Published:Updated:

நடிகர்களுக்கு சம்பளப் பாக்கி; அவசரமாக முடிக்கப்பட்டதா `பூவே உனக்காக’ சீரியல்?!

பூவே உனக்காக

சேனல் தரப்பில் நாம் விசாரித்த வரை, இந்தச் சம்பள பாக்கி விவகாரம் அவர்களுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. ஆனால் ஜூன் 18-ம் தேதி சீரியலின் கடைசி எபிசோடு ஒளிபரப்பாக இருப்பதாகத் தெரிகிறது.

நடிகர்களுக்கு சம்பளப் பாக்கி; அவசரமாக முடிக்கப்பட்டதா `பூவே உனக்காக’ சீரியல்?!

சேனல் தரப்பில் நாம் விசாரித்த வரை, இந்தச் சம்பள பாக்கி விவகாரம் அவர்களுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. ஆனால் ஜூன் 18-ம் தேதி சீரியலின் கடைசி எபிசோடு ஒளிபரப்பாக இருப்பதாகத் தெரிகிறது.

Published:Updated:
பூவே உனக்காக
`பூவே உனக்காக’ சன் டிவியில் ஆரம்பத்தில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான தொடர். சில எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் தொடரின் ஹீரோ மாறினார். சில மாதங்கள் கடந்த நிலையில் ஹீரோயின் சீரியலில் இருந்து வெளியேறினார். பிறகு தொடரே இரவு 10 மணி ஸ்லாட்டுக்கு மாறியது. சமீபத்தில் 10 மணி ஸ்லாட்டும் மாறி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

நடிகர் அஸீம், சாயாசிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வந்த இந்தத் தொடருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புமே கிடைத்து வந்தது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, தற்போது திடீரென சீரியலை முடித்து விட்டதாகச் சொல்கிறார்கள். சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சில நடிகர்களிடம் இது தொடர்பாகக் கேட்டபோது தகவலை உறுதிப்படுத்தினார்கள்.

பூவே உனக்காக அஸீம் - சாயா சிங்
பூவே உனக்காக அஸீம் - சாயா சிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"கடந்த எட்டாம் தேதி (ஜூன் 8) வழக்கம் போல ஷூட்டிங் போயிருந்தோம். அன்னைக்கு ஷூட் செய்யப்பட்ட காட்சிகள் எல்லாமே வித்தியாசமா இருந்தன. அதாவது வில்லன் திருந்தற மாதிரியான எபிசோடு, பழைய விஷயங்கள் மறந்து போயிருந்த கதாநாயகிக்கு திடீர்னு எல்லாமே நினைவுக்கு வந்த மாதிரியான காட்சிகள் எடுக்கப்பட்டன. ஹீரோ தன்னுடைய அப்பாவைக் கொன்னவனைத் தேடிட்டிருப்பார். அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடிச்சிட்ட மாதிரியும் ஷூட் பண்ணினாங்க. ஆர்ட்டிஸ்டுகள் எல்லாருக்குமே எதுவுமே புரியலை. இயக்குநரைக் கேட்டால், அவருக்குமே புரியலைங்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடைசியில விசாரிச்சா அன்னைக்குதான் கடைசி நாள் ஷூட்டுன்னு சொல்றாங்க. எங்களுக்கு விஷயம் தெரிஞ்ச நேரத்துல ஷூட்டிங்கையே பேக் பன்ணிட்டு மொத்த யூனிட்டும் கிளம்பிட்டாங்க. கடைசி நாள் ஷூட்டிங்னா ஃபேர்வெல்லாம் கொண்டாடி நெகிழ்ச்சியா பிரியற ஷூட்டிங் யூனிட் பத்தித்தான் கேள்விப்பட்டிருக்கோம். கடைசி நாள் ஷூட்டிங்னே தெரியாம ஆர்ட்டிஸ்டுகள் நடிச்சுட்டு வந்ததுன்னா அது தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றுலயே இதுதான் முதன் முறையா இருக்கும்" என்றார்கள் அவர்கள்.

நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கே தெரியாமல் தொடரை முடித்தது குறித்துப் பலவிதமான பேச்சுகள் கேட்கின்றன.

'பூவே உனக்காக' ராதிகா
'பூவே உனக்காக' ராதிகா

"ஹீரோ, ஹீரோயின், தொடரின் இயக்குநர், வில்லி நடிகை என சீரியலில் நடித்து வருகிற பெரும்பாலான நடிகர் நடிகைகளுக்கு கடந்த சில மாதங்களாகவே சம்பள பாக்கி இருக்கிறதாம். சீரியல் முடிவடையப் போகிறது எனத் தெரிந்தால், சம்பளத்தைக் கேட்டு நச்சரிப்பார்கள்; சீரியலை முடிக்க ஒத்துழைக்க மாட்டார்கள் என நினைத்தே யாருக்கும் சொல்லாமல் கடைசி எபிசோடுகள் ஷூட் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

சேனல் தரப்பில் நாம் விசாரித்த வரை, இந்தச் சம்பள பாக்கி விவகாரம் அவர்களுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. ஆனால் ஜூன் 18-ம் தேதி சீரியலின் கடைசி எபிசோடு ஒளிபரப்பாக இருப்பதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்துத் தொடரின் தயாரிப்பாளர் ஜமாலிடம் கேட்கலாமெனத் தொடர்பு கொண்டோம். அவரது மொபைல் சுவிட்ச்டு ஆஃபிலேயே உள்ளது. ஜமால் பேசும் பட்சத்தில் அவரது விளக்கத்தையும் பிரசுரிக்கத் தயாராகவே உள்ளோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism