Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: சிநேகனின் ஏமாற்றம்; விளக்கம் கேட்டு இமெயில், விரக்தியில் ஆண்டாள் பிரியதர்ஷினி!

பிரைம் டைம் பெருமாளு

இந்த வாரம் நம்ம பிரைம் டைம் பெருமாளு கவிஞர் சிநேகன் பிக் பாஸ் அல்டிமேட்டிலிருந்து வெளியேறியதன் பின்னணி குறித்தும், பொதிகை டிவி ஆண்டாள் பிரியதர்ஷினி சந்தித்துவரும் பிரச்னைகள் குறித்தும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைத் தந்திருக்கிறார்.

Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: சிநேகனின் ஏமாற்றம்; விளக்கம் கேட்டு இமெயில், விரக்தியில் ஆண்டாள் பிரியதர்ஷினி!

இந்த வாரம் நம்ம பிரைம் டைம் பெருமாளு கவிஞர் சிநேகன் பிக் பாஸ் அல்டிமேட்டிலிருந்து வெளியேறியதன் பின்னணி குறித்தும், பொதிகை டிவி ஆண்டாள் பிரியதர்ஷினி சந்தித்துவரும் பிரச்னைகள் குறித்தும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைத் தந்திருக்கிறார்.

பிரைம் டைம் பெருமாளு
"`கமல் சார் இல்லாத வீட்டுல எனக்கென்ன வேலை' எனத் தானாகவே பிக் பாஸ் வீட்டிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேறினார் இல்லையா..." என்ற கேள்வியுடன் சேனல் ஜங்ஷனுக்கு என்ட்ரி தந்தார் பிரைம் டைம் பெருமாளு.

"வெளியேறியதுடன் கமல் ஷோவை விட்டுப் போனதுக்கு ஷூட்டிங் ஷெட்யூல் மட்டுமே காரணமில்லைனு கூடச் சொன்னாரே..." என நம் பங்குக்கு பாயின்டை எடுத்துக் கொடுத்தோம்.

"கிட்டத்தட்ட அதே மாதிரிதான் இந்த வார எவிக்‌ஷன் சம்பவமும். கடந்த சனிக்கிழமை சிம்பு கலந்துகிட்ட ஷூட்டிங் முடிவுல எலிமினேட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் சிநேகன். சிநேகன் இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டப்பவே நிறைய தகவல்கள் உலா வந்தன. முதன் முதல்ல பிக் பாஸ்ல கலந்துகிட்டப்ப சரி, ஆனா அல்டிமேட்ல அவர் திரும்பவும் எண்ட்ரி ஆனதை சிலர்... குறிப்பா பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்கள் விமர்சனம் செஞ்சாங்க.

'நிகழ்ச்சியை நடத்தறவர் ஒரு கட்சியின் தலைவரா இருக்கிறார். அதே கட்சியில பொறுப்புல இருக்கிற இவரும் ஒரு போட்டியாளரா அந்த நிகழ்ச்சிக்குள் போறார். இந்தச் சூழல்ல அந்த வீட்டுல இருந்து இவரைப் பத்தின நெகட்டிவான விஷயங்கள் எப்படி வெளியில வரும்’னு கமல் காதுபடவே சிலர் கேட்டாங்களாம்."

சிநேகன்
சிநேகன்

"சரிதானே..." என்றபடி லெமன் டீ யை நீட்டினோம்.

"லெமன் ஓகே... ஆனா அடுத்த வாரமெல்லாம் டீ வேண்டாம்; ஜூஸ் சொல்லிடுங்க, வெயில் உம்ம கண்ணுக்குத் தெரியலையா?" என்றபடி தொடர்ந்தார்.

"அந்த நிகழ்ச்சிக்கு ரொம்பவே நெருக்கமான சிலர் இப்படிச் சொல்றாங்க...

‘திரும்பவும் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு செலக்ட் ஆனதும் அவ்வளவு உற்சாகமா இருந்தார் சிநேகன். இந்த முறை டைட்டிலே அவருக்குத்தான்னுகூட சில கிசுகிசுக்கள் கேட்டன. ஆனா அவருடைய உற்சாகமெல்லாம் கமல் நிகழ்ச்சியில இருந்து விலகினதும் காணாமப் போயிடுச்சு. வனிதா வாய்விட்டுச் சொல்லிட்டாங்க. இவர் சொல்லலை அவ்ளோதான்!

இவங்க சொல்றதை ஆமோதிக்கிற இன்னொரு சோர்ஸ், தனக்கு ரொம்பவே நெருக்கமான சிலர்கிட்ட, 'கமல் சார் மட்டும் இருந்தா இந்த முறை எனக்குத்தான் டைட்டில் கிடைச்சிருக்கும்’னு மனுஷன் ஆதங்கப் பட்டார்னும் சொல்லுது’’ என்ற பி.பி. அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார்.

"சிநேகமே தருகிறேன்

சிலுவையில் அறைபவர்களுக்கும்

என்னைப் புனிதமாக்குகிறார்கள் அவர்கள்

வாழ்க என் எதிரிகள்

உயிரோடு இருக்கிறேன்

என் எதிரிகளால்..."

"என்ன பி.பி. திடீர்னு கவிதை?"

"நான் எழுதல. இது ஆண்டாள் பிரியதர்ஷினியின் வரிகள். அரசுத் தொலைக்காட்சியான பொதிகையில் புரோகிராம் ஹெட்டா இருந்தவர். இவருடைய அப்பாவுக்கு மறைந்த இந்திரா காந்தி மீது அதிக பாசம். அதனாலயே இவர் பிறந்ததும் இவருக்கு பிரியதர்ஷினிங்கிற பெயரையும் சேர்த்து வச்சாங்களாம்.

கடந்த சில வருடங்களாக துறை ரீதியா இவருக்கு அவ்வளவு டார்ச்சராம். சென்னை பொதிகையில் இருந்தவரை சின்ன ஸ்டேஷனான புதுச்சேரிக்கு மாத்தினாங்க. கிட்டத்தட்ட அது பணி இறக்கம் மாதிரிங்கிறாங்க. அதனால வி.ஆர்.எஸ் கொடுத்தாங்களாம் ஆண்டாள். ஆனா அதையும் ஏத்துக்கலையாம். ‘உங்க மேல வழக்கு இருக்கு. அதுல இருந்து தப்பிக்க நீங்க வி.ஆர்.எஸ் தர்றீங்க, அதனால ஏத்துக்க மாட்டோம்னு சொல்றாங்களாம்’" எனச் சில நிமிடங்கள் மௌனமானார்.

ஆண்டாள் பிரியதர்ஷினி
ஆண்டாள் பிரியதர்ஷினி

"என்ன வழக்காம்?" என்றதும் தொடர்ந்தார்.

"பல தகவல்கள் சொல்றாங்க. பெரியார் தொடர்பான நிகழ்ச்சிகள்ல இவங்க கலந்துகிட்டாங்க. அது சிலர் கண்ணை உறுத்துச்சுன்னு சொல்றாங்க. தவிர சென்னைப் பொதிகையில, நிகழ்ச்சிகள்ல இவங்க பண்ண நினைச்ச சில புதிய முயற்சிகளைப் பிடிக்காதவங்க நிதி முறைகேடுனு பெட்டிஷன் போட்டதாகவும் தெரிய வருது.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவுல இவங்க கமல்ஹாசனுடன் மேடை ஏறியிருக்காங்க. அங்க பரஸ்பரம் மரியாதை செலுத்தறப்ப கமலும் இவங்களும் ஒருவருக்கொருவர் அணைச்சுகிட்டதையும் ஒரு புகாரா டெல்லி வரை தட்டிவிட்டாங்களாம் சிலர். தொடர்ந்து துறையில இருந்து விளக்கம் கேட்டு ஏகப்பட்ட மின்னஞ்சல்களாம். இப்பவும் அவங்களுக்கு பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லைனு சொல்றாங்க" என்றபடி தன் புல்லட்டில் பறந்தார் பெருமாளு.