Published:Updated:

``என்னால பிரச்னை வரக்கூடாதுன்னு தொடரிலிருந்து விலகிட்டேன்!’’ - `திருமணம்’ புகழ் ப்ரீத்தி ஷர்மா

ப்ரீத்தி ஷர்மா
ப்ரீத்தி ஷர்மா

ப்ரீத்தியின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் பாச மழையாகப் பொழிந்து தள்ளியிருக்கின்றனர். ப்ரீத்தியும் பதிலுக்கு ``I am feeling down... என்ன மன்னிசிருங்க ப்ளீஸ்’’ என்று மன்னிப்பு கடிதம் எழுதியிருக்கிறார்.

டிக் டாக்கில் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா தற்போது படு அப்செட்டில் இருக்கிறார். சாட்டிலைட் சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் திருமணம் சீரியலில் அனிதா என்னும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ப்ரீத்தி, திடீரென தொடரை விட்டு வெளியேறிவிட்டார்.

ப்ரீத்தி ஷர்மா
ப்ரீத்தி ஷர்மா

கதைப்படி நாயகியின் தங்கையான அனிதாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அந்தத் திருமணத்தில் ஆயிரம் சிக்கல்கள். இப்படியாகக் கதை சூடுபிடிக்க தொடங்கியுள்ள, இந்தச் சமயத்தில் ஹோம்லி லுக்கில் ரசிகர்களைக் கவர்ந்த ப்ரீத்தி, இதில் இருந்து விலகியிருப்பது சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரீத்தியின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் பாச மழையாகப் பொழிந்து தள்ளியிருக்கின்றனர். ப்ரீத்தியும் பதிலுக்கு ``I am feeling down... என்ன மன்னிசிருங்க ப்ளீஸ்’’ என்று மன்னிப்பு கடிதம் எழுதியிருக்கிறார். அனிதா கதாபாத்திரத்தில் ப்ரீத்திக்குப் பதில் நடிகை வித்யா சந்திரன் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் எதற்காக இந்தத் திடீர் முடிவு என்று ப்ரீத்தியைத் தொடர்புகொண்டு கேட்டோம்.

'ஆமாம்.. இனி எங்களுக்குள் எதுவுமில்லை!- 'ரோஜா' சீரியல் ப்ரியங்காவின் பிரேக்-அப் மெசேஜ்

``நான் ரொம்ப சோகமா இருக்கேன். `திருமணம்' சீரியல் மூலமாகத் தான் எனக்கு ரசிகர்களின் அன்பு கிடைச்சது. சீரியலில் என் கதாபாத்திரம் எப்போதாவதுதான் வரும். ஆனால், இனி வரும் எபிசோடுகளில் முழுக்க முழுக்க என் கதாபாத்திரத்தை சுற்றித்தான் கதை நகருது. இந்தச் சமயத்தில் எனக்கு இப்படியொரு இக்கட்டான சூழல் ஏற்படும்னு நினைச்சுக்கூட பார்க்கல. நான் சன் டிவியின் சித்தி 2 சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கேன். அதனால, கடந்த சில மாதங்களாகத் தேதிகள் கொடுப்பதில் பிரச்னை இருந்தது.

ப்ரீத்தி ஷர்மா
ப்ரீத்தி ஷர்மா

திருமணம் சீரியலுக்கு அதிக தேதிகள் ஒதுக்க முடியல. அனிதா ரோலுக்கு முக்கியத்துவம் அதிகமாகும் இந்த நேரத்துல தேதிகள் அதிகமா வேணும்னு தயாரிப்பு தரப்புல கேட்டாங்க. ஆனால், தொடர்ந்து பிரச்னைகள் நீடிச்சது. அதனால ஒருகட்டத்துல அவங்க எனக்குப் பதில் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யலாம்ன்னு யோசிக்கத் தொடங்கினாங்க. எனக்கும் அதுதான் சரின்னுபட்டுச்சு. என்னால சீரியலுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாதுன்னு தோணுச்சு. அதனால நான் விலகிக்கிறேன்னு சொல்லிட்டேன். இருந்தாலும், மனசுக்குள்ள வலிக்குது. அழுதுவிட்டேன். ரசிகர்கள் இன்ஸ்டாவில் மெசஜ் அனுப்பிட்டே இருக்காங்க. இப்போ கமிட் ஆகியிருக்க சித்தி 2 சீரியலில் என் கதாபாத்திரம் கண்டிப்பா உங்க எல்லாருக்கும் பிடிக்கும். உங்க அன்புக்கு ரொம்ப நன்றி. அப்புறம் இன்னொரு விஷயம், நான் என் நர்ஸிங் படிப்பை மீண்டும் தொடரப்போறேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு