Published:Updated:

``விஜய் படத்துல தலைமறைவாகவே நடிச்சியான்னு நண்பர்கள் கலாய்ச்சது வருத்தமாகிடுச்சி!’’ - ராஜா ராணி குரோஷி

குரோஷி

``நான் இந்தி டப்பிங் சீரியல்தான் பார்ப்பேன். தமிழ் சீரியல் பார்க்கமாட்டேன். அதற்கு ஒரு காரணம் இருக்கு.''

``விஜய் படத்துல தலைமறைவாகவே நடிச்சியான்னு நண்பர்கள் கலாய்ச்சது வருத்தமாகிடுச்சி!’’ - ராஜா ராணி குரோஷி

``நான் இந்தி டப்பிங் சீரியல்தான் பார்ப்பேன். தமிழ் சீரியல் பார்க்கமாட்டேன். அதற்கு ஒரு காரணம் இருக்கு.''

Published:Updated:
குரோஷி

கலக்கப் போவது யாரு சீசன் 5 டைட்டில் வின்னர் குரோஷி விஜய் டிவி கண்டெடுத்த மகத்தான மிமிக்ரி கலைஞன். ராஜா ராணி சீரியலில் சந்திரன் ரோலில் தன்னை கேரக்டர் ஆர்டிஸ்டாகவும் நிரூபித்த குரோஷி தற்போது மீண்டும் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் மூலம் மக்களை என்டர்டெயின் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறார். ராஜா ராணி சீரியல் முடிவுற்ற நிலையில், ஜாலியாக ட்ரிப் அடித்து வரும் அவரை சந்தித்து பேசினோம்.

சின்னத்திரை என்ட்ரி பற்றி சொல்லுங்க?

குரோஷி
குரோஷி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு வேலை தேடி சென்னைக்கு வந்தேன். ஒரு ஐடி கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். அங்க ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஃபன் செக்‌ஷன் நடக்கும். அந்த நிகழ்வுல நான் என்கூட வேலை பார்க்குற எல்லார் மாதிரியும் பேசி, மிமிக்ரி பண்ணுவேன். மேனேஜரை மாதிரி நடிச்சுக் காட்டுவேன். என்கூட வேலை பார்த்த நண்பர்கள் `உனக்கு நிறைய திறமை இருக்கு. குறிப்பா நல்ல ஹுயூமர் சென்ஸ் இருக்கு. நீ டிவி சேனல்கள் நடத்துற ரியாலிட்டி நிகழ்ச்சிகள்ல கலந்துக்கலாம்’னு சொன்னாங்க. எனக்கும் அவங்க சொல்றது சரின்னுபட்டது. அந்தச் சமயத்தில்தான் விஜய் டிவி கலக்கப் போவது யாரு சீசன் 5 அறிவிப்பு வெளியாகியது. அந்த ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். அதில் தேர்வாகி ஓர் ஒன்பது ரவுண்டில் பெர்ஃபார்ம் பண்ணேன். அப்புறம் செலக்ட் ஆகி என் பயணம் தொடங்குச்சு. கலக்கப் போவது யாரு சீசன் 5 டைட்டில் வின்னர் ஆனேன். இப்படிதான் என் டெலிவிஷன் என்டிரி நடந்துச்சு. என் வளர்ச்சிக்கு எங்க குருநாதர் தாம்ஸன் சார்தான் காரணம். என்னை மட்டுமல்ல. நிறைய பேரை அவர் க்ரூம் பண்ணி வளர்த்துவிட்டிருக்கார். அவருக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எப்ப மிமிக்ரி பண்ண ஆரம்பிச்சீங்க?

குரோஷி
குரோஷி

மிமிக்ரி நான் ஸ்கூல்ல இருந்தே பண்ணிக்கிட்டு இருக்கேன். எதாச்சு திருட்டுத்தனம் பண்ணுவோம். அதிலிருந்து தப்பிக்க டீச்சர் குரலில் பேசி தப்பிப்போம். ஒருவாட்டி ஸ்கூல் டூர் போக வேண்டியிருந்தது. என் வீட்ல அம்மா என்னை விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க. நான் உடனே நண்பர்களோட சேர்ந்து என் அம்மாக்கு போன் பண்ணி ஹெட் மாஸ்டர் மாதிரி பேசி, உங்க பையன டூருக்கு அனுப்புங்கன்னு சொன்னேன். அம்மாவும் அப்படியே நம்பிட்டாங்க. காசு கொடுத்து டூருக்கு அனுப்பிட்டாங்க. நான் இப்படி ஏமாத்தினதா ஒரு வருஷம் கழித்துதான் அம்மாவிடம் சொன்னேன். இந்த மாதிரி நிறைய திருட்டுத்தனம் பண்ணுவோம். அப்படியே நடிகர்கள் மாதிரியும் பேசக் கத்துக்கிட்டேன். அப்படியே என் ஹியூமர் சென்ஸ், மிமிக்ரி எல்லாமே என் அடையாளங்களா மாறிடுச்சு.

இப்பவும் என் நண்பர்களுக்கு போன் போட்டு வேற வாய்ஸ்ல பேசி கலாய்ப்பேன். கலக்கப் போவது யாரு நண்பர்களுக்கு போன் போட்டு பயங்கரமா கலாய்ப்போம். திடீர்னு தீனாவுக்கு கால் பண்ணி, ஒரு படத்துல உங்கள புக் பன்ணியிருக்காங்க, அனிருத் மியூசிக், நீங்கதான் ஹீரோவா பண்ணனுமாம். படம் ஓகே வா பிரதர்-ன்னு கேட்டுட்டு, கடைசியா படம் மட்டும் 2090-ல் தான் வெளியாகுமாம்-ன்னு சொல்லி ஓட்டுவோம். இந்த மாதிரி நிறைய சேட்டை பண்ணிருக்கேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்களுக்குப் பிடித்த மிமிக்ரி ஆர்டிஸ்ட்?

குரோஷி
குரோஷி

எனக்கு சிவகார்த்திகேயன் பண்ற மிமிக்ரி பிடிக்கும். அப்புறம் எங்க சீசன்ல நவீன் பிடிக்கும். சிவகார்த்திகேயன் கையால டைட்டில் வின்னர் அவார்ட் வாங்கிய பிறகு நிறையா வாட்டி அவரை சந்திச்சு இருக்கேன். ஒவ்வொருவாட்டி பார்க்கும்போது பாராட்டுவார். பல ஆலோசனைகள் கொடுப்பார்.

எப்பவுமே ஜாலியா இருப்பேன்னு சொல்றீங்க, சமீபத்துல ரொம்ப உடைந்துபோன அனுபவம்?

இந்த அவமானங்களை அடமானம் வெச்சா தான் அடுத்த லெவல் போக முடியும்.

விஜய் சார் கூட ஒரு படம் பண்ணேன். ஒரே பிரேம்ல நாங்க இரண்டு பேரும் நின்னு நடிச்ச அனுபவம் மறக்கவே முடியாது. ஆனால் என் கெட்ட நேரம் அந்தக் காட்சிகளை எடிட்டிங்கில் தூக்கிட்டாங்க. நண்பர்கள்கிட்ட சொல்லி வெச்சிருந்தேன் விஜய் படத்துல நடிச்சிருக்கேன்னு. கடைசியில் அந்தப் படத்தில் வரவேயில்ல. நண்பர்கள் கலாய்ச்சாங்க. என்னடா விஜய் படத்துல தலைமறைவா நடிச்சிட்டு போனியான்னு. அது ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அதனாலதான் பெரிய ஹீரோ படங்களில் நடிப்பதற்கு யோசிக்க வேண்டி இருக்கு. என்ன பண்றது.. இந்த அவமானங்களை அடமானம் வெச்சாதான் அடுத்த லெவல் போக முடியும்.

உங்க லைஃப்ல சமீபத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்?

