Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: `வேலன்' முகேனுக்கு வந்த சிக்கல்; சைத்ரா நடிச்சா கயல், ஸ்ரேயா நடிச்சா ரஜினி!

பிரைம் டைம் பெருமாளு

உங்களுக்கு டிவி தொடர்பா வரும் எல்லா சந்தேகங்களையும் தாராளமா கேட்டு நீங்களும் தெரிஞ்சுக்கலாம், கமென்ட் பாக்ஸ் வழியா! வணக்கம் சொல்றாரு, நம்ம பிரைம் டைம் பெருமாளு!

பிரைம் டைம் பெருமாளு: `வேலன்' முகேனுக்கு வந்த சிக்கல்; சைத்ரா நடிச்சா கயல், ஸ்ரேயா நடிச்சா ரஜினி!

உங்களுக்கு டிவி தொடர்பா வரும் எல்லா சந்தேகங்களையும் தாராளமா கேட்டு நீங்களும் தெரிஞ்சுக்கலாம், கமென்ட் பாக்ஸ் வழியா! வணக்கம் சொல்றாரு, நம்ம பிரைம் டைம் பெருமாளு!

Published:Updated:
பிரைம் டைம் பெருமாளு
வாரத்தின் முதல் வேலை நாள்னா இனி விகடன்.காம்ல இவரைப் பார்க்கலாம். அடைமொழி என்னவோ ’பிரைம் டைம்’தான்னாலும் ஆல் டைம் டிவியில நடக்கறது, சீரியலுக்குப் பின்னாடி நடக்கறது, ஷூட்டிங் ஸ்பாட், ரியாலிட்டி ஷோ அலப்பறைகள்ன்னு ஜங்ஷன்ல நின்னபடி நிறைய நியூஸ் தர ஆர்வமா இருக்கிறார்.
டிவி
டிவி

’அடுத்து எந்த டிவியில என்ன சீரியல்?’

’உங்க அபிமான சீரியல் நடிகை எவ்ளோ சம்பளம் வாங்குறாங்க?’

’சின்னத்திரையில் இந்த ரீல் ஜோடி, ரியல் ஜோடியாவும் ஆகப்போறாங்களாமே?’

‘ஆமா, அந்த ஹீரோ ஏன் சீரியலை விட்டு வெளியேறினார்?’

இப்படி உங்களுக்கு வரும் எல்லா சந்தேகங்களையும் தாராளமா கேட்டு நீங்களும் தெரிஞ்சுக்கலாம், கமென்ட் பாக்ஸ் வழியா.

பிறகென்ன, நறுக்னு நாலு செய்தியோடு பயணத்தை ஆரம்பிச்சிடலாங்களா?

இப்படிப் பண்ணலாமா முகேன்? தாய்க் கழகத்தின் கோபம்!

பிக் பாஸ் சீசன் 3ல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்ட பிறகுதான் மலேஷியாவைச் சேர்ந்த முகேன் ’பிக் பாஸ்’ முகேன் ஆனார். தமிழர் அதிகம் வசிக்கும் மலேஷியாவில் தங்களுக்கு ஆடியன்ஸ் வேண்டுமென நினைத்தே விஜய் டிவி அவரை அழைத்து வந்தது. ஆனால், டைட்டில் வென்ற மூன்றே மாதத்தில் முகேன் வேற மாதிரி மாறிட்டாராம்.

தன் தாய்க் கழகமான விஜய் டிவியின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் சிலரையே மதிக்கவில்லையாம். இதனால் இரு தரப்புக்கும் முட்டல், மோதல்.

'வேலன்' முகேன்
'வேலன்' முகேன்

இந்த விபரம் தெரியாமல் அவரை வைத்து ‘வேலன்’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவிக்கு விற்கப் போயிருக்கிறார்.

ஒரே வார்த்தையில் ‘நோ’ என்கிற பதில் கிடைத்திருக்கிறது. "பிக் பாஸ்ல வந்ததாலதான் நான் அவரை ஹீரோவா வச்சுப் படமெடுத்தேன்" எனச் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர். அப்போதும் இறங்கவில்லை சேனல். வேறு வழியில்லாமல் ஜீ தமிழுக்குப் படத்தைக் கொடுத்திருக்கிறார் அந்தத் தயாரிப்பாளர்.

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு மறைக்க நினைக்கலாமா?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சீரியல் ‘இரட்டை ரோஜா’. பிக் பாஸ் போய் அநியாயத்துக்குப் பிரபலமானாரே ஷிவானி, அவருக்கு ஜோடியாக இந்த சீரியல்ல நடிச்சவர் அக்‌ஷய் கமல். மனுஷனுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு! ஆனா பாருங்க, எங்கேயும் அதுபத்திச் சொல்லிக்கவே மாட்டேங்கிறார். மனைவியின் போட்டோவைக் கூட எங்கயும் காட்டறதில்லை. ‘ஏம்ப்பா இப்படி’ன்னு யாராச்சும் கேட்டா, ’கரியர்ல அதனால ஏதாச்சும் பாதிப்பு உண்டாச்சுன்னா’ என இழுக்கிறாராம்.

இந்த மாதிரி சிந்தனையெல்லாம் நம்ம தமிழ் சினிமா/டிவி சமூகம் எப்போவோ கடந்து வந்திருச்சே சார்! சீக்கிரம், அந்த நல்ல செய்தியை வெளியில சொல்லுங்க.

வானத்தைப் போல
வானத்தைப் போல

ஊர் வாய் மூடணும்னா நம்ம வாய் திறக்கணும்!

‘வானத்தைப் போல’ சீரியல்ல அருமைத் தங்கச்சியா நடிச்ச ஸ்வேதாவும் அண்ணனா நடிச்ச தமன்குமாரும் அடுத்தடுத்து வெளியேறினாங்க இல்லையா, வெளியேற்றத்துக்கான காரணம்னு டிவி ஏரியாவுல நிறையப் பேச்சுகள் ரவுண்டு கட்டுது.

"சம்பளம் கூட்டிக் கேட்டாங்க ஸ்வேதா. தயாரிப்புத் தரப்புல அதைத் தர மறுத்தாங்க. அதான் கிளம்பிட்டாங்க" என்கிறார்கள் சிலர்.

"தமன்குமார் டிவியில நடிக்க வந்ததே பொழுதுபோக்குக்குத்தான். அவருக்கு அடையார்ல பெரிய பங்களா இருக்கு. அப்பா அம்மா டாக்டர். சீரியல்ல நடிச்சுச் சம்பாதிக்கணும்னு இல்ல, அதனால யாராவது ஏதாவது சொல்லி இருப்பாங்க, கிளம்பியிருப்பார்" – இது வேறு சிலர்.

"ஒண்ணுமில்லய்யா, அண்ணன் தங்கையா சீரியல்ல நடிச்சவங்களூக்கு இடையில ’லவ்’வாம்" என்கிறார்கள் இன்னும் சிலர்.

ஊர் வாயை மூடணும்னா நம்ம வாயைத் திறந்து நடந்ததைச் சொல்றதுதான் நல்லதுன்னு அந்த ரெண்டு பேர்கிட்டயும் யார்தான் சொல்வாங்களோ?

சைத்ரா வந்தா கயல்... ஸ்ரேயா வந்தா ரஜினி!

’சீரியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ங்கிற மேட்டர் இது. ‘ராஜா ராணி’, ‘செம்பருத்தி’ சீரியல்கள் ஒரே கதைதாங்கிறது சீரியல் ரசிகர்கள் பலருக்கும் தெரியும். ஏன், தலைப்புல கூட ஒரு இடத்துல ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’னு வச்சா இன்னொரு இடத்துல ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’னு இல்லையா? சேனல்களுடைய போட்டி அந்த மாதிரி.

ரஜினி
ரஜினி

இப்ப ’கயல்’னு ஒரு சீரியல்... ஒரு பெண், தன் கூடப் பிறந்தவங்களை, குடும்பத்தை ஒத்தை ஆளா நின்னு காப்பாத்தற கதை. சன் டிவியில தொடங்கி நல்ல டி.ஆர்.பி.யும் கிடைக்கத் தொடங்கி இருக்கு. பின்னாடியே அதே டைப் கதை வராமப் போனா எப்படி? ‘ரஜினி’ங்கிற பேர்ல ஜீ தமிழ்ல வந்திருக்குன்னு சொல்றாங்க.

சைத்ரா நடிச்சா கயல், ஸ்ரேயா நடிச்சா ரஜினி, அவ்ளோதாங்க வித்தியாசம்!