Published:Updated:

"கனத்த இதயத்தோடு பகிர்கிறேன்" பூவே உனக்காக சீரியலிலிருந்து விலகிய ராதிகா ப்ரீத்தி!

ராதிகா

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர், பூவே உனக்காக. இந்தத் தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்த ராதிகா ப்ரீத்தி தற்போது அந்தத் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

"கனத்த இதயத்தோடு பகிர்கிறேன்" பூவே உனக்காக சீரியலிலிருந்து விலகிய ராதிகா ப்ரீத்தி!

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர், பூவே உனக்காக. இந்தத் தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்த ராதிகா ப்ரீத்தி தற்போது அந்தத் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

Published:Updated:
ராதிகா

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர், பூவே உனக்காக. இந்தத் தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்த ராதிகா ப்ரீத்தி தற்போது அந்தத் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ராதிகா, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

'பூவே உனக்காக' ராதிகா
'பூவே உனக்காக' ராதிகா

'பூவே உனக்காக' தொடரில் நடிகர் லிவிங்ஸ்டனின் மூத்த மகள் ஜோவிதா இந்தத் தொடரின் மூலம் சீரியலுக்குள் என்ட்ரியானார். பிறகு, திடீரென அந்தத் தொடரில் இருந்து விலகியவர் தற்போது சன் டிவியில் 'அருவி' என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது தவிர, ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த அருண் என்பவரும் சீரியலில் இருந்து விலகினார். அதற்கடுத்து கதாநாயகனாக அசிம் என்ட்ரியானார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆர்ட்டிஸ்ட் மாற்றத்திற்கு பிறகு சமீபமாக தான் இந்தத் தொடர் டிஆர்பி ரீதியாக ஹிட் அடிக்க தொடங்கியிருந்தது. தற்போது, சீரியல் ஹீரோயின் சீரியலில் இருந்து விலகியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

'பூவே உனக்காக' ராதிகா
'பூவே உனக்காக' ராதிகா

ராதிகா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ' கனத்த இதயத்தோடு பூவே உனக்காக தொடரில் இருந்து நான் விலகியிருப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த சன் டிவிக்கும், புரொடக்‌ஷன் ஹவுஸூக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக என் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தடுத்த வெற்றிப்படிகளில் என்னுடன் இருப்பீர்கள் என எனக்குத் தெரியும்! உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!.. இப்படிக்கு, பூவரசி!' என பதிவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism