Published:Updated:

ஐ.ஜி.யா... இன்ஸ்பெக்டரா?!  ஈஸ்வர் - ஜெயஸ்ரீ விவகாரத்தில் பஞ்சாயத்து செய்த காவல்துறை

ஈஸ்வர் - ஜெயஸ்ரீ
ஈஸ்வர் - ஜெயஸ்ரீ

ஈஸ்வர் - ஜெயஶ்ரீக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, குடும்பப் பிரச்னையாகத் தொடங்கி தற்போது காவல்துறை தலையீட்டில் ஆய்வாளரா, ஐ.ஜியா என வந்து நிற்கிறது.

ஈஸ்வர் கைது செய்யப்படுவதற்கு சில தினங்கள் முன்பு, குடும்ப நண்பரும் காவல்துறையின் உயரதிகாரியுமான ஐ.ஜி சேஷசாயியைச் சந்தித்துப் பேசியுள்ளார், ஜெயஶ்ரீ. இதை வைத்தே `அந்தச் சந்திப்பின் தொடர்ச்சியே என் மீதான கைது நடவடிக்கை' என்றார் ஈஸ்வர்.

தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த ஈஸ்வர், ஜெயஶ்ரீ மீது புகார் கூறியதும் மகாலட்சுமியும் அவரின் கணவர் அனிலும் அவரவர் நிலைப்பாடு குறித்து பேசினார்கள். கடந்த வாரம் முழுக்கவே இந்த விவகாரம்தான் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று (9.12.19) மறுபடியும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஜெயஸ்ரீ.

ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ

``மகாலட்சுமியும் ஈஸ்வரும் என்னைப் பத்திச் சொன்ன சில கருத்துகளுக்கு விளக்கம் தரணும்னு மட்டும்தான் நினைச்சேன். ஆனா, இப்போ இந்த விவகாரமே வேற ரூட்டுல போகத் தொடங்கியிருக்கு. யார் யாரோ இந்த விவகாரத்துல தலையிட்டு மிரட்டுறாங்க. யாருக்காகனுதான் தெரியலை. என் குடும்பத்துல எனக்கு ஏற்பட்ட பிரச்னையை நான் பேசறேன். இதுல பேசக்கூடாதுனு சம்பந்தம் இல்லாதவங்க எப்படிச் சொல்றாங்கனு தெரியலை. இந்த மாதிரி மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்லை'' என்றவர், `பணம் பறிக்கும் நோக்கத்தில்தான் ஜெயஸ்ரீ இப்படிச் செய்கிறார்' என்ற ஈஸ்வரின் குற்றச்சாட்டுக்கும் பதில் தந்தார்.

``என்னுடைய குடும்பம் அப்படிப்பட்ட குடும்பமில்லை. எம்.ஜி.ஆர் உச்சத்துல இருந்தப்போ அவருடன் குழந்தை நட்சத்திரமா நடிச்சவங்க என் அம்மா. `திருடாதே' உள்ளிட்ட நிறைய படங்கள்ல அவங்க நடிச்சிருக்காங்க. என் அப்பா 40 வருஷத்துக்கு முன்னாடியே டிராவல்ஸ் நடத்தினவர். என் அக்கா நேஷனல் அவார்டு வாங்கியவர். நான் தமிழ்நாடு ஸ்டேட் அவார்டு வாங்கியிருக்கேன். இந்த மாதிரியான குடும்பப் பின்னணியில வந்தவளுக்கு யாரையும் மிரட்டித்தான் பணம் சம்பாதிக்கணும்ங்கிற அவசியமில்லை. சொல்லப்போனா, ஈஸ்வருக்கே நிறைய சீரியல் வாய்ப்புகளை நான்தான் வாங்கித் தந்தேன்.''

மகாலட்சுமி
மகாலட்சுமி
``லிவ்-இன்  நடிகரை மிரட்டவே வந்தார் ஈஸ்வர்!'' - ஜெயஶ்ரீ - மகாலக்ஷ்மி விவகாரம்

``அதேபோல நான் என் முதல் கணவரிடம் கோடிக்கணக்குல பணம் கேட்டதாகவும் சொல்லியிருக்கார் ஈஸ்வர். அதுவும் பொய். அவரோட எனக்கு விவாகரத்து போயிட்டிருந்த சமயத்துலே அவரைப் போய் அடிச்சவர் ஈஸ்வர். இவருக்கு இதே வேலைதான். எங்கிட்ட நடந்துகிட்ட மாதிரியேதான் இப்போ மகாலட்சுமி வாழ்க்கையிலேயும் நுழைஞ்சிருக்கார். நான் இப்போ படுற வேதனையை இன்னும் கொஞ்ச நாள்ல மகாலட்சுமியும் அனுபவிக்கப் போறாங்க'' என்றவரிடம், தொலைபேசியில் வந்த மிரட்டல் குறித்து கேட்டேன்.

``ஈஸ்வருக்கு முன்னாடி மகாலட்சுமியுடன் தொடர்புல இருந்த ஒருத்தர் மூலமாதான் இந்த மிரட்டல் வந்திருக்குனு மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன். அவசியம் வந்தா அந்த நபருடைய பெயரையும் வெளியிடுவேன். ஆனா, இன்னொரு போன் கால் பத்தி இந்த நேரத்துல நான் சொல்ல விரும்பறேன். இந்த விவகாரம் மீடியாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே ஆயிரம் விளக்கு இன்ஸ்பெக்டர்கிட்ட இருந்து எனக்கு போன் வந்தது.''

``பேசின இன்ஸ்பெக்டர், `மகாலட்சுமி வீட்டுல போய் தகராறு பண்ணிட்டு வந்தியாமே'னு ஒருமையில பேசினாங்க. நான் மகாலட்சுமி வீட்டுக்குப் போனது நிஜம்தான். அந்த வீட்டு முன்னாடி ஒரு நிமிஷம்தான் நின்னேன். ஆனா, மிரட்டினதா சொல்லியிருக்காங்க. இன்ஸ்பெக்டரும் புகாருக்கு முறைப்படி நடவடிக்கை எடுக்கப் பேசின மாதிரி தெரியலை. அவங்களோட பேச்சு மகாலட்சுமிக்கு ஆதரவான தொணியில இருந்தது.''

ஈஸ்வர்
ஈஸ்வர்
``என்னைக் கைது பண்ணாங்க ஓகே; ஆனா ஸ்டேஷன்ல என்ன நடந்துச்சு தெரியுமா?!" - ஜெயஶ்ரீ கணவர் ஈஸ்வர்

``இந்த மாதிரியான போன் கால் மூலம் என்னைப் பேசவிடாம தடுக்கலாம்னு நினைக்கிறாங்க மகாலட்சுமி. ஈஸ்வருக்கும் அவங்களுக்கும் தொடர்பு இருக்குன்னு நான் சொல்றதை நிரூபிக்க இந்த மிரட்டல் கால் ஒண்ணே போதும்'' என்றார்.

ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் அந்த போன் கால் குறித்துக் கேட்கலாம் எனத் தொடர்புகொண்டேன்.

``இன்ஸ்பெக்டர் கோர்ட் வரை போயிருக்காங்க' என்று சொன்ன பெண் காவலர் ஒருவர், `இன்ஸ்பெக்டரிடம் பேசிவிட்டு லைனில் வருவதாகச் சொன்னார். அதேபோல் மறுபடி நம் லைனில் வந்தவர், ``மகாலட்சுமி டி.சி. ஆபீஸ்லதான் புகார் கொடுத்தாங்களாம். அங்க இருந்து புகார் ஃபார்வர்ட் ஆகி இங்கு இன்னும் வரவே இல்லையாம்'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு