Published:Updated:

``மிடில் கிளாஸ்... நைட் ஷிஃப்ட்... சினிமா ஆசை!’’ - `பூவே பூச்சூடவா’ சந்தோஷ் டேனியலின் சுவாரஸ்யப் பக்கங்கள்

சந்தோஷ் டேனியல்

"எல்லாரும் நினைப்பாங்க இவன் வெள்ளையா இருக்கான். சீரியல் வாய்ப்பு ஈஸியா கிடைச்சிருக்கும்னு. ஆனா ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுதான் வாய்ப்புகள் கிடைச்சுது."

Published:Updated:

``மிடில் கிளாஸ்... நைட் ஷிஃப்ட்... சினிமா ஆசை!’’ - `பூவே பூச்சூடவா’ சந்தோஷ் டேனியலின் சுவாரஸ்யப் பக்கங்கள்

"எல்லாரும் நினைப்பாங்க இவன் வெள்ளையா இருக்கான். சீரியல் வாய்ப்பு ஈஸியா கிடைச்சிருக்கும்னு. ஆனா ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுதான் வாய்ப்புகள் கிடைச்சுது."

சந்தோஷ் டேனியல்

திரைப்படங்களில் ஹீரோ, ஹீரோயினைத் தாண்டி ஒரு சில துணை நடிகர்களின் முகங்களில் தேஜஸ் மின்னும். `எதிர்காலத்துல இவங்க டாப்ல போய்டுவாங்க’ என்பது போல ஒரு இன்ஸ்டின்க்ட் தோன்றும். இன்று கை நிறைய படங்களை வைத்திருக்கும் டாப் நடிகர் விஜய் சேதுபதி, பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் த்ரிஷா உள்ளிட்டவர்கள் ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோலில் அறிமுகமானவர்கள்தான். இது சீரியல்களுக்கும் பொருந்தும். தற்போது சின்னத்திரையில் ஒரு நடிகனாகத் தடம் பதித்திருக்கும் சந்தோஷ் டேனியலுக்கும் அத்தகைய வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன.

சந்தோஷ் டேனியல்
சந்தோஷ் டேனியல்

விஜய் டிவி-யில் அரண்மனை கிளி, ஜீ தமிழில் பூவே பூச்சூடவா என டாப் சீரியல்களில் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் சந்தோஷ் டேனியலை சற்றே நிறுத்தி உரையாடினோம்.

சீரியல் வாய்ப்புகள் எப்படி வந்துச்சு.. சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கா... உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்...

"நான் சென்னை பையன். மிடில் கிளாஸ் ஃபேமிலி. கூடவே சினிமா ஆசை. எனக்கு சினிமா லின்க் கிடையாது. யாரையும் தெரியாது. அதனால அந்த ஆசைகளை கொஞ்சம் ஓரமா வெச்சிட்டு ஒரு ஐ.டி கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன். என் நண்பர் ஒருவர் மூலமா ஒரு முன்னணி தொலைக்காட்சியில் சீரியல் வாய்ப்பு வந்துச்சு. யோசிக்காம ஓகே சொல்லிட்டேன். ஏன்னா என்ன மாதிரி சினிமா ஆசைல இருக்க மிடில் கிளாஸ் பசங்களுக்கு இப்படி வாய்ப்பு அமையுறதுலாம் பெரிய விஷயம். அதன் பிறகு ஷூட் போச்சு. சீரியலை நம்பி ஐ.டி வேலையைவிட தைரியமில்ல. அதனால இரவெல்லாம் நைட் ஷிஃப்ட் பார்ப்பேன். காலை 6.30 மணிக்கு ஷிஃப்ட் முடியும். கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன். அப்பறம் ஷூட்டிங் போய்டுவேன். இப்படியே போச்சு.

சந்தோஷ் டேனியல், RJ செந்தில்
சந்தோஷ் டேனியல், RJ செந்தில்

ஒரு கட்டத்துல உடம்பு ஒத்துழைக்கலை. நிறைய ஹெல்த் பிரச்னை வந்துச்சு. அதனால் ஐடி வேலையை விட்டுடலாம்னு துணிந்து முடிவு எடுத்தேன். அப்புறம் நிறைய கஷ்டம் வந்துச்சு. ஏழு வருஷம் நிறைய நிறைய கஷ்டங்கள். ஒவ்வொரு வாய்ப்புக்கும் அலைந்தேன். அவ்வளோ கஷ்டத்துக்கு பிறகுதான் இந்த டாப் சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது. இப்போது என்னை பார்த்து மக்கள் நீங்க 'பூவே பூச்சூடவா' வெங்கட்-ன்னு சொல்லும் போது உள்ளுக்குள்ள ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். எல்லாரும் நினைப்பாங்க இவன் வெள்ளையா இருக்கான். சீரியல் வாய்ப்பு ஈஸியா கிடைச்சிருக்கும்னு. ஆனா ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுதான் வாய்ப்புகள் கிடைச்சுது. எனக்கு நடிப்பு பிடிக்கும். அதனால்தான் எல்லா கஷ்டத்தையும் ஈஸியா கடந்து வந்தேன்" என்று பெருமூச்சி விட்டவரிடம் "வெள்ளித்திரை வாய்ப்புகள் வருதா, உங்க டிரீம் ரோல் எது?" என்று கேட்டோம்.

``இயக்குநர் சுசீந்திரனின் ஏஞ்சலினா படத்தில் நடிச்சிருக்கேன். ரிலீஸுக்காக வெயிட்டிங். எனக்கு வில்லன் ரோல் பண்ணனும்னு ஆசை. அதுவும் ரூடான வில்லன் ரோல். 'பருத்தி வீரன்' ஸ்டைலில் கிராமத்து பின்னணி கதைகளில் நடிக்கணும்னு ஆசை!’’ என்று முடித்து கொண்டவரிடம் "கல்யாணம் எப்போ?" என்றோம்.

சந்தோஷ் டேனியல்
சந்தோஷ் டேனியல்

``இப்போதான் ஓரளவுக்கு என் முகம் வெளிய தெரிய ஆரம்பிச்சுருக்கு. லீட் ரோல் நடிக்கணும். அதுமட்டுமில்ல கல்யாணம் பண்ண காசு வேணும்ல. ஸோ சம்பாதிக்கணும். அப்புறம்தான் கல்யாணம்’’ என்றார் சிரித்தபடி.