Published:Updated:

``கல்யாணமே இல்ல... `Love Exchange'-னு வனிதா சொல்றது பொய்!'' - பீட்டர் மனைவி எலிசபெத்

வனிதா
வனிதா

வனிதாவின் திருமணம்தான் தற்போது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. வனிதா - பீட்டர் பால் திருமணம் சட்டத்துக்குப் புறம்பானது எனப் புகார் கொடுத்திருக்கிறார் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத். அவரிடம் பேசினேன்.

''வனிதாவை ஒரு செலிபிரிட்டியாதான் எங்களுக்குத் தெரியும். அவங்ககிட்ட பேசினதோ, பழகினதோ கிடையாது. இந்தக் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி என் பையனைப் பார்க்கணும்னு அவர்கிட்ட வனிதா சொல்லியிருக்காங்க. அதனால, என் பையனை மட்டும் அவர் கூட்டிட்டுப் போயிருக்கிறார். ஒரு சினிமா பிரபலத்தைப் பார்க்குறோம்கிற ஆசையில என் பையனும் போயிட்டு வந்திருக்கான். அப்போ வனிதாவை ஆன்ட்டினு கூப்பிட்டிருக்கான். 'ஏன்.. ஆன்ட்டினு சொல்ற..? நான் உனக்கு ஆன்ட்டி இல்ல'னு வனிதா சொல்லவும், அப்போ அக்கானு கூப்பிடுறேன்னு பையன் பதில் சொல்லியிருக்கான். இதுவரைக்கும் என் பையன் வனிதாவை அக்கானுதான் கூப்பிடுறான்.

பீட்டர் பால்
பீட்டர் பால்

இந்தச் சம்பவம் நடக்குறப்போ என் பையனுக்கு இவங்க கல்யாணம் பண்ண திட்டம் போட்டதெல்லாம் தெரியாது. சும்மா போயிட்டு வந்தான். வீட்டுல இருந்த வனிதா பசங்ககூடவும் ஜாலியா பேசியிருக்கான். வனிதா கார்ல வந்து எங்க வீட்டுக்கிட்ட என் பையனை இறக்கி விட்டுட்டு, 'அம்மாகிட்ட என் வீட்டுக்கு வந்ததைச் சொல்லாத'னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. எதுக்காக இப்படி சொல்லணும்?

வனிதா சைடிலிருந்து மூணு லேடிஸ் இருந்திருக்காங்க. ஒரு லேடி முன்னாடி நின்னு கல்யாணத்தை நடத்தியிருக்காங்க. வனிதா இப்போ இதைக் கல்யாணம்னு சொல்லாம, லவ் எக்ஸ்சேன்ஜ்-னு சொல்றாங்க. ஆனா, பார்த்த அப்படி தெரியல. ரெண்டு பேர்கூட நடந்தாத்தான் அது Love Exchange. இது ரொம்ப ஓப்பனா பப்ளிக்கா நடந்திருக்கு. கிறிஸ்தவ முறைப்படி கல்யாணம் எப்படி நடக்குமோ அதே மாதிரியேதான் நடந்திருக்கு. மோதிரமும் மாத்தியிருக்காங்க. வனிதா தன்னோட ஃப்ளாட்ல இருக்குறவங்களை, 'என் கல்யாணத்துக்கு வாங்க'னு கூப்பிட்டும் இருக்காங்க. அடுத்தநாள் 'எங்களுக்குக் கல்யாணம் நடந்திருச்சு'னு வனிதா பேட்டியும் கொடுத்திருக்காங்க. அப்புறம் எப்படி இது லவ் எக்ஸ்சேன்ஜ் ஆகும்?

எலிசபெத்
எலிசபெத்

குடும்பம் நடத்த முடியாம ஒரு நீச்சல் குளத்துல ரிசப்ஷன் வேலைக்குப் போயிட்டு இருந்தேன். எட்டாயிரம் ரூபாய்தான் சம்பளம். கல்யாணம்னு நியூஸ் வெளியே வந்தவுடனே, வீட்டுக்கு வந்து 'உனக்கு விவாகாரத்து கொடுத்துட்டு வனிதாவைக் கல்யாணம் பண்ணப் போறேன்'னு சொன்னார். கூட ஒரு ஆளும் இருந்தார். என்னோட அம்மா கோபத்துல, 'என் பொண்ணுக்குக் கொடுத்த 25 சவரன் நகையும், பசங்களுக்குப் படிக்க பத்து லட்சம் ரூபாயும் கொடுத்துட்டுப் பண்ணிக்க'னு சொன்னாங்க. இதை ரெக்கார்ட் பண்ணி வெச்சிட்டு போலீஸ் ஸ்டேஷன்ல மாமியார் சம்மதம் சொல்லிட்டாங்கனு சொல்லியிருக்கார். இவர் கல்யாணம் பண்ண மாட்டார்னு நம்பிக்கையா இருந்தோம். அடுத்தநாள் காலையில அம்மாவும், நானும் நடந்தேபோய் போலீஸ் ஸ்டேஷனுக்குப் புகார் கொடுக்கப் போனோம். அப்போ, விவாகாரத்து வாங்காம கல்யாணம் பண்ண மாட்டேன்னு எழுதிக் கொடுத்துட்டுப் போயிட்டார். எழுதிக் கொடுத்திருந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் எஸ்.ஐ, மதுரவாயலுக்குக் கொரோனா டூட்டிக்குப் போயிருந்தாங்க. அதனால திருமணம் நடக்குற அன்னைக்கு கமிஷனர் ஆபீஸுக்குப் போனோம். அங்கே, ஆன்லைன்லதான் புகார் எடுக்குறாங்க. அங்க 'நீங்க டி.சி ஆபீஸு க்குப் போங்க'னு சொன்னாங்க.

டிசி ஆபீஸ் போனா, 'இந்தக் கல்யாணத்தை நான் நிறுத்த முடியாது. அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப் போங்க, ஜெயலட்சுமினு ஒருத்தர் இருப்பாங்க. அவங்கிட்ட பேசுங்க'னு நம்பர் கொடுத்தாங்க. ஜெயலட்சுமி மேடம் போன் எடுக்கல. அதனால, போலீஸ் ஸ்டேஷன்ல வெயிட் பண்ணிட்டு இருந்தோம். கொஞ்ச நேரம் கழிச்சு மேடம் வந்தாங்க. 'நான் எஃப்.ஐ.ஆர் போடுறேன். திங்கள் கிழமை கோர்ட்ல சப்மிட் பண்றேன்'னு சொன்னாங்க. இதெல்லாம் அவங்க கல்யாணம் நடந்த சனிக்கிழமை அன்னைக்கு நடந்தது. இந்த வேலைகள்ல இருந்ததனால நேரா அங்க போய் எங்களால் கல்யாணத்தை நிறுத்த முடியல. சட்டப்படி செய்யலாம்னு இருந்தோம். ஒருவேளை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து சீக்கிரமா நடவடிக்கை எடுத்திருந்தா இந்தக் கல்யாணம் நடந்திருக்காது. வடபழனி ஸ்டேஷன்ல இருந்து வரமுடியாமப் போயிட்டாகூட ஐயப்பன்தாங்கல் ஏரியாவுலதான் கல்யாணம் நடந்துச்சு. அங்கே இருந்த ஸ்டேஷன்ல இருந்து யாராவது அனுப்பிக்கூட கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம்.

``அவங்க பிரிஞ்சி 8 வருஷமாச்சு... இப்ப 1 கோடி கேட்டு மிரட்டுறாங்க!'' - வனிதா விஜயகுமார்
வனிதா, பீட்டர் பால்
வனிதா, பீட்டர் பால்

வனிதா ஃப்ளாட்ல இருக்குறவங்க, 'நீங்க ஒரு போலீஸ்காரரைக் கூப்பிட்டு வாங்க. நாங்க உங்களுக்கு சப்போர்ட் பண்றோம்'னு சொன்னாங்க. ஆனா, ஸ்டேஷன்ல இருந்து யாரும் எங்ககூட வரத் தயாரா இல்ல. எஃப்.ஐ.ஆர் போட்டுட்டாங்களானு கூடத் தெரியல. எந்தத் தகவலும் எங்களுக்குக் கொடுக்கவும் மாட்டேங்குறாங்க. லாக்டெளன் காலத்துல பர்மிஷன் இல்லாம நிறைய பேரைக் கூப்பிட்டு இப்படியொரு கல்யாணம் பண்ணது தப்பில்லையா? இதுவரைக்கும் வனிதாகிட்ட நான் பேசுனது இல்ல. இவங்களை 'குக் வித் கோமாளி' ஷோல டிவி-லதான் பார்த்திருக்கேன். எங்களுக்குள்ள எந்த முன்விரோதமும் இல்ல. பீட்டர்கூட இதுவரைக்கும் எனக்கு போன் பண்ணல'' என வருத்தப்படுகிறார் எலிசபெத்.

அடுத்த கட்டுரைக்கு