Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: தமிழக பா.ஜ.க vs மாரிதாஸ் - என்ன பிரச்னை? சித்ரா மரணத்தில் மர்மம் விலகுமா?

பிரைம் டைம் பெருமாளு

"இப்போதுதான் அந்தக் கட்சி ஆட்சியில் இல்லையே... எனவே சித்ரா மரணம் தொடர்பாக அந்த அமைச்சர் மகன் மீது விசாரணை தொடங்கி இருக்க வேண்டுமில்லையா?! ஆனால்..."

பிரைம் டைம் பெருமாளு: தமிழக பா.ஜ.க vs மாரிதாஸ் - என்ன பிரச்னை? சித்ரா மரணத்தில் மர்மம் விலகுமா?

"இப்போதுதான் அந்தக் கட்சி ஆட்சியில் இல்லையே... எனவே சித்ரா மரணம் தொடர்பாக அந்த அமைச்சர் மகன் மீது விசாரணை தொடங்கி இருக்க வேண்டுமில்லையா?! ஆனால்..."

Published:Updated:
பிரைம் டைம் பெருமாளு

"கொளுத்திய சூரியனுக்கு கொஞ்ச நாளைக்கு லீவு கொடுத்து கோடை மழையைக் கண்ணுல காட்டிய இயற்கைக்கு நன்றி" என்றவாறே வந்து இறங்கினார் பிரைம் டைம் பெருமாளு.

தயாராக இருந்த 'மசாலா டீ'யை எடுத்து நீட்டினோம். ஒரு சிப் உறிஞ்சிக் குடித்துவிட்டு செய்திக்குள் நுழைந்தார்.

"'தமிழகத்தின் செல்லக் குரலைத் தேடுகிறோம்' எனச் சொல்கிற 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி தெலுங்கு ஏரியாவுக்குச் செல்கிறது. தெலுங்கில் 'ஸ்டார் மா' சேனலில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் நடுவர்களாக மனோ, சித்ரா, ஹேமச்சந்திரா, ரனீனா ரெட்டி ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8

இன்றைக்குப் பிறந்த நாளைக் கொண்டாடும் 'சூப்பர் சிங்கர்' தமிழின் இயக்குநரான ரஊஃபாவுக்கு (Ravoofa) வாழ்த்துக் கூறிவிட்டு, சூப்பர் சிங்கர் தமிழ் ஜூனியர் சீசன் 8 பற்றிக் கேட்டேன்.

'கிளைமேக்ஸை நெருங்கிட்டிருக்கு பெருமாளு. ரெண்டு மூணு வாரத்துல ஃபைனலுக்கு கூப்பிடுறேன்' எனச் சுருக்கமாக முடிச்சுக்கிட்டார்" என்றவரிடம்,

"டிவி சேனல்களில் வேலை பார்க்கிறவர்களின் பின்னணி குறித்து பரபரப்பு வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் குறித்து வெளியான சில செய்திகளைப் பெருமாளு கவனித்தாரா தெரியலையே..." என்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாரிதாஸ்
மாரிதாஸ்

"பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவா அவர் வெளியிட்ட வீடியோக்கள் சலசலப்பை உண்டு பண்ணி அவர் அரெஸ்ட் ஆனதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த சங்கதி. மேற்படி வீடியோக்கள் மூலம் டெல்லி வரை அவருடைய செல்வாக்குப் போயிருக்குன்னும், அது பிடிக்காத உள்ளூர் நிர்வாகிகள் அவரை எப்படி மட்டம் தட்டலாம்னு யோசிக்கறாங்கன்னும் வெளியான செய்தி உண்மைதான். ஆனா கட்சியின் மாநிலத் தலைமையுமே அவருக்கு எதிராக் காய் நகர்த்துதுங்கிறதுல எந்தளவு உண்மைன்னு தெரியலை. நான் விசாரிச்ச வரை, மாரிதாஸ் இதைப் பத்தியெல்லாம் அலட்டிக்காம, தன்னுடைய வழக்கமான வீடியோ மூலம் வகுப்பெடுக்கிற வேலையைத் தொடர்ந்து செய்திட்டிருப்பார்னுதான் சொல்றாங்க'' என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா விவகாரம் ஓன்றரை ஆண்டு கடந்த நிலையில் பரபரப்பாகப் போகிறதே, என்னதான் நடக்கிறது?" என அடுத்த கேள்விக்கு நகர்ந்தோம்.

"'ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை' என்கிற டயலாக் வேறு எதற்குப் பொருந்துதோ இல்லையோ சித்ரா விஷயத்துக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். சித்ரா மரணமடைந்த தருணத்தில் அப்போதைய இரண்டு அமைச்சர்களின் மகன்கள் பெயர் அடிபட்டன. ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் அந்தச் செய்தி அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை.

சித்ரா - ஹேம்நாத்
சித்ரா - ஹேம்நாத்

இப்போது திரும்பவும் சித்ரா மரணம் குறித்து வாய் திறந்திருக்கும் அவரது கணவர் ஹேம்நாத் 'தன்னை சிலர் மிரட்டுகிறார்கள்' என வெளியிட்டுள்ள பெயர் பட்டியலில் அன்றைய அமைச்சரின் மகன் பெயரும் இருக்கிறது. இப்போதுதான் அந்தக் கட்சி ஆட்சியில் இல்லையே, அந்த அமைச்சர் மகன் மீது விசாரணை தொடங்கி இருக்க வேண்டுமில்லையா... ஆனால், அதுதான் நடந்ததாகத் தெரியவில்லை. இந்த இடத்தில்தான் அந்தப் பழமொழியைச் சொல்ல வேண்டியிருக்கிறது'' என்ற பெருமாளு,

"காவல்துறை முழுச் சுதந்திரத்துடன் விசாரித்தால் மட்டுமே சித்ரா மரணத்தில் நீடிக்கும் மர்மத்துக்கு விடை கிடைக்கும். காவல் துறையின் லகான் முதலமைச்சர் கையில்தான் இருக்கிறது'' என முத்தாய்ப்பாய் முடித்து விட்டு, டாடா காட்டிக் கிளம்பினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism