Published:Updated:

``அக்கானு சொன்னாலே சஞ்சீவ் உடைஞ்சுடுவார்; அவர் கண் எதிர்லயே..!" - ப்ரீத்தி சஞ்சீவ் ஷேரிங்ஸ்

குடும்பத்தினருடன் சஞ்சீவ்

இன்னும் சில தினங்களில் இறுதிப்போட்டி நடக்கவிருக்கும் நிலையில், போட்டியாளர்களில் ஒருவரான சஞ்சீவ் அண்மையில் எலிமினேட் ஆனார். `அமீருக்குப் பதிலாகத் திட்டமிட்டே சஞ்சீவ் வெளியேற்றப்பட்டார்' என்று சோஷியல் மீடியாவில் பலரும் பேசிவரும் நிலையில், சஞ்சீவ் மனைவி ப்ரீத்தியிடம் பேசினோம்.

``அக்கானு சொன்னாலே சஞ்சீவ் உடைஞ்சுடுவார்; அவர் கண் எதிர்லயே..!" - ப்ரீத்தி சஞ்சீவ் ஷேரிங்ஸ்

இன்னும் சில தினங்களில் இறுதிப்போட்டி நடக்கவிருக்கும் நிலையில், போட்டியாளர்களில் ஒருவரான சஞ்சீவ் அண்மையில் எலிமினேட் ஆனார். `அமீருக்குப் பதிலாகத் திட்டமிட்டே சஞ்சீவ் வெளியேற்றப்பட்டார்' என்று சோஷியல் மீடியாவில் பலரும் பேசிவரும் நிலையில், சஞ்சீவ் மனைவி ப்ரீத்தியிடம் பேசினோம்.

Published:Updated:
குடும்பத்தினருடன் சஞ்சீவ்

`பிக்பாஸ்’ நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மக்களுக்குப் பரிச்சயமான போட்டியாளர்களைத் தேர்வு செய்யத் தவறியதாலும், விறுவிறுப்பைக் கூட்டும் சுவாரஸ்யமான டாஸ்குகள் இல்லாததாலும், தற்போதைய 5-ம் சீசனுக்கான வரவேற்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் இறுதிப்போட்டி நடக்கவிருக்கும் நிலையில், போட்டியாளர்களில் ஒருவரான சஞ்சீவ் அண்மையில் எலிமினேட் ஆனார்.

கணவருடன் ப்ரீத்தி
கணவருடன் ப்ரீத்தி

`அமீருக்குப் பதிலாகத் திட்டமிட்டே சஞ்சீவ் வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து கமலிடம் அவர் பேசிய விஷயங்கள் டிவி-யில் ஒளிபரப்பப்படவில்லை' என்னும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவும் நிலையில், `பிக்பாஸி’ல் சஞ்சீவின் செயல்பாடுகள் குறித்து, அவர் மனைவியும் சின்னத்திரை நடிகையுமான ப்ரீத்தியிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இப்போ முடியப்போகிற 5-வது சீசனின் தொடக்கத்துலயே `பிக்பாஸ்'ல கலந்துக்கிற வாய்ப்பு என் கணவருக்குக் கிடைச்சது. அந்த நேரத்துல, `யானை' மற்றும் `அன்பறிவு' படங்கள்ல சஞ்சீவ் நடிச்சுகிட்டிருந்தார். அதனால, விருப்பம் இருந்தும் `பிக்பாஸ்' வாய்ப்பை அவரால ஏற்க முடியல. என்ன சர்ச்சைகள், விமர்சனங்கள் வந்தாலும், மக்கள் மத்தியில `பிக்பாஸ்' போட்டியாளர்களுக்குப் பெரிய அடையாளம் கிடைக்குது. என் கணவர் சின்னத்திரையில வேலை செஞ்சு ஒரு வருஷம் ஆகுது. அதனால, அந்த நிகழ்ச்சி மூலமா மறுபடியும் அவருக்கு மக்கள் மத்தியில ரீச் கிடைக்கும்னு நினைச்சுத்தான், நிகழ்ச்சி தொடங்கி 50-ம் நாள்களுக்குப் பிறகு, வைல்டு கார்டு என்ட்ரியா `பிக்பாஸ்'ல சஞ்சீவ் கலந்துகிட்டார்.

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில்...
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில்...

`பிக்பாஸ்' நிகழ்ச்சியின் பெரிய ரசிகை நான். முந்தைய சீசன் நிகழ்ச்சிகளைத் தவறாம பார்த்திருக்கேன். ஆனா, என் கணவர் இந்த நிகழ்ச்சியை அதிகம் பார்த்ததில்ல. அதனால, `பிக்பாஸ்' வீட்டுக்குள்ள போறத்துக்கு முன்னாடி அவர் க்வாரன்டீன்ல இருந்தபோதுதான், பழைய எபிசோடுகள் சிலவற்றைப் பார்த்தார். `நீங்க நீங்களாவே இருங்க. யாராச்சும் கோபப்படுத்தினாலும் பொறுமையை இழக்காதீங்க'ன்னு மட்டும்தான் அவருக்குச் சொல்லி அனுப்பினேன்.

வழக்கமா நைட்டு 9.30 மணிக்கே நான் தூங்கிடுவேன். ஆனா, சஞ்சீவ் `பிக்பாஸ்'ல கலந்துகிட்டதிலேருந்து, தினமும் நிகழ்ச்சியைப் பார்த்துட்டு, அதுக்கப்புறமா சோஷியல் மீடியாவுல வரும் விமர்சனங்களை ஓரளவுக்குப் பார்த்துட்டுத்தான் தூங்கினேன். அதேபோல காலையில பிள்ளைகளை ஸ்கூல்ல விட்டுட்டு வந்ததும், வீட்டு வேலைகளைச் செஞ்சுகிட்டே, `இன்னைக்கு என்ன நடக்குமோ, சஞ்சீவை எப்படிக் காட்டுவாங்களோ...'ன்னு அடுத்தடுத்து ரிலீஸாகும் `பிக்பாஸ்' புரோமோக்களை ஆவலோடு பார்த்தேன். கிட்டத்தட்ட 40 நாள்களுக்கு போனும் கையுமா, அந்த நிகழ்ச்சி பத்தின சிந்தனையில புது உலகத்துல இருந்ததுபோல இருந்துச்சு" என்கிறார் குபீர் சிரிப்புடன்.

'பிக்பாஸ்' சஞ்சீவ்...
'பிக்பாஸ்' சஞ்சீவ்...

சன் டிவி `வானத்தைப்போல' சீரியலில் ஹீரோவாக நடித்துவந்த தமன் குமார், அந்த சீரியலிலிருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக சஞ்சீவ் அந்த ரோலில் நடிக்க கமிட்டாகவிருந்தார். ஆனால், `பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு சஞ்சீவ் சென்றதால், அந்த ஹீரோ ரோல் நடிகர் ஶ்ரீ வசம் சென்றது.

சஞ்சீவ், `பிக்பாஸ்' வீட்டுக்குள் சென்று வந்த அனுபவத்தைப் பகிரும் ப்ரீத்தி, ``வைல்டு கார்டு என்ட்ரியா உள்ளே போனதும், சில தினங்களுக்கு அங்கிருக்கிற சூழலை நல்லா புரிஞ்சுகிட்டு, அப்புறமாதான் சஞ்சீவ் ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சார். சஞ்சீவ் பேரு டேமேஜ் ஆகிடக்கூடாதுனு மட்டும்தான் நான் எதிர்பார்த்தேன். அதன்படியே அவரும் எல்லோர்கிட்டயும் பெரிசா சண்டை ஏதுமில்லாம, எல்லா இடத்திலும் முடிஞ்சவரை நடுநிலையுடன் இருந்தார். குழந்தைகளுடன் அந்த வீட்டுக்குள் நான் போனபோது, `வெளியில நடக்கிறதைப் போட்டியாளர்கள் யார்கிட்டேயும் சொல்லிக்க வேண்டாம்'னு சொல்லி அனுப்பினாங்க. எங்களைப் பார்த்ததுமே சஞ்சீவ் எமோஷனல் ஆகிட்டார்.

கணவருடன் ப்ரீத்தி
கணவருடன் ப்ரீத்தி

யார் எப்படி நடந்துகிட்டாலும், அந்த நிகழ்ச்சியிலிருக்கிற போட்டியாளர்கள் இடத்துலேருந்து பார்க்கிறப்போ, வெளியுலகமே தெரியாம வீட்டுக்குள்ள அடைஞ்சு இருக்கிறது அவங்களுக்குக் கடுமையான உளவியல் சிக்கலை ஏற்படுத்தும். அதை அந்த வீட்டுக்குள் போனப்போ நல்லாவே புரிஞ்சுக்க முடிஞ்சது. அதனால, அந்த நிகழ்ச்சியில ஒவ்வொருத்தரும் நடத்துக்கிற விதம், பயன்படுத்துற உத்திகளையெல்லாம் வெறும் விளையாட்டா மட்டுமே நானும் சஞ்சீவும் பார்க்கிறோம். அதனால, தனிப்பட்ட முறையில எந்தப் போட்டியாளர்மீதும் எங்களுக்குக் கோபமோ வருத்தமோ இல்ல.

ஆவேசமா ரியாக்ட் பண்றது, மத்தவங்களைக் காயப்படுத்துற மாதிரி பேசுற விஷயங்களை சஞ்சீவ் செய்யவே மாட்டார். அவர் பெரிசா பிரச்னைகளையோ, சர்ச்சைகளையோ அந்த நிகழ்ச்சியில உருவாக்கல. அதனால, அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை டிவி-யில அதிகமா காட்டலை. போட்டியாளரா அவர் பெயர் எந்த வகையிலும் பாதிக்கலை. அதுவே எங்களுக்குப் போதும். `டிக்கெட் டு ஃபினாலே' வாய்ப்பு கிடைக்காத பட்சத்துல, இந்த வாரம் அவர் எலிமினேட் ஆகிடுறது நல்லதுனு நினைச்சேன். அதேபோலவே சனிக்கிழமை அவர் எலிமினேட் ஆனப்போ, அவரை நான்தான் பிக்கப் செஞ்சேன். அவரின் `பிக்பாஸ்' அனுபவம் பத்தி ரெண்டு பேரும் விவாதிச்சோம். அப்புறமா வழக்கமான வேலைகளைக் கவனிக்க ஆரம்பிச்சார். கதாநாயகனா ஒரு படம் பண்றார். அதுக்கான வேலைகள்ல இப்போ கவனம் கொடுக்கிறார்" என்கிற ப்ரீத்தி, அமீருக்குக் கிடைத்த `டிக்கெட் டு ஃபினாலே' வாய்ப்பு குறித்துக் கருத்து கூற மறுத்துவிட்டார்.

'பிக்பாஸ்' சஞ்சீவ்...
'பிக்பாஸ்' சஞ்சீவ்...

`இணைந்த கைகள்', `ஊர் மரியாதை', `பிஸ்தா' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த சிந்து, சஞ்சீவின் உடன் பிறந்த அக்கா. அவரின் இழப்பு குறித்து `பிக்பாஸ்' நிகழ்ச்சியில் சஞ்சீவ் கண்ணீர் மல்கப் பேசியிருந்தார். சகோதரி உடனான சஞ்சீவின் பாசம் குறித்துப் பேசும் ப்ரீத்தி, ``போட்டியாளர்கள் தங்களுக்கு மறக்க முடியாத நினைவுகளைச் சொல்றப்போ, தன் அக்கா சிந்துவைப் பத்தி சஞ்சீவ் பேசும்போது ரொம்பவே எமோஷனல் ஆகிட்டார். அவரை நல்லா தெரிஞ்ச பலருக்கும்கூட அவரின் அக்கா சிந்துவைப் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. சஞ்சீவ் படிச்சுகிட்டிருந்த காலத்துல, குடும்பத்துக்காக சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச சிந்து அக்கா, தாய் ஸ்தானத்திலிருந்து அவரை வளர்த்திருக்காங்க. ரொம்பவே ஒத்துமையான அக்கா-தம்பியா இருந்திருக்காங்க. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சிந்து அக்கா, சஞ்சீவ் கண் எதிர்லயே உயிரை விட்டிருக்காங்க. அந்த வலி மிகுந்த நினைவுகள் அவர் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு.

அக்காவின் இறப்புக்குப் பிறகுதான் சஞ்சீவுக்கும் எனக்கும் கல்யாணமாச்சு. அதனால, சிந்து அக்காவுடன் எனக்குப் பெரிசா பழக்கம் இல்ல. `அவ இருந்திருந்தா நீங்க ரெண்டு பேரும் குளோஸ் ஃபிரெண்டா இருந்திப்பீங்க’ன்னு சஞ்சீவ் அடிக்கடி என்கிட்ட சொல்லுவார். சிந்து அக்காவின் நிஜப்பெயர் கீதாஞ்சலி. எங்க மக லயாவுக்கு ரெண்டாவது பெயரா கீதாஞ்சலினு வெச்சிருக்கோம். நல்ல கேரக்டர் எது வந்தாலும் தயங்காம சிந்து அக்கா நடிக்க ஒத்துப்பாங்களாம். அதுக்கு உதாரணமான `பரம்பரை’ படத்துல, தன் சித்தப்பா விஜயகுமார் அப்பாவுக்கு ஜோடியா சிந்து அக்கா நடிச்சிருப்பாங்க.

`மெட்டி ஒலி' சீரியலில் சிந்து
`மெட்டி ஒலி' சீரியலில் சிந்து

சஞ்சீவுக்கு மஞ்சுளா அம்மா சொந்த சித்திங்கிறதும் பலருக்கும் தெரியாது. அதனால, விஜயகுமார் அப்பாவின் குடும்பத்துடன் எங்களுக்கு நெருங்கிய பந்தம் உண்டு. அவர் பிள்ளைகள் எல்லோருடனும் நாங்க ரொம்பவே குளோஸ். ஏதாச்சும் பேட்டியில எங்க சினிமா உறவுகள், நண்பர்கள் பத்தி கேட்டா, ஓரளவுக்கு நாங்க பேசுவோமே தவிர, எங்க தனிப்பட்ட நட்பு, சொந்தம் பத்தியெல்லாம் எந்த இடத்துலயும் பெரிசா தெரியப்படுத்திக்க மாட்டோம்" என்று முடித்தார்.