Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: சன் குடும்பம் விருதுகள் அப்டேட்; முதல்வரின் துபாய் பயணத்தில் இருந்த டிவி பிரபலம்!

பிரைம் டைம் பெருமாளு | ஸ்டாலின்

இந்த வாரம் பிரைம் டைம் பெருமாளு சன் குடும்பம் விருதுகள் குறித்த சர்ச்சை மற்றும் முதல்வரின் துபாய் பயணத்தில் இருந்த டிவி பிரபலம் போன்ற எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைத் தருகிறார்.

பிரைம் டைம் பெருமாளு: சன் குடும்பம் விருதுகள் அப்டேட்; முதல்வரின் துபாய் பயணத்தில் இருந்த டிவி பிரபலம்!

இந்த வாரம் பிரைம் டைம் பெருமாளு சன் குடும்பம் விருதுகள் குறித்த சர்ச்சை மற்றும் முதல்வரின் துபாய் பயணத்தில் இருந்த டிவி பிரபலம் போன்ற எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைத் தருகிறார்.

Published:Updated:
பிரைம் டைம் பெருமாளு | ஸ்டாலின்

"'சன்' குடும்பம் விருதுகளுக்கு அழைப்பு வந்திருக்குமே..?" - வந்ததும் வராததுமாய் நாம் பி.பி-யின் வாயைப் பிடுங்க,

"செய்தி வேணும்னா அழைப்பங்களான்னு காத்துட்டிருந்தா வேலைக்கு ஆகாது; சமயங்கள்ல அழையா விருந்தாளியா போய் வரவும் தயாரா இருக்கணும்" என்றார் பிரைம் டைம் பெருமாளு.

"பச்சை மிளகாய், இஞ்சித் துண்டு, கறிவேப்பிலையுடன் காரம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்த ஒரு கிளாஸ் ஜில்' மோரைக் கொடுத்ததும், ஒரே மடக்கில் குடித்து விட்டுத் தொடர்ந்தார்.

"இந்த மாசக் கடைசியில 'சன்' குடும்பம் விருதுகள் நடக்குது. சென்னைப் புறநகர்ல இருக்கிற ஒரு கல்லூரியில நடக்கிறது நிகழ்ச்சி. சில சீரியல்கள், சில ஹீரோக்கள், சில ஹீரோயின்களுக்கு இந்த விருது தொடர்பா மன வருத்தங்களும் இருக்கு. இது தொடர்பா சமூக வ்லைதளங்களில் செய்திகளும் வந்தது நினைவிருக்கலாம். ஆனா, புத்திசாலியா பொழைக்கத் தெரிஞ்சவங்க, இதைப் பெரிசா எடுத்துக்காம அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிட்டாங்க. ஆனா சிலருக்கு ரொம்பவே மன வருத்தமா இருக்கு" என்றவரிடம்,

சன் குடும்பம் விருதுகள்
சன் குடும்பம் விருதுகள்

"சில பிரைம் டைம் சீரியல்கள்ல இருந்து ஒரு நாமினேஷன் கூட இல்லைனெல்லாம் சொல்றாங்களே..." என்றோம்.

"இந்தச் சந்தேகம் குறித்து சேனல் தொடர்புடைய சிலரிடம் பேசினேன். அவங்க இன்னொரு கோணத்துல விளக்கம் சொல்றாங்க. அதாவது, அந்தச் சமயத்துல ரேட்டிங்ல கொஞ்சம் சுமாரா போற சீரியல்களைத் தூக்கி விடற ஒரு யுக்தியா அந்த சீரியல்கள்ல இருந்து அதிகப்படியான நாமினேஷன் இருக்கற மாதிரி பார்த்துப்பாங்க. நல்ல ரேட்டிங்ல ஒளிபரப்பாகிட்டிருக்கிற சீரியல்கள்ல இருந்து நாமினேஷன் இல்லைன்னா இதுதான் காரணமா இருக்கும்னு சொல்றாங்க அவங்க" என்றார்.

"சன் விருதுகள் சரி. ஜீ தமிழ், விஜய் விருதுகள் எப்போவாம்?"

"விஜய் டெலி அவார்ட்ஸ் அடுத்த மாதக் கடைசியில நடக்க இருக்கு. ஜீ தமிழ் சேனலைப் பொறுத்தவரை இன்னும் முடிவு எடுக்கப்படலைனு தெரியுது. கடைசியா 2020 நவம்பர்ல நடந்தது அவங்களுடைய விருது விழா. அதனால இந்தாண்டு அக்டோபருக்குப் பிறகு இருக்கலாம்" என்றவர், சில நிமிட மௌனத்திற்குப் பிறகு,

துபாயில் முதல்வர் ஸ்டாலின்
துபாயில் முதல்வர் ஸ்டாலின்

"வந்த ஒரு தகவலைச் சொல்றேன். 'அப்படியா'னு வாய் பிளக்காம, மேற்கொண்டு கூடுதல் தகவல் வேணும்னா வேற சோர்ஸ் வச்சுதான் விசாரிச்சுக்கணும்" எனக் கன்டிஷன் போட்டார்.

'சரி'யெனத் தலையாட்டினோம்.

"தமிழக முதல்வர் முதன்முறையா வெளிநாட்டுப் பயணம் போனார் இல்லையா, அந்தப் பயணக் குழுவுல டிவியில பிசியா இருந்த ஒரு நடிகையும் கணவர், குடும்பத்துடன் கலந்துக்கிட்டாங்களாம். 'எப்படி'னு விசாரிச்சா, அவருடைய கணவருடைய‌ அரசியல் தொடர்பைக் கை காட்டுறாங்க. சமீபமா தேர்தல் நிபுணர்கள்னு ஒரு கேட்டகிரியில சிலர் வர்றாங்க இல்லையா, அப்படியான ஒருவராம் அந்தக் கணவர்" எனச் சொல்லி விட்டுத் தடதடவென புல்லட்டைக் கிளப்பினார் பெருமாளு.