குரோஷி
குரோஷி

சமீபத்தில் ஒரு ஹோட்டலுக்கு போய் இருந்தேன். அங்கு இட்லி அவிச்சிட்டு இருந்த அம்மா என்னை மொறச்சி பார்த்துட்டு இருந்தாங்க. என்கூட வந்த நண்பர்கள் அனைவருக்கும் இட்லி வெச்சாங்க. எனக்கு மட்டும் வைக்கவே இல்லை. ஏன்னு கேட்டதற்கு, ``நீ குடும்பத்தில பொறுப்பா இல்லாம உங்க அண்ணனும் நீயும் ஊர் சுத்தறீங்க. உன் தம்பிதான் கஷ்டப்பட்டு சம்பாதிக்குறாரு. அவரையும் மதிக்கமாட்டீங்க. உனக்கு எல்லாம் சோறு போட முடியாது’’ அப்படின்னு சொல்லிட்டாங்க அப்புறம் தான் புரிஞ்சது அவங்க ராஜா ராணி சீரியல் பத்தி பேசிட்டு இருக்காங்கன்னு. எனக்கு ஷாக்கா ஆயிருச்சு. என்னடா இது சீரியல உண்மைன்னு நம்புறாங்கன்னு. இந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. ஆனால், மக்கள் மத்தியில் ராஜா ராணி இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்கு. அதை நினைக்கும்போது சந்தோஷமா இருந்துச்சு.

சீரியல் பார்ப்பதுண்டா?

குரோஷி
குரோஷி

நான் இந்தி டப்பிங் சீரியல்தான் பார்ப்பேன். தமிழ் சீரியல் பார்க்கமாட்டேன். ராதாகிருஷ்ணா, அதே கண்கள் மாதிரியான சீரியல்தான் பார்ப்பேன். அதற்கு ஒரு காரணம் இருக்கு... அதில் பெண்கள் அழகா இருப்பாங்க.. என்று சிரித்தவரிடம், `அப்போ தமிழ் சீரியலில் பெண்கள் அழகா இல்லையா' என்று கேட்டோம்.

நோ நோ அவங்க அளவுக்கு வராது. அவங்கதான் நிறைய பிரமாண்டமா நகைகள் போட்டுக்கிட்டு பிரமாண்டமா இருப்பாங்க. இப்போ நம்ம சீரியலில் அந்த மாதிரி மேக் அப், நகைகள்லாம் போட்டுக்கிட்டு நம்ம பெண்கள் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனாலதான் பெண்கள் டிவி விட்டு நகராம சீரியலே பார்த்துட்டு இருக்காங்க.

ராஜா ராணி செட்டில் உங்களுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் யார்?

குரோஷி
குரோஷி

ராஜா ராணி செட்ல எல்லாருமே நல்லாப் பேசுவாங்க. வடிவு நிஜத்துலயும் ரொம்ப ஜாலியான டைப் . நாட்டியான கேரக்டர். அவங்களுக்கு ஹுயூமர் நல்லா வரும். ஆனா எல்லார்கிட்டையும் கொஞ்சம் பார்த்து நடந்துப்பேன். என் வாய் சும்மா இல்லாம எதையாச்சு கலாய்ச்சி விட்ருவேன். அப்புறம் சீரியஸ் ஆகிடுவாங்க. ஸ்ரீதேவி மட்டும் எதையும் சீரியஸா எடுத்துக்குமாட்டாங்க. அவங்கள எவ்வளவு கலாய்ச்சாலும் ஜாலியா எடுத்துப்பாங்க. அதனால அவங்கக்கூட தான் ரொம்ப ஜாலியா பழகுவேன்.

அடுத்த பிளான்?

குரோஷி
குரோஷி

விஜய் டிவி-யின் கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ் வருது. அதில் மக்களை என்டர்டெயின்மென்ட் பண்ண ரெடியாகிட்டு இருக்கோம். ஒரு மூணு படம் பண்ணியிருக்கேன். வைபவ் கூட `சிக்ஸர்’ , சர்வாதிகாரி உள்ளிட்ட படங்களில் நடிச்சிருக்கேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism