Published:Updated:

"குழந்தையை முதல்ல அம்மா கையில்தான் கொடுக்கணும்னு ஆல்யா ஆசைப்படுறா... ஆனா, அவங்க அம்மா..?!" - சஞ்சீவ்

ஆல்யா மானசா

நெருங்கிய நண்பர்கள் தொடர்ந்து பல முறை பேசியும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஆல்யாவின் வீட்டிலிருந்து ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. இதில் மிகுந்த வருத்தத்தில் இருந்தார் ஆல்யா. இப்போது, திருமணமும் முடிந்துவிட்டது.

"குழந்தையை முதல்ல அம்மா கையில்தான் கொடுக்கணும்னு ஆல்யா ஆசைப்படுறா... ஆனா, அவங்க அம்மா..?!" - சஞ்சீவ்

நெருங்கிய நண்பர்கள் தொடர்ந்து பல முறை பேசியும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஆல்யாவின் வீட்டிலிருந்து ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. இதில் மிகுந்த வருத்தத்தில் இருந்தார் ஆல்யா. இப்போது, திருமணமும் முடிந்துவிட்டது.

Published:Updated:
ஆல்யா மானசா

‘ராஜா – ராணி' தொடரில் ஜோடியாக நடித்தபோதே காதலித்து, சமீபத்தில் நிஜ வாழ்விலும் இணைந்தார்களே... ஆல்யா மானசா – சஞ்சீவ், இருவருக்கும் வாழ்வில் அடுத்த புரமோஷன் கிடைக்கப் போகிறது. ஆமாம். ஆல்யா தற்போது கர்ப்பமாகியிருக்கிறார்.

ஆல்யா மானசாவும் சஞ்சீவும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு வழக்கம்போலவே மதம் ஒரு தடையாக இருந்தது. திருமணத்துக்கு இரு வீட்டிலுமே எதிர்ப்புகள் எழுந்த நிலையில், முதலில் சஞ்சீவ் அவரது வீட்டில் பேசி சம்மதம் வாங்கி விட்டார். ஆனால், ஆல்யாவால் அவ்வளவு எளிதில் பெற்றோரைச் சமாதானம் செய்ய முடியவில்லை. எனவே, இரண்டு பேருக்கும் நெருக்கமான நண்பர்கள் சிலர், ஆல்யாவின் வீட்டில் தொடர்ந்து பேசினார்கள். அந்த முயற்சியும் கைகொடுக்காததாலேயே இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஆல்யாவின் வீட்டிலிருந்து யாருமே கலந்துகொள்ளவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையே, ஆல்யாவின் வீட்டு சம்மதம் இல்லாமலேயே இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு ஆல்யாவின் அப்பா, மகளிடம் பேசியிருக்கிறார். ஆனால், அவரது அம்மா பேசவில்லை. இதில் மிகுந்த வருத்தத்தில் இருந்த ஆல்யா, பல முறை அம்மாவைத் தொடர்புகொள்ள முயன்றும் அம்மாவின் கோபம் தணியவில்லை. இந்நிலையில்தான், ஆல்யா அம்மாவாகப்போகும் செய்தியைச் சொல்லியிருக்கிறார், சஞ்சீவ்.

''விரைவில் எங்கள் வீட்டில் சின்ன பாப்புக்குட்டி வரப்போறாங்க’' எனத் தனது பெண் குழந்தை ஆசையையும் வெளிப்படுத்தி இருக்கும் சஞ்சீவிக்கு வாழ்த்துகள் சொல்லிப் பேசினோம்.

'ராஜா ராணி' சஞ்சீவ் - ஆல்யா மானஸா
'ராஜா ராணி' சஞ்சீவ் - ஆல்யா மானஸா

''வாழ்க்கையில் எங்களுக்கு இது முக்கியமான தருணம். ஆல்யா என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதா மாத்தினவங்க. எங்க கல்யாணம் இருதரப்பு சம்மதத்துடன் சந்தோஷமா நடக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டோம். ஆனா, நாங்க நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலை. இதுல ரொம்பவே வருத்தத்துல இருந்தாங்க ஆல்யா. 'சீக்கிரத்துலயே எல்லாம் மாறும்'னு ஒவ்வொரு நாளும் நான் அவங்களுக்கு சமாதானம் சொல்லிட்டே இருந்தேன். இப்ப அந்தக் காலம் கனிஞ்சிருக்குனு நம்புறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கர்ப்பமானது உறுதி செய்யப்பட்டதும், ஆல்யா முதல்ல அவங்க வீட்ல சொல்லச் சொன்னாங்க. உடனே அவங்க அப்பாவை சந்திச்சு விஷயத்தைச் சொன்னோம். சந்தோஷத்துல அவர் கண்ணுல இருந்து கண்ணீர் வந்திடுச்சு. மகளை மனசார வாழ்த்தினார். நான் சொல்ற 'எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்'கிற அதே வார்த்தைகளைத்தான் அவரும் ஆல்யா கிட்ட சொன்னார்.

ஆல்யாவுக்கும் எனக்கும் இப்ப கொஞ்சம் நம்பிக்கை கூடியிருக்கு. தன்னுடைய மகள் தாயாகப்போகிற செய்தி, எல்லா அம்மாக்களுக்குமே நிச்சயம் சந்தோஷமான செய்திதான். அதனால சீக்கிரமே ஆல்யாவைப் பார்த்து ஆசிர்வாதம் பண்ண மாமியார் நிச்சயம் எங்க வீட்டுக்கு வருவாங்கன்னு நாங்க உறுதியா நம்புறோம். பேரனோ பேத்தியோ குழந்தையை தன்னோட அம்மா கையில்தான் முதல்ல தரணும்னு ஆல்யா ஆசைப்படுறாங்க. அந்த ஆசை நிறைவேறும்னு நம்புறோம்'' என்றவரிடம், 'பெண் குழந்தை ஆசை' குறித்துக் கேட்டோம்.

''பொதுவா எல்லா அப்பாக்களுக்கும் பெண் குழந்தைனா பிடிக்கும்தானே, அதனாலதான் அப்படிச் சொன்னேன். மத்தபடி என்ன குழந்தை பிறந்தாலும் எங்க ரெண்டு பேருக்குமே சந்தோஷம்தான்'' என்றார்.

Alya Manasa, Sanjeev
Alya Manasa, Sanjeev

‘ராஜா ராணி’க்குப் பிறகு மறுபடியும் இருவரையும் சேர்த்து இன்னொரு சீரியல் செய்ய திட்டமிட்டிருந்ததாம் விஜய் டி.வி. உடனடியாகக் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவில் இருந்ததாலேயே, ''ரியாலிட்டி ஷோ ஜட்ஜ் என்றால் ஓகே; சீரியல்னா பிறகு பார்க்கலாம்'’ என ஆல்யா நோ சொல்லிவிட்டாராம். அதனால் சஞ்சீவ் மட்டும் ’காற்றின் மொழி’ தொடரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism