Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: ரசிகர்கள், ரசிகைகள் டார்கெட்... சீரியல் ஹீரோவின் வீக்கெண்ட் அட்ராசிட்டீஸ்!

பிரைம் டைம் பெருமாளு

"வசதியான ரசிகர்கள்னா அவங்க‌கிட்ட இருந்து என்ன, எப்படிக் கறக்க முடியும்னு யோசிச்சு அந்த முயற்சியில வெற்றியும் அடைஞ்சிடுறாராம். போதாக்குறைக்கு அந்த ரசிகர்கள்கிட்டயே 'உங்க ஊர்லயே ஒரு ஃபேன் மீட் அரேஞ்ச் பண்ணலாமே'னு ஐடியாவும் கொடுப்பாராம்."

பிரைம் டைம் பெருமாளு: ரசிகர்கள், ரசிகைகள் டார்கெட்... சீரியல் ஹீரோவின் வீக்கெண்ட் அட்ராசிட்டீஸ்!

"வசதியான ரசிகர்கள்னா அவங்க‌கிட்ட இருந்து என்ன, எப்படிக் கறக்க முடியும்னு யோசிச்சு அந்த முயற்சியில வெற்றியும் அடைஞ்சிடுறாராம். போதாக்குறைக்கு அந்த ரசிகர்கள்கிட்டயே 'உங்க ஊர்லயே ஒரு ஃபேன் மீட் அரேஞ்ச் பண்ணலாமே'னு ஐடியாவும் கொடுப்பாராம்."

Published:Updated:
பிரைம் டைம் பெருமாளு
"சேனல் ஜங்ஷன்ல நம்ம வாராந்திர மீட்டிங்கை ஆரம்பிச்சு முழுசா மூணு மாசம் முடியப் போகுது. இதுவரை இந்த விஷயத்தை எப்படிப் பேசாம இருந்தேன்னுதான் தெரியலை. இனியும் பேசாம இருந்தா நல்லதில்லை..." வரும் போதே பி.பி.யின் முகம் சீரியஸாக இருந்தது. தயாராக பேப்பர் ஸ்ட்ராவுடன் இருந்த இளநீரை எடுத்து நீட்டினோம். நிதானமாகக் குடித்து முடித்தவர், செய்திக்குள் நுழைந்தார்.

"ஒரு சீரியலோ அல்லது ரியாலிட்டி ஷோவோ ஹிட் ஆகிடுச்சுன்னா, அதுல வர்ற ஆர்ட்டிஸ்டுகளுக்கு கிடைக்கிற பேரும் புகழும் இன்னைக்கு அதிகம். சொல்லப்போனா அவங்களுக்கு சினிமா நட்சத்திரங்களுக்கு நிகரா புகழ் கிடைக்குது. ரசிகர்கள் அவங்க மீது வச்சிருக்கிற அன்பு அத்தகையது. ஆனா இந்த அன்பைத் தப்பாப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறாங்க சில ஹீரோக்கள். இதைப் பத்திப் பேசியே ஆகணும்" என்ற பெருமாளை இடைமறித்து,

"'செம்பருத்தி' சீரியல்ல ஹீரோவா நடிச்ச கார்த்திக் அந்த சீரியல்ல இருந்து வெளியேறினதும் 'படம் தயாரிக்கப் போறேன், அதுக்கு நீங்கதான் உதவணும்'னு தன்னுடைய ரசிகர்கள்கிட்டப் பணம் கேட்டாரே, அந்த விஷயத்தைச் சொல்றீங்களா?" எனக் கேட்டோம்.

"பொறுமை... பொறுமை..." என்றவர் தொடர்ந்தார்.

செம்பருத்தி சீரியல்
செம்பருத்தி சீரியல்

"'செம்பருத்தி' கார்த்திக் அந்த சீரியல்ல இருந்து வெளியேறின நாள் முதல் அந்த சீரியலின் ரேட்டிங் குறையத் தொடங்கினது நிஜம்தான். அவருக்காகவே அந்த சீரியலைப் பார்த்தவங்க நிறைய. அவர் தரப்புல ஒரு உரிமையில் ரசிகர்கள்கிட்ட நிதி கேட்டதாச் சொன்னாங்க. சில பல லட்சங்கள் அவருக்கு ரசிகர்கள் அனுப்பி வச்சதும் நடந்தது. ஆனா அந்தப் பணத்துக்கு வரவு செலவு கொடுக்கப்பட்டதா அல்லது அந்தப் பணத்தைப் போட்டு படம் எடுக்கிற வேலைகள்தான் தொடங்குச்சான்னு இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை.

கார்த்திக்கிடம் இதுபத்திப் பேசலாம்னாலும், அவர் வெளிப்படையா எதையும் பேசற டைப் இல்லை. 'அவர் சினிமா பேக்ரவுன்ட் இருக்கிற குடும்பத்துல இருந்து வந்தவர்தான். படம் எடுக்கணும்னா ரசிகர்கள்கிட்ட இருந்து எதுக்குப் பணம் கேட்கணும்'னு சிலர் வெளிப்படையாகவே கேக்கறாங்க'' என நிறுத்தினார்.

"பெருமாளு இங்க பேசிட்டா இல்லையா, அவர் தரப்புல இருந்து ரியாக்ஷன் நிச்சயம் வரும்னு நம்புவோம்" என்றோம்.

சில நிமிட இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்தார்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
"கார்த்திக் மேட்டர் பரவால்ல. திடீர்னு புகழடைஞ்ச இன்னொரு ஹீரோ விவகாரம்தான் என்னைக் கடுப்பாக்கிடுச்சு. 'வண்ண'த் தொலைக்காட்சியில் அவர் நடிச்ச சீரியல் ஓரளவு பேர் வாங்கினதுமே அவருடைய அலப்பறை ஆரம்பமாகிடுச்சாம்.

'நான் உங்க ரசிகர்'னு யாராவது தெரியாத்தனமா இவருடைய மொபைலுக்கு மெசேஜ் அனுப்பிட்டாங்கன்னா அவ்ளோதான். 'செத்தான் சேகரு' கதைதான். அந்த ரசிகன்/ரசிகையின் விலாசம் வாங்கி இருப்பிடம் தேடி இவரே சர்ப்ரைஸா போயிடுறாராம். அதாவது வலிந்தே போறதுதான். ஆனா கேட்டா, 'இந்த ஊர்ல வேற ஒரு வேலையா வந்தேன், அப்படியே உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான்'னு அளந்துவிடுறதாம்.

நாம டிவியில பார்க்கிற நட்சத்திரம் நம்ம வீட்டுக்கு வர்றப்ப, அந்த ரசிகன் அடையற‌ சந்தோஷத்தைக் கேக்கவா வேணும்? அந்த ஆனந்தத்தை மனுஷன் நல்லா பயன்படுத்திக்கிறாராம்.

நேரடியா ரசிகர்கள் வீட்டுக்குப் போறதே அவங்களுடைய ஃபைனான்சியல் ஸ்டேட்டஸைத் தெரிஞ்சுக்கத்தான்னு சொல்றாங்க. வசதியான ரசிகர்கள்னா அவங்க‌கிட்ட இருந்து என்ன, எப்படிக் கறக்க முடியும்னு யோசிச்சு அந்த முயற்சியில வெற்றியும் அடைஞ்சிடுறாராம்.

பணம்
பணம்

ஊர் ஊருக்கு இப்படிப் பிடிச்சு வச்சிருக்கிற (?) ரசிகர்கள்கிட்ட இருந்து இவருக்குத் துணிமணி, பரிசுப் பொருள்கள்னு வந்துட்டே இருக்கிறதாச் சொல்றாங்க. போதாக்குறைக்கு அந்த ரசிகர்கள்கிட்டயே 'உங்க ஊர்லயே ஒரு ஃபேன் மீட் அரேஞ்ச் பண்ணலாமே'னு ஐடியாவும் கொடுப்பாராம்.

இவ்வளவு ஏங்க, அவரு போட்டிருக்கிற ஷர்ட் பேண்ட்ல இருந்து குடிக்கிற தண்ணீர் பாட்டில் வரை இப்படி வர்றதுதான். இப்ப அவருக்கு சீக்கிரமே கல்யாணமும் நடக்கப்போகுது. 'கல்யாணத்தையும் ஸ்பான்சர்லயே நடத்தி முடிச்சாலும் ஆச்சரியப் படறதுக்கில்லை'ன்னு டிவி வட்டாரத்துல நமுட்டுச் சிரிப்போட சொல்றாங்க.

சமீபத்துல புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண் ரசிகை இவருக்கு அறிமுகமாகியிருக்காங்க. வசதியான குடும்பம்தானாம். வார இறுதின்னா புதுச்சேரியில இருந்து அந்தம்மா காரை இவர் எடுத்துட்டு வந்துடுறாராம். மொத்தத்துல இவருடைய அக்கப்போர் தாங்க முடியலைங்கிறாங்க. புதுசா வந்த டிவியில தலையைக் காட்டிட்டே இவ்ளோ அட்ராசிட்டின்னா முன்னணி சேனல்களுக்கு இவர் வந்தா அவ்ளோதான்'ங்கிறாங்க'' என்ற பெருமாளு,

"சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். ஒண்ணு அவரு திருந்தணும்; அல்லது அவருடைய ரசிகர்களுக்காச்சும் இந்த விஷயம் போய்ச் சேர்ந்திடுமில்லையா, அது போதும்" என்றபடி இருக்கையைக் காலி செய்தார்.