Published:Updated:

``விமர்சனத்துக்கு பதில் சொல்லணும்னு அவசியமில்லை; கேள்வியெல்லாம் ஒன்றுதான்!” - ரவீந்தர் - மகாலட்சுமி

ரவீந்தர் - மகாலட்சுமி

எனக்கு 38 வயசாகுது. இவங்களும் மெச்சூரிட்டியான பொண்ணுதான். குண்டா இருக்கிறது பார்த்ததும் இவங்களுக்குத் தெரியாதா?

``விமர்சனத்துக்கு பதில் சொல்லணும்னு அவசியமில்லை; கேள்வியெல்லாம் ஒன்றுதான்!” - ரவீந்தர் - மகாலட்சுமி

எனக்கு 38 வயசாகுது. இவங்களும் மெச்சூரிட்டியான பொண்ணுதான். குண்டா இருக்கிறது பார்த்ததும் இவங்களுக்குத் தெரியாதா?

Published:Updated:
ரவீந்தர் - மகாலட்சுமி

சமூகவலைதளப் பக்கங்களில் இவர்களுடைய காதல் திருமணம் தான் தற்போதைய டிரெண்ட்டிங்! 'ரவீந்தர் சந்திரசேகர் - மகாலட்சுமி' தம்பதியைச் சந்தித்தோம்.

ரவீந்தர் - மகாலட்சுமி
ரவீந்தர் - மகாலட்சுமி

`காதலை முதலில் சொன்னது நான்தான்... ஆனா, இப்ப திருமணம் செய்துக்கலாம்னு சொன்னது மகாலட்சுமிதான்! அவங்க சொன்னப்பகூட எங்க திருமணத்துக்குப் பிறகு இப்ப வர்ற பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் குறித்தெல்லாம் நாங்க யோசிச்சோம். உன் 90ஸ் கிட்ஸ் எல்லாம் என்னை சாவடிக்கப் போறாங்க... நீ ஆங்கராக இருந்தப்பவே பல பேருடைய டிரீம் கேர்ள்... இப்ப இது தேவையா? எனக்குக் கொஞ்சம் டைம் கொடு... நான் உடம்பு குறைச்சிட்டு வர்றேன்னெல்லாம் சொன்னேன். எதார்த்தமான கனெக்ட்தான் எங்களுக்குள் இருந்தது. இப்ப இளைஞர்கள்கிட்ட இருக்கிற காதலை எங்ககிட்ட எதிர்பார்க்க முடியாது என்றதும், மகாலட்சுமி தொடர்ந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

”எங்க ஃபேமிலி தவிர யார்கிட்டேயும் நான் இதைப் பற்றி ஷேர் பண்ணல. நான் இவர்கிட்ட பேசினேன், இவர் என்கிட்ட பேசினார் அவ்வளவுதான்! இவரைப் பொறுத்தவரை ’நான் கொஞ்சம் உடம்பு குறைச்சிட்டு வர்றேன், எனக்கு டைம் கொடு’ன்னு சொன்னார். எனக்கு அது பிரச்னையாகவே தெரியல. உங்க ஹெல்த்திற்காக குறைக்கணும் என்பது வேற, எனக்காகக் குறைக்கணும்னா அது தேவையில்லைன்னு சொன்னேன். இப்படித்தானே எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு... இப்படியே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்” என்றதும் புன்னகைத்தவாறு ரவீந்தர் தொடர்ந்தார்.

மகாலட்சுமி
மகாலட்சுமி

”இது ஃபர்ஸ்ட் டைம் மேரேஜ்னா நாம எதைப் பற்றியும் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. செக்கண்ட் மேரேஜ்னா எல்லாத்தையும் யோசிக்கணும். கல்யாணம் பண்ணினாலும் பொண்ணைத்தான் குறை சொல்லுவாங்க... கல்யாணம் பண்ணலைன்னாலும் பொண்ணைத்தான் குறை சொல்லுவாங்க” என்றவரின் கரம் பற்றி மகாலட்சுமி பேசினார்.

”எந்தப் பொண்ணும் ஒரு ஆம்பளையைப் பற்றித் தப்பா பேச மாட்டாங்க. ஆனா, சில ஆண்கள் பொண்ணுங்களைத்தான் தப்பா பேசுவாங்க. இது என்னைக்கு மாறும்னே தெரியல. ஆண்மீதே தப்பு இருந்தாலும் பொண்ணைத்தான் எல்லாரும் குறை சொல்லிட்டு இருக்காங்க” என்றதும், ரவீந்தர் பேச ஆரம்பித்தார்.

ரவீந்தர் - மகாலட்சுமி
ரவீந்தர் - மகாலட்சுமி

”பணத்துக்காக இந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொல்றதெல்லாம் சும்மாங்க. ஒருத்தரால கேட்கவே முடியாத கேள்வி என்னன்னு தெரியுமா? ஒரு சில பொண்ணுங்க இந்த மாதிரி ஒரு பையனை நான் கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்... என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட அறிமுகப்படுத்தும்போது அவங்க கேலி பண்ணிடுவாங்கன்னு சொல்லுவாங்க. இன்னொரு பக்கம், என் பொண்ணை இப்படியா கட்டிக் கொடுப்பேன்னு யோசிக்கிற மனநிலையில் உள்ளவங்க. அதுதவிர, சில சின்னப் பசங்க இவங்களுடைய செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்னு யோசிக்கிறவங்க... இந்த மாதிரியான மக்கள்தான் இந்தச் சமூகத்தில் பெரும்பாலும் இருக்காங்க.

எந்த விமர்சனத்துக்கும் எனக்கு பதில் சொல்ல அவசியமே இல்லை. ஆனா, என் கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! 'குண்டா இருக்கிற பையன் ஒல்லியா இருக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுக்கு காது, மூக்கு எல்லாம் வரையச் சொன்னது யாருங்க? குண்டா இருக்கிற ஆள் எப்படி இவ்வளவு அழகான பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பான்? இவன்கிட்ட என்ன இருக்குன்னு யோசிக்கிறாங்க... என்கிட்ட நல்ல மனசு இருக்கு. அது என்கிட்ட பழகினா மட்டும்தான் தெரியும். இல்ல பழகினவங்களுக்குத் தெரியும்.பொண்ணு அழகா இருக்கு. ஆமா, அதை மாற்றவே முடியாது. நான் ஒல்லியாக முடியாது. நீ வேணும்னா குண்டாகிடுன்னு மகாலட்சுமிகிட்ட சொன்னேன். பொண்ணு ஒல்லியா இருந்து பையன் குண்டா இருக்கிறதனால தான் எல்லாரும் அந்தப் பொண்ணை விமர்சனம் பண்றாங்க.


சமீபத்தில் கல்யாணம் பண்ணின உச்ச நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்த அழகான ஜோடி பிரிஞ்சது... ஏன் பிரிஞ்சதுன்னா... பிரிஞ்சது, அவ்வளவுதான்! அது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை. இந்தப் பொண்ணுக்கு 25 வயசுக்குள்ள இருந்தால் பேசுறவங்க இன்னும் சீரியஸா பேசுவாங்க. எனக்கு 38 வயசாகுது. இவங்களும் மெச்சூரிட்டியான பொண்ணுதான். குண்டா இருக்கிறது பார்த்ததும் இவங்களுக்குத் தெரியாதா? சரி, இவங்க வீட்ல உள்ளவங்க முதல் திருமணம்தான் இப்படி ஆகிடுச்சு... இது வேண்டாம்னு சொல்ல மாட்டாங்களா?

ரவீந்தர் - மகாலட்சுமி
ரவீந்தர் - மகாலட்சுமி

இதை பிராண்ட் பண்ணிடாதீங்க.. உங்களால் எங்களை ஒண்ணுமே செய்யமுடியாது. நாங்க விமர்சனங்களோடே வாழப் பழகினவங்க. எங்களை மாதிரி அடுத்து வர பொண்ணுங்க பயப்பட ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்காகத்தான் நாங்க இது தப்பு இல்லைன்னு உட்கார்ந்து பேசிட்டு இருக்கோம். உடம்பும், கலரும் தான் இங்க மிகப்பெரிய பிரச்னை.

முதல் விஷயம், நாங்க ரெண்டு பேரும் இங்க தியாகம் பண்ணல. நாங்க ரெண்டு பேரும் அதிகமா யோசிச்சதே மகாலட்சுமியோட பையனைப் பற்றித்தான்! இந்த வயசில் ஒண்ணுமே தெரியாது.. அம்மாவுக்குப் பிடிச்சிருக்கு... தாத்தாவுக்குப் பிடிச்சிருக்கு... பாட்டிக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கலாம். அவனுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். இருந்தாலும் அவன் இதனால ஓகே சொல்லியிருக்கலாம்னே வச்சிப்போம். அவன் வளர வளர இந்தச் சமூகத்தில் அவனுக்கெனப் புரிதல் வரும்போது இந்தச் சமூகம் பொய் சொல்லுது... இவர்தான் என் அப்பான்னு அவனைச் சொல்ல வைக்கணும் என்கிற பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கு. அதுதவிர, எங்களுக்கென ஒரு குழந்தையும் பிறக்கும். எங்க குடும்பம் பெரியதாகி சந்தோஷமான ஒரு வாழ்க்கை வாழ்வோம்” என்றதும் மகாலட்சுமி தொடர்ந்தார்.

ரவீந்தர் - மகாலட்சுமி
ரவீந்தர் - மகாலட்சுமி

என் பையனுக்கு ஆறு வயசுதான் ஆகுது. ஆனாலும், பயங்கர மெச்சூர்டு. எங்க கல்யாணத்தில் முன்னின்று அவ்வளவு ஹேப்பியா எல்லா விஷயமும் பண்ணினான். அவனுக்கு ரொம்ப ஹேப்பி என்றதும் ரவீந்தர் தொடர்ந்தார்.

இனி அம்மா இவர்கூட இருக்கப்போகிறார்... இவர்தான் என் அப்பா என்பது அந்தப் பையனுக்கு நல்லாத் தெரியும். அந்தப் புரிதல்தான் எங்களுக்குத் தேவை” என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து ரவீந்தர் - மகாலட்சுமி நம்மிடையே பகிர்ந்துகொண்டனர். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

படங்கள் - விக்னேஷ்