Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: மீண்டும் ஷூட்டிங் அழைக்கப்பட்ட நடிகர்; பாலா ஹேப்பியா அண்ணாச்சி?!

பிக் பாஸ் அல்டிமேட், அபியும் நானும்

நம்ம பிரைம் டைம் பெருமாளு இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் சீக்ரெட் நாம பேசின‌ ரெண்டாவது நாள் ராஜ்கமல் ஷூட்டிங் அழைக்கப்பட்டது என சில எக்ஸ்க்ளூசிவ் தகவல்களுடன் வந்திருக்கிறார். வாங்க பார்க்கலாம்!

Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: மீண்டும் ஷூட்டிங் அழைக்கப்பட்ட நடிகர்; பாலா ஹேப்பியா அண்ணாச்சி?!

நம்ம பிரைம் டைம் பெருமாளு இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் சீக்ரெட் நாம பேசின‌ ரெண்டாவது நாள் ராஜ்கமல் ஷூட்டிங் அழைக்கப்பட்டது என சில எக்ஸ்க்ளூசிவ் தகவல்களுடன் வந்திருக்கிறார். வாங்க பார்க்கலாம்!

பிக் பாஸ் அல்டிமேட், அபியும் நானும்

'வழக்கமான மோர், லெமன்லாம் வேண்டாம். ஐஸ் கட்டிகள் மிதக்கிற மாதிரி கரும்புச்சாறுக்குச் சொல்லிடுங்க' - ஃபோனில் ஆர்டர் போட்ட பிரைம் டைம் பெருமாளு அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் வந்திறங்கினார்...
'ஆரடர் பலமா இருக்கறதைப் பார்த்தா, ஏதோ சம்பவம் இருக்கற மாதிரி தெரியுதே' என்றோம்.
'சம்பவமேதான். போன வாரம் விஜய் டெலி அவார்ட்ஸ் தேதியை சரியாச் சொல்லலைன்னு கோபிச்சுக்கிட்டீங்களே, அதைச் சரி செய்திருக்கு ஒரு சம்பவம்.

போன வாரம் பேசறப்ப 'அபியும் நானும்' சீரியல் பத்திப் பேசினோமே ஞாபகமிருக்கா? நல்லா போயிட்டிருந்த சீரியலின் ரேட்டிங் இப்ப அதலபாதாளத்துக்குப் போயிடுச்சுன்னும் முக்கியமான கேரக்டரான நடிகர் ராஜ்கமலை பத்து மாசமா ஷூட்டிங் கூப்பிடவே இல்லைன்னும் பேசினோமே... நாம இங்க பேசின‌ ரெண்டாவது நாள் ராஜ்கமலை ஷூட்டிங் கூப்பிட்டிருக்காங்க. ஏப்ரல் 12-ம் தேதியில இருந்து திரும்பவும் ஷூட்டிங் போறாராம். என்ற பி.பி.யிடம் கைகுலுக்கி விட்டுத் தயாராக இருந்த கரும்புச் சாறை நீட்டினோம்.
ருசித்துக் குடித்தவர், 'அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா'ன்னு கவுண்டமணி வசனம் பேசுவாரே, சீரியல்லயும் இதெல்லாம் இப்ப சகஜம்கிறாங்க' என்றார்.

பிரைம் டைம் பெருமாளு
பிரைம் டைம் பெருமாளு

'புரியலையே..'
'அரசியல்வாதிகள்தான் ஒரே குடும்பத்துல ஆளுங்கட்சியில ஒருத்தர் இருப்பார், எதிர்க்கட்சியில இன்னொருத்தர் இருப்பார். வெளியில ஒருவருக்கொருவர் அடிச்சுக்கிடுற மாதிரி நடந்துக்கிடுவாங்க. பிசினஸ், பணம்னு வந்தா 'கட்சியா.. அது கிடக்குது'னு சொல்லிடுவாங்க. பினாமிகள் நிறைய புழங்குகிற ஏரியா அது.
டிவியில இந்த டைப் மேட்டர் இது. ரெண்டு சேனல்களுக்கிடையில் தொழில் ரீதியா அப்படியொரு போட்டி. இந்த சேனல்ல நடிக்கிற ஆர்ட்டிஸ்டுகளை அந்த டிவி ஒதுக்கறதும், அந்த டிவியில நடிக்கிறவங்களை இந்த டிவி ஒதுக்கறதும்கிறதெல்லாம் அடிக்கடி நடக்கும்.
ஆனா பாருங்க, ஒரு சேனல்ல கவிஞர் பெயரில் சீரியல் தயாரிக்கிற தயாரிப்பாளர்தான் அந்த சேனலுடைய போட்டி சேனலில் 'நம்பர் ஒன்' சீரியலையும் தயாரிக்கிறாராம்' என்றவரை மறித்து, 'ஒரே புரொடியூசர் வெவ்வேறு சேனல்கள்ல சீரியல் தயாரிப்பது பெரிய குற்றமா' என்றோம்.

'ஒரு பரஸ்பர புரிந்துணர்வுல முன்னாடி ஒரு சேனலுக்கு சீரியல் தயாரிச்சவ்ங்க அடுத்த சேனலுடன் பிசினஸ் தொடர்பு வச்சுக்காமத்தான் இருந்ததாகச் சொல்றாங்க. இப்ப வியாபார எல்லைகள் மாறியிருக்கலாம். ஆனாலும் ஒரு புரொடியூசர் ஒரே பேனர்ல வேற வேற சேனல்கள்ல சீரியல் தயாரிச்சா அது உறுத்தாது. ஆனா வெவ்வேற பெயர்கள்ல எடுக்கறாங்கன்னா, பின்னணியில கமிஷன் அது இதுன்னு ஏதாவது பேச்சு கிளம்பாதா? எது எப்படியோ, எனக்கு வந்த தகவலைச் சொல்லிட்டேன்.

பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் அல்டிமேட்

'சரி, பிக் பாஸ் அல்டிமேட் முடிஞ்சிடுச்சே, பாலாவுக்கு வாழ்த்துச் சொல்லீட்டீங்க தானே? ''இனிமேல்தான் பேசணும். அல்டிமேட் ஆரம்பத்தில் நல்ல ஓப்பனிங் இருந்தது. போகப் போக சுவாரஸ்யம் குறைந்தது என குற்றச்சாட்டு வந்தது. சிம்பு என்ட்ரி, அவ்வப்போது கெஸ்ட் என்ட்ரி ஓரளவு சுவாரஸ்யம் கூட்ட முயன்றனர். கலர்புல்லாக பைனலும் நடந்துமுடிந்திருக்கிறது.பிக் பாஸ் சீசன் 4 ல் ஏமாற்றம் அடைஞ்ச பாலாவுக்கு அல்டிமேட் கைகொடுத்திருக்கு. ஆமாம் வெற்றி பெற்றதில் அவருக்கு பெரிய மகிழ்ச்சிதான். ஆனாலும் இப்பவும்கூட அவருக்குச் சின்ன ஏமாற்றம்னுதான் ஒரு தகவல் வந்தது.

இது தொடர்பா சிலர்கிட்டப் பேசலாம்னு நினைச்சேன். யாரும் பிடி கொடுக்க மாட்டேங்குறாங்க. என்ற பெருமாளு, `அது என்னனு கண்டுபிடிப்போம், மிச்சத்தை அடுத்த வாரம் பார்ப்போம்' என்றபடி 'பை' சொல்லிக் கிளம்பினார்.