Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: கணவர் பற்றிக்கேட்டால் கடுப்பாகும் நடிகை; பிக் பாஸ் Ultimate-ல் வில்லங்கக் கூட்டணி!

பிரைம் டைம் பெருமாளு - பிக் பாஸ் Ultimate

காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்தான். இவரின் கணவர் சென்னையில் வசிக்க, நடிகை இப்போது அவரின் அம்மா வீட்டில் இருக்கிறார்.

பிரைம் டைம் பெருமாளு: கணவர் பற்றிக்கேட்டால் கடுப்பாகும் நடிகை; பிக் பாஸ் Ultimate-ல் வில்லங்கக் கூட்டணி!

காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்தான். இவரின் கணவர் சென்னையில் வசிக்க, நடிகை இப்போது அவரின் அம்மா வீட்டில் இருக்கிறார்.

Published:Updated:
பிரைம் டைம் பெருமாளு - பிக் பாஸ் Ultimate

’சீரியலுக்குக் கதை தேடறவங்க டிவி ஏரியாவை நாலு ரவுண்டு வந்தா போதும் போல! அவ்ளோ பஞ்சாயத்து’ – வரும் போதே அலுத்துக் கொண்ட பிரைம் டைம் பெருமாளுக்கு கூல் செய்ய மோர் கொடுத்தோம். குடித்து விட்டு நேரடியாக செய்திகளுக்குள் நுழைந்தார்..

ஜூலி உஷார்!

அடுத்த சில தினங்களில் தொடங்க இருக்கிற ’பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சிக்கு செலக்ட் செய்யப்பட்டிருக்கும் அந்த ’கண்டெண்ட்’ நடிகை ‘யார் யார் வர்றீங்க’ எனக் கேட்பதற்காக பழைய ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவருக்காக போன் போட்டுப் பேசினாராம். அப்போது ரொம்பவே நெருக்கமான இருவரிடம் ‘நீங்க மட்டும் வந்துட்டா நாம சேர்ந்து அந்த ஊசி போட்டிட்டிருந்தவளை ஒரு வழி பண்ணிடலாம்’ எனச் சொல்லியிருக்கிறார்.

’ஜூலியைச் சொல்றீங்களா’ எனக் கேட்ட அவர்கள் பதிலேதும் சொல்லவில்லையாம் ‘இவங்க கூடக் கூட்டணி வச்சாலும் அது வில்லங்கத்துலதானே முடியும்’ என்பதே அவர்களின் மைண்ட் வாய்ஸாம். கண்டெண்ட் நடிகைக்கு அது கேட்டதா எனத் தெரியவில்லை.

பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் அல்டிமேட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரைப் பத்தி மட்டும் கேக்காதீங்க!

சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களைச் சந்திக்கலாம்னு சமூக வலைதள பக்கம் வந்த பிக் பாஸ் பிரபலத்துக்கு ரசிகர்கள் சிலரால உண்டான எரிச்சல் இன்னும் சரியாகலையாம். ‘வீட்டுக்காரர் பத்தி அந்த வீட்டுக்குள் ஏன் பேசவே இல்ல; அவர் கூட நல்லாதானே போயிட்டிருக்கு வாழ்க்கை’ என்கிற ரீதியில் சிலர் கேள்வி கேட்டதுதான் எரிச்சலுக்கான காரணம். ‘சரி இவரும் தான் சொல்லிட வேண்டியதுதானே’ எனக் கேட்டால் ‘என்னங்க நீங்க வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்கிறார்கள். இன்னொரு நடிகை. காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்தான். இவரது கணவர் சென்னையில் வசிக்க, நடிகை இப்போது அவரின் அம்மா வீட்டில் இருக்கிறார். ‘புதுப்படம் கமிட் ஆகியிருக்கீங்களா, இல்லாட்டி புருஷன்கூட சண்டையா, கொஞ்ச நாளா ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்க்க முடியவில்லையே’ என யாராவது கேட்டு விட்டால் ஆவேசமாகி விடுகிறார். ‘அதைத் தெரிஞ்சு சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யப் போறீங்களா’ எனக் கேள்வி கேட்டவர்களைத் தெறித்து ஓட விடுகிறாராம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வரிசையில் புதுசாக் கல்யாணம் ஆன ஒரு நடிகையும் சேர்ந்திருக்கிறார். கூட ஒர்க் பண்ணின டெக்னீஷியன் ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்ட அந்த நடிகையின் வீட்டில் என்ன விவகாரமோ? ஆனால் சமூக வலைதளத்தில் ஜோடியாக ஆக்டிவாக இருந்து விட்டு திடீரென ஒருவர் எஸ்கேப் ஆகும்போதே பிரச்னை என்பது ஊருக்குத் தெரிந்து விடுகிறது.

’கணவர் குறித்துக் கேட்டால் நடிகைகள் கடுப்பாவதற்குக் காரணம் என்ன’ என சீனியர் சீரியல் நடிகை ஒருவரிடம் கேட்டதற்கு, ‘சீரியல்ல நடிச்சு நடிச்சு எல்லாத்தையும் ஒரு எபிசோடாவே பார்த்துப் பழகிட்டாங்க’ சீரியலும் ஒரு நாள் வீட்டுக்கு அனுப்பும் பாருங்க, அன்னைக்குதான் யதார்த்தம் புரியும்’ என அட்வைஸ் கொடுத்தார்.

இவருக்குப் பதில் இவர்!

இரண்டாமிடம் மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் சேனல்களுக்கிடையில் சமீபமாக ஆக்ரோஷமான போட்டி போய்க் கொண்டிருக்கிறது. அங்கிருந்து இங்கு சேனலின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர், தன்னுடன் தொடர்பிலிருந்த பல நட்சத்திரங்களையும் கூட்டிச் சென்றதுதான் பிரச்னையின் பிள்ளையார் சுழி. பதிலுக்கு இவர்களும் அங்கிருந்த சிலரை இழுத்தனர். எனவே கொஞ்ச நாளைக்கு இரண்டு பக்கமும் இனி அடிக்கடி ‘இவருக்குப் பதில் இவர்’ ஸ்லைடைப் பார்க்கலாம் என்கிறார்கள்.

அபி நவ்யா
அபி நவ்யா

’சரி, பி.பி., வம்பு வழக்கில்லாட ஒரு நியூஸ் கூடவா இந்த வாரம் இல்ல?” எனக் கேட்டதும்,

சொல்றேன், டிவியில இன்னொரு ரியல் ஜோடி உருவாகப் போகுது. ‘சன் டிவி ‘கயல்’ சீரியல் அபி நவ்யாவும் ஜீ தமிழ் என்றென்றும் புன்னகை தீபக்கும் வருகிற 27ம் தேதி கல்யாணம் செய்துக்கப் போறாங்க. காதல் கல்யாணம்தான். ஒரு வருஷத்துக்கு முன்னாடியே நிச்சயதார்த்த முடிஞ்சுடுச்சு. கொரோனா போயிடும், எல்லாரையும் கூட்டி பிரமாண்டமா நடத்தலாம்னு வெயிட் பண்ணிட்டிருந்தாங்களாம். ஆனா மூணாவது அலை வந்ததுல ஜோடிக்கு கொஞ்சம் வருத்தம்தான்.

’வேற வழியில்லங்க, இன்னும் வெயிட் பண்ணினா நேரா 60-ம் கல்யாணம்தான் பண்ணணும் போல. அந்தளவுக்கு மூணாவது நாலாவதுனு கொரோனா போயிட்டுதான் இருக்கப் போகுது. அதனால நண்பர்கள்கிட்ட கொஞ்சம் ரெக்வஸ்ட் பண்ணிகிட்டு மாலை மாத்திக்கலாம்னு முடிவு செய்தோம்’ என்கிறார் தீபக்

நான் ஜோடிக்கு வாழ்த்துச் சொல்லிட்டேன், நீங்களும் சொல்லிடுங்க, என்றபடி விடை பெற்றார் பெருமாளு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism