Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: ஏலத்துக்கு வந்த வீடு... வீதிக்கு வரும் சூழலில் `சரவணன் மீனாட்சி’ நடிகர் மனைவி!

'சரவணன் மீனாட்சி' ராஜசேகர்

இந்த வாரம் நம்ம பிரைம் டைம் பெருமாளு ரெண்டு எக்ஸ்க்ளூசிவ் செய்திகளோட வந்திருக்காரு.

பிரைம் டைம் பெருமாளு: ஏலத்துக்கு வந்த வீடு... வீதிக்கு வரும் சூழலில் `சரவணன் மீனாட்சி’ நடிகர் மனைவி!

இந்த வாரம் நம்ம பிரைம் டைம் பெருமாளு ரெண்டு எக்ஸ்க்ளூசிவ் செய்திகளோட வந்திருக்காரு.

Published:Updated:
'சரவணன் மீனாட்சி' ராஜசேகர்

சேனல் ஜங்ஷனுக்காக வந்தமர்ந்த பெருமாளு ஐந்து நிமிடங்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி இருந்தார்.

"என்ன பி.பி சின்னத்திரையில இந்த வாரம் எதுவும் நடக்கலையா?" என்றோம்.

"'வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்’ங்கிற பாட்டுக்கு வாயசைச்சவர் நடிகர் ’ராபர்ட்’ ராஜசேகர். திறமையான ஒளிப்பதிவாளரா, இயக்குநரா சினிமாவுல இருந்தார். பாரதிராஜா இவரை ஹீரோவாகவே ஆக்கினார். பிரபல நடிகையுடன் முதலில் நடந்த கல்யாணம் தோல்வியில் முடிய இரண்டாவதா ’தாரா’ங்கிறவங்களைக் கல்யாணம் செய்திருந்தார். சினிமா ரிட்டயர்ட்மெண்ட் கொடுத்த பிறகு சீரியல் பக்கம் வந்தவருக்கு ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் நல்ல பேர் தந்தது. 2019ல் இவர் திடீரென இறந்துட்டார்.

தாரா ராஜசேகர்
தாரா ராஜசேகர்

இறக்கும் போது ராஜசேகர் சென்னை வடபழனியில ஒரு வீட்டை வாங்கியிருந்தார். பாதிப் பணத்தைப் பில்டருக்குக் கட்டிட்டவர் மீதிப் பணத்துக்கு எஸ்.பி.ஐ வங்கியில லோன் வாங்கியிருந்தார்.

ராஜசேகர் - தாரா தம்பதிகளுக்குப் பிள்ளைகள் இல்லை. கணவர் இறப்புக்குப் பிறகு தாராவால் மீதிக் கடனை அடைக்க முடியலை. சொந்தபந்தங்கள்லயும் அவங்களுக்கு ஆதரவு தர யாரும் முன் வரலை. இத்தனைக்கும் ராஜசேகர் தன்னுடைய தங்கையை எம்,ஜி.ஆர் குடும்பத்துலதான் கட்டிக் கொடுத்திருந்தார்.

ஆதரவில்லாத நிலையில ராஜசேகர் ஆசை ஆசையாய் வாங்கிய அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்த வாடகையை வச்சுத்தான் வயித்தை நிரப்பிட்டிருந்தாங்களாம் தாரா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சூழல்ல மீதிக் கடனைக் கட்டச் சொல்லி வங்கி தாராவுக்கு நெருக்கடி தர, உதவி கேட்டு இயக்குநர் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம்னு சினிமா டிவி தொடர்பான பல இடங்களுக்கு ஏறி இறங்கினார் தாரா. எந்தப் பலனும் இல்லை. கடைசியா முதல்வரைச் சந்திக்கவும் முயற்சி செய்து, அதுவும் நடக்கலைங்கிறாங்க. இப்ப வங்கி, வீட்டை ஏலம் விட முடிவு செய்து நோட்டிஸ் ஒட்டிட்டுப் போயிட்டாங்களாம்.

'இந்த வீடு இல்லைன்னா அடுத்த மாசத்துல இருந்து சாப்பாட்டுக்கு என்ன செய்வேன்னு தெரியலை. ரோட்டுலதான் குடியிருக்கணும் போல' எனக் கண் கலங்குகிறார் தாரா.

இந்த விஷயம் முதல்வருக்கோ அல்லது அரசின் கவனத்துக்கோ போகும்; ஏதாவது நல்லது நடக்கும்னு நம்புவோம்" என்ற பெருமாளின் கருத்தை ஆமோதித்துத் தலையசைத்தோம்.

ஜெனிபர்
ஜெனிபர்

"வேறு செய்தி?"

"டிஜிட்டல் யுகத்துல வர வர எது உண்மை, எது பொய்னு கண்டு பிடிக்க முடிய மாட்டேங்குது. சில தினங்களுக்கு முன்னாடி யூடியூப் சேனல் ஒண்ணுல தான் ஒருத்தரைக் காதலிக்கிறதா ஓப்பனாச் சொன்னார் ‘கில்லி’ புகழ் நடிகை ஜெனிபர். அந்தப் பேட்டி வெளியானது முதல் அவருக்கு ஒரே வாழ்த்து மழை. ’யாரு உங்க லவ்வர்’னு ரசிகர்கள் கேட்டபடி இருக்காங்களாம்.

ஆனா, உண்மை என்னன்னா அவங்க யாரையும் காதலிக்கவே இல்லையாம். ஜோதிடர் ஒருத்தருக்கு புரொமோஷன் தர்ற ஒரு நிகழ்ச்சியாம் அது. அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டு ‘ஆமா நான் காதலிக்கிறேன்’னு சொல்லிட்டு, இப்ப ‘இல்லைங்க அது ச்சும்மா’ என்கிறார் ஜெனி.

’எதுக்கும் ஒரு அளவு வேண்டாமா’ எனக் கேட்டு சில ரசிகர்கள் ஜெனிபரைக் கோபித்துக் கொண்டார்களாம்."

அது சரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism