Election bannerElection banner
Published:Updated:

ரம்யா கிருஷ்ணன், சினேகா, வரலட்சுமி... `சித்தி 2' சீரியலில் நடிக்கப்போவது யார்? - ராதிகா விளக்கம்!

'சித்தி 2' சீரியலில் ராதிகா
'சித்தி 2' சீரியலில் ராதிகா

ராதிகா விலகியதைத் தொடர்ந்து, 'சித்தி 2' சீரியலில் ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவயானி, சினேகா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரில் ஒருவர் நடிக்க இருப்பதாகச் சமூக வலைதளங்களில் பேச்சுகள் உலவுகின்றன. இதுகுறித்து 'சித்தி 2' சீரியலின் தயாரிப்பாளரான ராதிகாவிடம் பேசினோம்.

சினிமாவில் புகழுடன் இருந்த ராதிகாவுக்கு, 'சித்தி' சீரியல் சின்னத்திரையிலும் சிம்மாசனம் அமைத்துக் கொடுத்தது. 22 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான இந்த சீரியல், பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், பிரைம் டைம் சீரியல்களைத் தயாரித்து, அவற்றில் தொடர்ந்து நடித்தும் வந்தார் ராதிகா. சினிமாவிலும், சின்னத்திரையிலும் பிரேக் எடுக்காமல் நீண்டகாலமாக நடித்து வந்த பெருமையையும் பெற்றார்.

கணவர், மகளுடன்...
கணவர், மகளுடன்...

இந்த நிலையில், தற்போது நடித்துவரும் 'சித்தி 2' சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் ராதிகா. கணவர் சரத்குமாருடன் அரசியல் பணிகளில் உத்வேகத்துடன் பணியாற்ற இருப்பதால், சின்னத்திரையில் இருந்து தற்போது விலகியிருப்பதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

ராதிகா விலகியதைத் தொடர்ந்து, அவர் நடித்துவந்த கதாபாத்திரத்தில் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவயானி, சினேகா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரில் ஒருவர் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சுகள் உலவுகின்றன. இதுகுறித்து 'சித்தி 2' சீரியலின் தயாரிப்பாளரான ராதிகாவிடம் பேசினோம்.

"அரசியல், தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் 'சித்தி 2' சீரியல்ல இருந்து விலகினேன். இது பத்தி உங்களுடைய முந்தைய பேட்டியிலும் விளக்கமா சொல்லியிருந்தேன். நான் நடிச்சுகிட்டு இருந்த ரோல்ல 'அடுத்து இவர் நடிப்பார்'னு சில நடிகைகள் பெயர்கள் அடிபடுவதை நானும் கேள்விப்பட்டேன். எனக்கு சிரிப்புதான் வந்துச்சு. நாட்டுல எத்தனையோ விஷயங்கள் நடக்கும்போது, சில விஷயங்கள் பத்தி தேவையில்லாத பரபரப்பைக் கிளப்புறதுக்குனு சிலர் இருக்காங்க. அவங்களுக்கு அந்தச் செய்தியின் உண்மைத் தன்மை பத்தி கவலை கிடையாது. சினிமா பயணத்துல என்னை பத்தியும் எத்தனையோ வதந்திகள் வந்திருக்கு.

ராதிகா
ராதிகா

அதையெல்லாம் எப்பவும் நான் கண்டுகிட்டதே இல்ல. இப்படியான செய்திகளைப் பரப்புறவங்க வேலையை நாம ஏன் தடுக்கணும்? 'சித்தி 2' சீரியல்ல நான் நடிச்சுகிட்டு இருந்த ரோல்ல இப்போதைக்கு எந்த நடிகையும் நடிக்கப்போறதில்ல. நான் இல்லாமலேயே கதை நகரும். தமிழக சட்டமன்றத் தேர்தல் வேலைகள் முடிஞ்ச பிறகு, மறுபடியும் எனக்கு நடிக்க வாய்ப்பிருந்தா, இந்த சீரியல்ல என்னோட ரோல்ல தொடர்ந்து நடிப்பேன். இல்லைனா, அப்போதைய சூழல்களைப் பொறுத்து முடிவு எடுப்பேன். இதுக்கிடையே என்னோட முடிவுகள்ல மாற்றம் இருந்தா, நானே முறையா அறிவிப்பேன்" என்று முடித்தார் ராதிகா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு