சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: “நாலஞ்சு தடவை கல்யாணம் பண்ணிட்டோம்!”

அருண்பாரதி - பத்மாவதி
பிரீமியம் ஸ்டோரி
News
அருண்பாரதி - பத்மாவதி

குழந்தை பிறந்ததுக்கு அப்புறமும் நாங்க ஜாலியா சிக்கிம், நேபாளம், அந்தமான்னு பல இடங்களுக்கு டிராவல் பண்ணியிருக்கோம்

“இப்ப ‘புதுப்புது அர்த்தங்கள்', ‘சில்லுன்னு ஒரு காதல்' போன்ற சீரியல்களுக்கு வசனங்கள் எழுதிட்டு இருக்கேன். என்னோட டெலிவரிக்கு முன்னாடி வரைக்கும் ‘ரோஜா' சீரியலுக்கு டயலாக் எழுத வேண்டியிருந்தது. அப்ப கூட எனக்குப் பக்கபலமா இருந்தது அருண்தான்” என்று கனிவுடன் காதல் பார்வை பார்க்கிறார் பத்மாவதி. இவரின் கணவர் அருண்பாரதி ஒரு பாடலாசிரியர். சமீபத்தில் ‘அண்ணாத்த’வில் இவர் எழுதிய ‘வா சாமி’ பாடல் இடம்பெற்றதில் இருவருமே செம ஹேப்பி!

“டெலிவரி வலியில் என்னோட அத்தனை கோபங்களையும் இதே சிரிச்ச முகத்தோட அமைதியா ரசிச்சிட்டே இருந்தார். சிசேரியன் பண்ணிடுங்கன்னு சொன்னப்பவும் ‘உன்னால முடியும்’னு என் கையைப் பிடிச்சிகிட்டு நம்பிக்கை கொடுத்தார். கிட்டத்தட்ட ஆறு வருஷ திருமண பந்தத்தோட அழகியலை எங்க குழந்தை வடிவில் பார்க்கப் போறோம்னு வலிகளைப் பொறுத்துக்கிட்டேன். என் பையன் பிறந்த நொடி ஒட்டுமொத்த வலியும் ஒரே விநாடியில பறந்து போச்சு.

விகடன் TV: “நாலஞ்சு தடவை கல்யாணம் பண்ணிட்டோம்!”

குழந்தை பிறந்ததுக்கு அப்புறமும் நாங்க ஜாலியா சிக்கிம், நேபாளம், அந்தமான்னு பல இடங்களுக்கு டிராவல் பண்ணியிருக்கோம். எங்களுக்கு ஒவ்வொரு முறைப்படியும் திருமணம் செய்துக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஹைதராபாத் போயிருந்தப்ப ஒரு மஹாலில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகிட்டோம். அதேமாதிரி, சிக்கிம் போயிருந்தப்ப பழங்குடி முறைப்படி திருமணம் செய்துகிட்டோம். இதுவரை கிட்டத்தட்ட நான்கைந்து முறைப்படி நாங்க திருமணம் செய்திருப்போம்.

வீட்டு வேலையிலிருந்து பையனைப் பார்த்துக்கிற வரைக்கும் எல்லா விஷயத்திலும் அருணும் ஹெல்ப் பண்ணுவார். இந்த வேலை இவங்களுக்கானதுங்கிற எண்ணம் எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் கிடையாது. இப்ப எங்க வாழ்க்கை எங்க பையன் அகிலனைச் சூழ்ந்தே இருக்கு” என்கிறார் டச்சிங்காக.