Published:Updated:

பிரைம் டைம் பெருமாளு: ‘குக்கு வித் கோமாளி -3' லிஸ்ட் இதோ; மொட்டை மாடி ஷூட்டுக்குத் தயாரான நடிகை!

குக்கு வித் கோமாளி

குக்கு வித் கோமாளி சீசன் 3 ன் ஷூட்டிங் தொடங்கிவிட்ட நிலையில் போட்டியாளர் பட்டியல் எக்ஸ்க்ளூசிவாக விகடனுக்குக் கிடைத்தது.

பிரைம் டைம் பெருமாளு: ‘குக்கு வித் கோமாளி -3' லிஸ்ட் இதோ; மொட்டை மாடி ஷூட்டுக்குத் தயாரான நடிகை!

குக்கு வித் கோமாளி சீசன் 3 ன் ஷூட்டிங் தொடங்கிவிட்ட நிலையில் போட்டியாளர் பட்டியல் எக்ஸ்க்ளூசிவாக விகடனுக்குக் கிடைத்தது.

Published:Updated:
குக்கு வித் கோமாளி

’குக்கு வித் கோமாளி 3வது சீசன்’ ஷூட்டிங் ஜனவரி கடைசி வாரத்துல தொடங்கறதா இருந்தது. ‘எந்த நேரத்துலயும் ஊரடங்கு வரலாம்’னு திடீர்னு ரெண்டு நாள் முன்னாடியே தொடங்கிட்டாங்க’ என்றபடியே சேனல் ஜங்ஷன்ல வந்து உட்கார்ந்த பிரைம் டைம் பெருமாளு, ’யார் யார் கலந்துக்கிடுறாங்க’ என்கிற அந்தப் பட்டியலையும் கையோடு கொண்டு வந்திருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

’குக்கு வித் கோமாளி’யின் சுடச்சுட லிஸ்ட்!

குக்

அந்தோணி தாசன்

நாட்டுப்புற இசைக் கலைஞர் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர். சந்தோஷ் நாராயணன் இசையில் அதிக பாடல்களைப் பாடி இருக்கிறவர், தற்போது இசையமைப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். தான் பாடும் படங்களில் கௌரவத் தோற்றத்திலும் அவ்வப்போது வருவார்

அந்தோணி தாசன்
அந்தோணி தாசன்

கிரேஸ் கருணாஸ்

பாடகி. நடிகர் கருணாஸின் மனைவி. பல ஷோக்களில் கலந்து கொண்டதன் மூலம் விஜய் டிவிக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்தான்.

மனோபாலா

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர். சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியலிலும் கமிட் ஆகி நடித்து வந்தார். தற்போது விஜய் டிவிக்கு வந்திருக்கிறார்.

சந்தோஷ் பிரதாப்

கடந்தாண்டு ‘சார்பட்டா’ மூலம் பிரபலமானவர். பிக் பாஸ் சீசன் 5க்கு இவர் செல்வதாக இருந்தது. பிசாசு 2 படத்தில் நடித்திருப்பதால் கடைசி நேரத்தில் இயக்குநர் மிஷ்கின் அறிவுரைப்படி பிக் பாஸ் வாய்ப்பை வேண்டாமென மறுத்து விட்டதாகச் சொல்லப்பட்டது. தற்போது குக்கு வித் கோமாளியில் இவரும் ஒரு குக்.

மனோபாலா
மனோபாலா

வித்யுலேகா

நகைச்சுவை நடிகை. தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியைவிட தெலுங்கில் அதிக புகழ் இவருக்கு உண்டு. சமீபத்தில்தான் இவரது திருமணம் நடைபெற்றது.

கோமாளி:

ஷிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா ஆகியோர் கோமாளிகளாகத் தோன்றும் புரோமோ ஏற்கெனவே வெளியாகி விட்ட நிலையில் மீதிக் கோமாளிகள் இங்கே..

குரேஷி

ஸ்டேண்ட் அப் காமெடியன். கலக்கப் போவது யாரு சீசன் 5ன் டைட்டில் வின்னர். அந்த நிகழ்ச்சியில் முதலில் எலிமினேட் ஆகி வெளியில் சென்றவர் வைல்டு கார்டு வழியாக மீண்டு நிகழ்ச்சிக்குள் வந்து டைட்டிலையும் வென்றது நினைவிருக்கலாம்.

மூக்குத்தி முருகன்
மூக்குத்தி முருகன்

மூக்குத்தி முருகன்

தர்மபுரி அருகே ஒரு குக்கிராமத்தில் இருந்து சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 7ல் கலந்து கொண்டவர். அந்த சீசனின் டைட்டில் வின்னரும் இவரே. பெண் குரலிலும் பாடுவார்.

பரத்

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். இப்போது சினிமாவில் பாடத் தொடங்கி இருக்கிறார்.

மேற்கண்ட பட்டியல் தவிர மதுரை முத்து, புகழ் இருவரும் அவ்வபோது அல்லது வார இறுதியில் எபிசோடுகளில் வர இருக்கிறார்கள்.

பெருமாளு தந்த கு.வி,கோ லிஸ்ட் ’சுடச்சுட’ன்னா அடுத்த நியூஸ் ’கார’சாரம்.

’பி டீம்’ இல்லைன்னா என்னங்க தேர்தல்?

சீரியல் நடிகர் சங்கத்துக்கு ஜனவரி 9 தேர்தல் நடக்கறதா இருந்தது. ஊரடங்கு காரணமா 20ம் தேதிக்குத் தள்ளி வைக்கப் பட்டிருக்கு. இப்போதைய தலைவர் ரவி வர்மா தலைமையில் ஒரு அணி, சிவன் சீனிவாசன் தலைமையில ஒரு அணி, ஆதித்யா தலைமையில் ஒரு அணி என 3 அணி போட்டி போடுது. தேர்தல் தொடர்பா எக்கச்சக்கக் குற்றச்சாட்டுகள் பறக்குது.

’தேர்தலதிகாரி, ரவி வர்மா தலைமையிலான நிர்வாகம் நியமித்த நபர்; அதனால அவரு எல்லாரையும் சமமா நடத்தறதில்லை’ன்னு புகார் வாசிக்கிறாங்க சிலர். ரவி வர்மா அணி முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஃபோட்டோக்களைப் போட்டு பிரசாரம் பண்றதை கண்டுக்கலையாம் அந்த தேர்தலதிகாரி.

சிவன் சீனிவாசன் அணியைச் சேர்ந்த சிலர், ‘ரவி வர்மா நிர்வாகத்தின் மீது நிறைய புகார்கள் சொல்லப்பட்டுச்சு. அந்த அணியில கடந்த தேர்தல்ல ஜெயிச்சு பொருளாளரா இருந்தவருக்கே இந்த தேர்தல்ல ஒட்டு போட அனுமதி மறுத்திருக்காங்க. இந்தச் சூழல்ல ரவி வர்மாவை சங்கத்தை விட்டு வெளியேத்தணும்கிற எண்ணம் இருந்தா, அவரை எதிர்க்கிறவங்க ஓரணியில இருந்திருப்பாங்க. அப்படியில்லாம மூணாவது ஒரு அணி உருவாகுதுன்னா நிச்சயம் அது ரவி வர்மா அணியின் பி டீம்தான்’, ’பி டீம்னு ஒண்ணு இல்லைன்னா அது என்னங்க தேர்தல்’ எனச் சிரிக்கிறார்கள்.

இவர்கள் பி டீம் எனக் குறிப்பிடும் ‘புது உதயம்’ அணியின் ஆதரவாளர்களைக் கேட்டால், ‘யார் என்ன வேணாலும் சொல்லிட்டுப் போகட்டும்’ எங்க கவனம் தேர்தல்ல தான்’ என எஸ்கேப்.

ஹாட், காரம் இருந்தா தணிக்க ஒரு ஜில் நியூஸ் வேண்டாமா? அதையும் தந்தார் பெருமாளு..

மொட்ட மாடி.. மொட்ட மாடி!

மொட்டை மாடியில் ஃபோட்டோஷூட் நடத்தியே பிக் பாஸ் வாய்ப்பை வாங்கியவர் ஷிவானி. பிக் பாஸ் முடிந்து வந்ததும் சினிமா வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்தார்.

ஷிவானி,
ஷிவானி,

‘விக்ரம்’ படத்துல மூணு பேர் கூடச் சேர்ந்து ஒரு கேரக்டர் கிடைச்சதோட சரி, பெரிசா எந்த வாய்ப்பும் அமையலை. அதனால மறுபடியும் மொட்டை மாடிக்குப் போய் போட்டோ புடிச்சு இன்னொரு தடவை முயற்சி செய்து பார்க்கலாம்னு நினைக்கிறாராம்.