ஆனா வாங்கணும்னு நினைச்சிருக்கேன்.

தியா
தியா

தியா, தொகுப்பாளினி

பிடித்த திரைப்படம் - மெளனராகம்

மறக்க முடியாத கிஃப்ட் - ஐ ஃபோன் 6 பிளஸ் எனக்கு கிஃப்ட்டாக வந்தது. அது ரொம்பவே ஸ்பெஷல்.

உங்களுடைய முதல் சம்பளம் - 5,000 ரூபாய்

பிடித்த பாடல் வரி - சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு... அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு... பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு... அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு!

பிடித்த வாட்ச் - Michael Kors

தியா
தியா

மிர்ச்சி விஜய், தொகுப்பாளர்

பிடித்த திரைப்படம் - நிறைய திரைப்படங்கள் இருக்கு. மின்சார கனவு, 7ஜி ரெயின்போ காலனி, எஸ் எம் எஸ், சென்னை 28, என்றென்றும் புன்னகை போன்ற படங்களை அடிக்கடி பார்ப்பேன்.

மறக்க முடியாத கிஃப்ட் - என் மனைவி எனக்கு ஒரு வாட்ச் கிஃப்ட் பண்ணினாங்க. அந்த வாட்ச்சுக்கு பின்னாடி நாங்க மீட் பண்ணின டேட், பிறந்த நாள் எல்லாம் குறிப்பிட்டுக் கொடுத்திருந்தாங்க. அது ரொம்பவே ஸ்பெஷல்.

உங்களுடைய முதல் சம்பளம் - 5,000 ரூபாய்

பிடித்த பாடல் வரி - ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நான் எழுதின விழி பேசும் பாடலில் வருகிற, ‘உன்னை அன்பில் மிஞ்சும் ஒருத்தி பூமியில் வருவா... தந்தை என்று சொல்லி முத்தமும் தருவா!’ என்கிற வரி ரொம்பப் பிடிக்கும். பல பெண் குழந்தைகளுடைய தந்தைகள் என்கிட்ட ‘அந்த வரி ரொம்ப நல்லா இருக்கு’ன்னு சொல்லிப் பாராட்டினாங்க. அது ரொம்பவே ஸ்பெஷல்!

பிடித்த வாட்ச் - குறிப்பிட்ட பிராண்ட்னு எதுவும் இல்லைங்க!