Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: `சாரி வரமாட்டேன்'- பிக்பாஸ் ஓடிடிக்கு நோ சொன்ன பிரபலம்; அந்த சீரியலால் நஷ்டமா?

பிக் பாஸ் சீசன் 5

நம்ம பிரைம் டைம் பெருமாளு, இந்த வாரம் பிக் பாஸ் ஓடிடி அப்டேட், சீரியல் அப்டேட்ன்னு பல எக்ஸ்க்ளூசிவ் தகவல்களுடன் வந்திருக்கிறார். வாங்க பார்க்கலாம்!

பிரைம் டைம் பெருமாளு: `சாரி வரமாட்டேன்'- பிக்பாஸ் ஓடிடிக்கு நோ சொன்ன பிரபலம்; அந்த சீரியலால் நஷ்டமா?

நம்ம பிரைம் டைம் பெருமாளு, இந்த வாரம் பிக் பாஸ் ஓடிடி அப்டேட், சீரியல் அப்டேட்ன்னு பல எக்ஸ்க்ளூசிவ் தகவல்களுடன் வந்திருக்கிறார். வாங்க பார்க்கலாம்!

Published:Updated:
பிக் பாஸ் சீசன் 5

"போன வருஷம் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஷூட் சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி. செட்டில் நடந்துட்டிருந்த போதுதான் பூந்தமல்லி தாசில்தார் அதிரடியா செட்டுக்குள் புகுந்து ஷோவை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டார். நூறு நாள் முடியறதுக்குள் நிகழ்ச்சியை முடிக்க வேண்டியதாகிடுச்சு. இந்த வருஷம் தமிழ் பிக் பாஸ்க்கும் திருவாளர் கொரொனா புண்ணியத்துல அதே நிலை வந்திடுமோனு ஒரே கவலையில இருந்தாங்க சம்பந்தப்பட்டவங்க. ஆனா எந்தப் பிரச்னையும் இல்லாம ஒருவழியா ஷோ முடிவடைஞ்சதுல ’அப்பாடா’ன்னு நிம்மதிப் பெருமூச்சு விடுறாங்க" என ’பிக் பாஸ்’ தகவலுடன் வந்த பிரைம் டைம் பெருமாளிடம், "அதான் ஒ.டி.டி. பிக் பாஸ் அல்டிமேட் வரப் போகுதே’ அதுபத்தி ஏதாச்சும் எக்ஸ்க்ளூசிவ் இருக்குமே" என்றோம்.

"போட்டியாளர்கள் லிஸ்ட் இன்னும் இறுதி செய்யப்படலை. ஆனா பழைய போட்டியாளர்களுக்கு வலை வீசினப்ப நடந்த ஒரு விஷயத்தை மட்டும் சொல்றேன்" என்றவர் அந்தத் தகவலை அப்படியே தந்தார்.

பிக் பாஸ் செட்
பிக் பாஸ் செட்

‘இப்போ நான் அதுக்குச் சரிப்பட்டு வர மாட்டேன்’!

முதல் சீசன்ல அநியாயத்துக்குப் பிரபலமாகி ஆர்மியெல்லாம் வச்சிருந்த நடிகையிடம் பேசி முதல் ஆளா அவங்ககிட்டச் சம்மதம் வாங்கிட்டதாத் தெரியுது. அவர் சம்மதிச்சதும் நேரா சேனல் தரப்பு போனது, அதே ஷோவுல நடிகையுடன் மெடிக்கல் கிஸ் ஷேர் பண்ணிக்கிட்டாரே, அவர்கிட்டதானாம்.

விஷயத்தைப் பொறுமையா கேட்டவர், "எல்லாம் சரி, ஆனா இப்பதான் கல்யாணம் முடிஞ்சு வாழ்க்கை ஒரு சரியான ரூட்ல பயணிக்கத் தொடங்கி இருக்கு. அதனால இப்போ நான் அதுக்குச் சரிப்பட்டு வர மாட்டேன்" எனச் சொல்லி விட்டாராம்.

‘விடு ஜூட்’னு ஓடிட்டாருக்கும்... சரி அடுத்த நியூஸ்?

"ஆபரேஷன் சக்ஸஸ், ஆனா பேஷண்டு போயிட்டார்’னு சொல்ற கதை இது. இப்பவும் பிரைம் டைம்ல ஒளிபரப்பாகிட்டு இருக்கிற ‘செம்பருத்தி’ சீரியலை ஆரம்பத்தில் தயாரிச்ச தயாரிப்பாளர் அந்த சீரியலால் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டமடைந்ததாக பார்க்கிறவங்ககிட்டெல்லாம் ஆதங்கப்படுறார்" என அந்த விஷயத்தை விளக்கினார்.

நஷ்டம் ஒரு கோடி அப்பு!

அந்தத் தயாரிப்பாளர் பேரு ஜமால். சீரியல் தயாரிப்புனு பார்த்தா ’செம்பருத்தி’தான் அவருக்கு முதல் சீரியலாம். சீரியலும் நல்ல பேரு வாங்கி டி.ஆர்.பியில டாப்ல வந்தது. ஆனா திடீர்னு ஒருநாள் "அந்த சீரியலை இனி நான் தயாரிக்கலை, ஆளை விடுங்க"னு சொல்லி ஒதுங்கிட்டார்.

செம்பருத்தி
செம்பருத்தி

என்ன ஏதுன்னு கேட்டா, மனுஷன் புலம்பித் தீர்த்துட்டார். 'சேனல் தரப்புல இருந்து எபிசோடுக்குன்னு தந்த பணத்துல சீரியலை என்னால பண்ண முடியலை. நான் சீரியலின் தரத்துல காம்ப்ரமைஸ் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டேன். ‘நீங்க தர்றதை விட அதிகமாச் செலவாகுது'ன்னு சொல்லிக் கேட்டப்ப, ‘சரி செய்துடலாம்’னு சொல்லியே மாதக் கணக்குல நாள்களைக் கடத்தினாங்க. இதனால என் கைக்காசைப் போட்டு சீரியலை எடுத்த வரைக்கும் சுமார் ஒரு கோடி வரை எனக்கு செலவு அதிகமாச்சு. கடைசியில ஒண்ணுமே செய்ய முடியாதுனு கை விரிச்சிட்டாங்க. வேற வழியில்லாம ‘என்னை விட்டாப் போதும் சாமி’னு வெளியில வந்துட்டேன். சீரியலோ பெரிய ஹிட். ஆனா அதைத் தயாரிச்சவனுக்கு பெரிய நஷ்டம்' என மனம் வெதும்பிப் போய் பேசுகிறார் ஜமால்.

ஆனாலும் முதல் சீரியல் தந்த விரக்தியில சீரியல் தயாரிப்பை அவர் கைவிடலை. மனுஷன் இப்ப சன் டிவிக்கு வந்து அதே பிரைம் டைம்ல ஒரு சீரியலைத் தந்திட்டிருக்கார்" என்ற பெருமாளு ’பை பை அடுத்த வாரம் பார்க்கலாம்’ என்றபடி கிளம்பினார்.