Published:Updated:

பிக் பாஸ்: கையைப் பிடித்து இழுத்த ராபர்ட் மாஸ்டர்; கோபத்தில் ரச்சிதாவின் கணவர்; ரெட் கார்டு வருமா?

ராபர்ட் - ரச்சிதா

ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற அன்று, அவரை வாழ்த்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் தினேஷ். மேற்கொண்டு இது தொடர்பாக எதுவும் பேசாமல் இருந்தார்.

Published:Updated:

பிக் பாஸ்: கையைப் பிடித்து இழுத்த ராபர்ட் மாஸ்டர்; கோபத்தில் ரச்சிதாவின் கணவர்; ரெட் கார்டு வருமா?

ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற அன்று, அவரை வாழ்த்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் தினேஷ். மேற்கொண்டு இது தொடர்பாக எதுவும் பேசாமல் இருந்தார்.

ராபர்ட் - ரச்சிதா

ரச்சிதா பிக் பாஸில் கலந்து கொண்டது குறித்து முதன் முதலாகப் பேசியிருக்கிறார் அவரின் கணவர் தினேஷ்.

பிக் பாஸ் சீசன் 6 ஒரு மாதம் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. சில போட்டியாளர்கள் வலுவாக இருக்கிறார்கள். பலவீனமான போட்டியாளர்களின் வெளியேற்றமும் நிகழ்ந்திருக்கிறது. வலுவான போட்டியாளர்களும் சில வாரம் எவிக்‌ஷன் பட்டியலில் இடம் பிடிக்கின்றனர், கமல் சிலரைக் கடுமையாகக் கண்டித்ததும் நிகழ்ச்சியில் நடந்தது.

இந்த சீசனின் வலுவான போட்டியாளர்களாக பிக் பாஸ் ரசிகர்கள் கருதும் பட்டியலில் ரச்சிதாவும் ஒருவர்.

ராபர்ட், ரச்சிதா
ராபர்ட், ரச்சிதா

இவரையும் சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டரையும் இணைத்து அந்த வீட்டுக்குள்ளேயே சர்ச்சைப் பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. சர்ச்சைப் பேச்சுகளுக்கு ராபர்ட் மாஸ்டரின் நடவடிக்கையும் காரணம்.

சில தினங்களுக்கு முன்பு ராபர்ட் மாஸ்டரை அழைத்த ரச்சிதா இது தொடர்பாக தெளிவாக ஒரு உரையாடலை நிகழ்த்தியும் ராபர்ட் மாஸ்டர் அதைக் கண்டு கொள்ளாதது போலவே தெரிகிறது.

ரச்சிதா அவரின் கணவர் தினேஷ் இருவரிடையே பிரச்னை என்பதும் இவர்கள் தற்போது தனித்தனியே வசித்து வருகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. ‘இந்தப் பிரிவு தற்காலிகமானதே, எல்லாம் ஒரு நாள் சரியாகும்’ என ஏற்கெனவே நம்மிடம் தினேஷ் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது..

ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற அன்று வாழ்த்தி ஒரு பதிவு மட்டும் சமூக வலைதளத்தில் போட்ட தினேஷ் மேற்கொண்டு இது தொட்ர்பாக எதுவும் பேசாமல் இருந்தார்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பது குறித்துப் பேசிய தினேஷ்,

``ரச்சிதா அந்த ஷோவுல அழகா விளையாடிட்டிருக்காங்க. அந்த வீட்டுக்குள், ஏன் வெளியிலும் கூட அவங்களைத் தொடர்புபடுத்திப் பேசுகிற விஷயங்களைக் கேட்டா சிரிப்புதான் வருது. பள்ளிக் கூடத்துல ஒரு பையனும் பொண்ணும் சிரிச்சிப் பேசிட்டா என்ன சொல்வாங்களோ, அந்த மாதிரிதான். ஆனால், சில விஷயங்கள் தவிர்த்திருக்கலாம் என்பதுபோலத்தான் இருக்கிறது. மத்தபடி ரச்சிதா நல்லா விளையாடிட்டு இருக்காங்க" என்கிறார் தினேஷ்.

ரச்சிதா-தினேஷ்
ரச்சிதா-தினேஷ்

அதேநேரம், ரச்சிதா அவ்வளவு சொல்லியும் கேட்காமல் மறுபடியும் அவரது கையைப் பிடித்து ராபர்ட் மாஸ்டர் இழுத்த எபிசோடைக் கண்டு தினேஷ் மட்டுமல்லாது ரச்சிதாவின் மாமியார் உள்ளிட்ட தினேஷின் மொத்த குடும்பத்தினருமே கொந்தளிப்பில் இருப்பதாகச் சொல்கின்றனர் தினேஷின் நட்பு வட்டத்தினர்.

ராபர்ட் மாஸ்டரின் நடவடிக்கைகள் இதேபோல் தொடர்ந்தால், தினேஷ் இந்த விவகாரத்தில் தலையிட்டு ரெட் கார்டு கொடுத்து ராபர்ட்டை நிகழ்ச்சியில் இருந்து வெளியில் அனுப்பத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.