Published:Updated:

விகடன் TV: ‘நல்ல கதை அமைஞ்சா ரீ-என்ட்ரிக்கு ரெடி!’

சிவரஞ்சனி
பிரீமியம் ஸ்டோரி
சிவரஞ்சனி

ஆனா, என்னுடைய தனிப்பட்ட தவிர்க்க முடியாத சில காரணங்களாலதான் டிவியிலிருந்து விலகினேன்.

விகடன் TV: ‘நல்ல கதை அமைஞ்சா ரீ-என்ட்ரிக்கு ரெடி!’

ஆனா, என்னுடைய தனிப்பட்ட தவிர்க்க முடியாத சில காரணங்களாலதான் டிவியிலிருந்து விலகினேன்.

Published:Updated:
சிவரஞ்சனி
பிரீமியம் ஸ்டோரி
சிவரஞ்சனி

‘பிரியமானவள்’ சீரியலில் அவந்திகாவாக நடித்து சீரியல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவரஞ்சனி. அதே சீரியலில் உடன் நடித்த நட்ராஜைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கடந்த சில வருடங்களாக டிவியில் இவரைப் பார்க்க முடியாத சூழலில், அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

‘ என் அம்மாவுடைய ஆசைக்காகத்தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சேன். கடைசியா நடிச்ச சீரியல் முடிஞ்சு இரண்டரை வருஷத்துக்குமேல ஆச்சு. ஆனாலும் இன்னமும் மக்கள் என்னை மறக்காமத்தான் இருக்காங்க. வெளியிடங்கள்ல பார்க்கிறவங்க ‘எப்ப நடிக்க வர்றீங்க’ன்னுதான் கேக்கறாங்க.

விகடன் TV: ‘நல்ல கதை அமைஞ்சா ரீ-என்ட்ரிக்கு ரெடி!’

ஆனா, என்னுடைய தனிப்பட்ட தவிர்க்க முடியாத சில காரணங்களாலதான் டிவியிலிருந்து விலகினேன். இப்ப முழுக்க முழுக்க குடும்பத்தோடு மட்டுமே என்னுடைய நேரத்தைச் செலவிடுறேன்.

இன்னொரு முக்கியமான விஷயம், சில தவிர்க்க முடியாத காரணங்களால எனக்கும், நட்ராஜுக்கும் மியூச்சுவலா டைவர்ஸ் ஆகிடுச்சு’’ என்றவர், சில நிமிட இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

``நான் துவண்ட தருணங்களிலெல்லாம் என்னை மீட்டெடுத்தது என் அம்மா. கடந்த வருடம் அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம ஆகிடுச்சு. அதனால இப்ப கூடவே இருந்து அவங்களை நல்லா கவனிச்சிட்டிருக்கேன். வீட்ல அம்மா பார்க்கிற எல்லா வேலைகளையும் இப்போ நான் செய்ய ஆரம்பிச்சிருக்கேன். இப்ப அவங்க உடல்நிலை ஓரளவு பரவால்ல, இருந்தாலும், இன்னும் கொஞ்ச நாளைக்காவது என்னுடைய உதவி அம்மாவுக்குத் தேவைப்படும்கிறதால முழுக்க முழுக்க அம்மா கூடவேதான் இருக்கேன்.

விகடன் TV: ‘நல்ல கதை அமைஞ்சா ரீ-என்ட்ரிக்கு ரெடி!’

சீரியலைப் பொறுத்தவரை இனிமேல் நடிக்க வேண்டாம்னு முடிவெடுத்து தான் வெளியேறினேன். நிறைய நண்பர்கள் அங்க இருக்காங்க. ஆனா, யார் கூடவும் அவ்வளவு தொடர்புகூட இல்லை. டிவி, சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள்னாலுமே அவாய்டு பண்ணிட்டேதான் வந்தேன். ஆனாலுமே எப்படியாவது போன்ல பிடிச்சுப் பேசற பலரும் என்னுடைய ரீ-என்ட்ரி குறித்துதான் கேட்டுட்டு இருக்காங்க.

அதனால லேசா இப்ப மனம் யோசிக்கத் தொடங்கியிருக்கு. நல்ல கதைக்களம், யூனிட் அமைஞ்சா திரும்ப வருவேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism