Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: வடிவேலு ரசிகர்களை டென்ஷனாக்கிய பிக் பாஸ் நடிகை; சீனியர் நடிகையின் சீரியல் என்ட்ரி!

பிரைம் டைம் பெருமாளு

இந்த வாரம் நம்ம பிரைம் டைம் பெருமாளு சீரியல் ஏரியாவுல இருந்து சுடச்சுட சில அப்டேட்ஸோட வந்திருக்கிறார். பிக் பாஸ் நடிகையின் சினிமா கரியர், சீனியர் நடிகை ஒருவரின் சீரியல் என்ட்ரி என சில எக்ஸ்க்ளூசிவ் செய்திகள் இதோ...

பிரைம் டைம் பெருமாளு: வடிவேலு ரசிகர்களை டென்ஷனாக்கிய பிக் பாஸ் நடிகை; சீனியர் நடிகையின் சீரியல் என்ட்ரி!

இந்த வாரம் நம்ம பிரைம் டைம் பெருமாளு சீரியல் ஏரியாவுல இருந்து சுடச்சுட சில அப்டேட்ஸோட வந்திருக்கிறார். பிக் பாஸ் நடிகையின் சினிமா கரியர், சீனியர் நடிகை ஒருவரின் சீரியல் என்ட்ரி என சில எக்ஸ்க்ளூசிவ் செய்திகள் இதோ...

Published:Updated:
பிரைம் டைம் பெருமாளு

"இப்பதான் அந்தப் பொண்ணு சினிமாவைச் சரியாப் புரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன். 'ஹீரோயினாத்தான் நடிப்பேன்'னு அடம் பிடிச்சிட்டிருந்தா வேலைக்கு ஆகாதுன்னு நினைச்சிடுச்சு. ஒத்த பாட்டோ, குத்துப் பாட்டோ... கூப்பிட்டாப் போதும்னு களம் இறங்கிடுச்சு!"

- வரும்போதே தகவலுக்கான இன்ட்ரோவுடன் வந்த பிரைம் டைம் பெருமாளுக்கு சூடாக இஞ்சி டீ கொடுத்து, 'கன்டினியூ ப்ளீஸ்' என்றோம்.

பிக் பாஸ் நடிகை ஷிவானி நாராயணன்
பிக் பாஸ் நடிகை ஷிவானி நாராயணன்

"ஷிவானி நாராயணனைத்தான் சொல்றேன். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில இருந்து வெளியில வந்ததும் நிறையப் பட வாய்ப்பு கிடைக்கும்னு நம்பினாங்க. யாருக்குதான் பிக் பாஸ் வாய்ப்பு வாங்கித் தந்திருக்கு? ஒண்ணும் வேலைக்கு ஆகலை. தெரிஞ்ச சில தொடர்புகள் மூலமா 'விக்ரம்' பட சான்ஸ் மட்டும் கிடைச்சது. அந்தத் தொடர்பே விஜய் சேதுபதியின் அடுத்த படத்துலயும் வாய்ப்பு வாங்கித் தந்தது. பொன்ராம் இயக்குகிற அந்தப் படத்துலயும் நடிச்சிட்டிருக்காங்க‌.

இதுக்கிடையில் நடிகர் வடிவேலுக்கு பெரிய 'கம் பேக்'கா இருக்கும்னு எதிர்பார்க்கப் படுகிற 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்லயும் ஷிவானி நடிக்கிறாங்க'ங்கிற தகவல் வெளிவந்தது. இந்தப் படத்துல ஷிவானியின் கேரக்டர் பத்தித்தான் சினிமா ஏரியாவுல ஒரே பேச்சா கிடக்குது. படத்துல வடிவேலுவுக்கு ஜோடி கிடையாதுனுதான் படக்குழு சொல்லுது. ஆனா படம் முழுக்க படு கிளாமருடன் வலம் வர்றாராம் ஷிவானி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வடிவேலு
வடிவேலு

ஷிவானி தரப்புல இருந்து தகவல் பரப்புகிற சிலரோ, இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவுல காலியாக் கிடக்கிற கவர்ச்சி நடிகைக்கான இடம் (இப்படியொரு டேட்டா டீடெய்ல பொண்ணுகிட்ட யாரு எடுத்துக் கொடுத்தாங்கனு தெரியலை) ஷிவானிக்குக் கிடைக்கப் போகுது. பழைய சிலுக்கு மாதிரி ஒரு ரவுண்ட் வரப் போறாங்க. வடிவேலுவுக்காகப் படத்தைப் பார்க்கிறாங்களோ இல்லையோ, ஷிவானிக்காகப் படத்தை நிச்சயம் பார்ப்பாங்க'னு சொல்லிட்டிருக்காங்களாம்.

வடிவேலுவின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அவரது ரசிகர்கள் இவரது இந்தப் பேச்சைக் கேட்டு இப்போதே டென்ஷன் ஆகத் தொடங்கியுள்ளனர்" என்றவர், அடுத்த செய்திக்கு நகர்ந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி, கோடை காலம் தொடங்குச்சுன்னா சீரியல்களின் கதையும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுன்னு நகர்றதை ஒரு வழக்கமா வச்சிருக்காங்க. கோவிட் வந்து உள்ளூர்லயே ஷூட் நடத்த முடியாமப் போனதுல டூருக்கு எங்க போறது? அதனால கடந்த ரெண்டு வருஷமா அந்த ப்ளானை விட்டிருந்தவங்க மறுபடியும் இந்தாண்டு துவங்கப் போறதாத் தெரியுது" என்றவரிடம்,

"லொகேஷன் கிடைக்காததாலேயே ஒரு புது சீரியல் தாமதமாகுதுன்னு ஒரு தகவல் வந்ததே?!" என நமக்கு வந்த தகவலைக் கேட்டோம்.

அமுதாவும் .............. சீரியலில்...
அமுதாவும் .............. சீரியலில்...

"'அமுதாவும் ..............' சீரியல் புரொமோ பாத்திருக்கீங்கனு நினைக்கிறேன். அந்த சீரியலுக்கான கதை தமிழகத்தின் தென் மாவட்டத்துல நடக்கிற கதையாம். ஷூட்டிங் போகணும்னு தென் மாவட்டங்கள்ல இடம் பார்த்து அலைஞ்சிட்டிருக்காங்களாம். இன்னும் லொகேஷன் முடிவாகலைன்னு சொல்றாங்க.

'தென்காசின்னு சீரியல்ல காமிச்சுட்டு சென்னைப் புறநகர்ல ஷூட் எடுத்து மக்களை ஏமாத்த விரும்பலை. நாங்க அதனாலதான் தாமதம் ஆனாலும் பரவால்லன்னு சீரியலைத் தள்ளிப் போட்டிருக்கோம்'னு போகிற போக்கில் போட்டி சேனல் சீரியலைக் குத்திக் காட்டுறாங்க" என்றார் பி.பி.

"சரி, அமுதா கூட நடிக்கிற அந்த இன்னொரு நடிகை யாராம்?"

"சீனியர் நடிகைதான். தமிழ்ல்ல இப்பதான் சீரியலுக்கு வர்றதாச் சொல்றாங்க. பெயரை கன்ஃபார்ம் பண்ணின பிறகு சொல்றேன்" எனச் சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தார்.

'யாரா இருக்கும்' என நாமும் யோசிக்கத் தொடங்கினோம். உங்கள் கெஸ் யார் என்பதையும் கமென்ட்டில் சொல்லுங்க மக்களே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism