லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

காதல் முறிவு... மறைக்கறதுல விருப்பமில்லை! - பர்சனல் பகிரும் ரியா விஸ்வநாதன்

ரியா விஸ்வநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரியா விஸ்வநாதன்

பிடிக்காத ரிலேஷன்ஷிப்புல, மரியாதை இல்லாமல் வாழ்க்கை முழுக்க கஷ்டப்படுறதை விட பரஸ்பரம் கைகுலுக்கி விலகுறது பெஸ்ட்.

விஜய் தொலைக்காட்சியின் ‘ராஜா - ராணி’ சீரியலில் இருந்து விலகி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சண்டக்கோழி’ சீரியலில் கமிட் ஆகியிருக்கிறார் ரியா விஸ்வ நாதன். டான்ஸ், மாடலிங், நடிப்பு என பிஸியாக இருக்கும் ரியாவுடன் ஒரு நேர்காணல்.

ஒரு ஷார்ட் பயோ சொல்லுங்க...

“நான் சென்னைப் பொண்ணு. எத்தி ராஜ் காலேஜ்ல டிகிரி முடிச்சேன். சின்ன வயசுல இருந்து டான்ஸ்னா ரொம்ப பிடிக்கும். டான்ஸ் கிளாஸ் சேர்த்து விடுங்கனு வீட்டுல சொன் னப்போ, இப்போ சேர்த்து விடுறேன், அப்போ சேர்த்து விடுறேன்னு காலேஜ் வரை இழுத்துட்டாங்க. அதனால டி.வில பார்த்து நானே டான்ஸ் கத்துக் கிட்டேன். இப்போ மாடலிங், ஆக்டிங்னு எனக்கு பிடிச்ச வேலைகளை ரொம்ப ஜாலியா பண்ணிட்டு இருக்கேன்.’’

சீரியல்ல நடிக்குற வாய்ப்பு எப்படி வந்துச்சு?

“காலேஜ் படிக்கும்போது ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து ஸ்டேஜ்ல டான்ஸ் ஷோ பண்ண ஆரம்பிச்சேன். அது மூலமா மாடலிங் வாய்ப்பு கிடைச் சுது. மாடலிங் மூலமா சீரியல் வாய்ப்பு கிடைச்சது. சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச ஒரு வருஷத்துல மக்கள்கிட்ட இருந்து நிறைய அன்பு கிடைச்சுருக்கு. இப்போ நான் ரொம்ப ஹேப்பி.’’

ரியா விஸ்வநாதன்
ரியா விஸ்வநாதன்

`ராஜா - ராணி' சீரியல்ல முக்கியமான கேரக்டர்லேருந்து ஏன் விலகினீங்க?

“எனக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டுச்சு. அதனால் விலகிட்டேன். பொதுவா, ‘வொர்க் ஃலைப் பேலன்ஸ் பண்ணத் தெரியணும்’னு சொல்வாங்க. அப்படிப் பண்ண முடியாத சூழல்ல ஸ்ட்ரெஸ் ஆகுறதைவிட குட்டி பிரேக் எடுத்துட்டு பவர்ஃபுல் கம்பேக் கொடுக்கலாம். அதைத்தான் நான் பண்ணியிருக்கேன். இப்போ நான் கமிட் ஆகியிருக்குற சீரியல்ல என் ரோலை எனர்ஜியோட பண்ணிட்டு இருக்கேன்.”

உங்க வெற்றிக்குப் பின்னால் இருக்கும் இருக்கும் ஆண் யார்?

``என்னோட மிகப்பெரிய பலம் என் அப்பா விஸ்வநாதன்தான். என் பெயரை ரியானு எங்கேயும் சொல்லமாட்டேன் ரியா விஸ்வநாதன்னு தான் சொல்வேன். என்னோட எல்லா முயற்சிகள்லயும் துணையா இருக்கிறவர். என் கையில் ‘DAD’ னு டாட்டூகூட போட்டிருக்கேன். விருப்பப்பட்டதைச் செய்யுற சுதந்திரம் கிடைச்சா பொண்ணுங்க ஈஸியா ஜெயிச்சிடலாம்.''

உங்களோட பிரேக் அப் பற்றி சோஷியல் மீடியாவுல பரவின தகவல்கள் உண்மையா?

‘`உண்மைதான். பிரேக் அப் ஆனதை மறைக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை. பிடிக்காத ரிலேஷன்ஷிப்புல, மரியாதை இல்லாமல் வாழ்க்கை முழுக்க கஷ்டப்படுறதை விட பரஸ்பரம் கைகுலுக்கி விலகுறது பெஸ்ட். என் பிரேக் அப் பத்தி சொன்னப்போ, என் குடும்பமே எனக்குத் துணையா நின்னு ஸ்ட்ரெஸ்லேருந்து மீண்டு வர உதவினாங்க. பிரேக் அப் ஸ்ட்ரெஸ்லேருந்து மீண்டு வர வொர்க் அவுட் பண்ணேன். என்னை பிஸியா வெச்சுக் கிட்டேன். நமக்குப் பிடிச்ச விஷயத்தைச் செய்ய ஆரம்பிக்கும்போது கஷ்டம் எல்லாம் காணாமல் போயிரும்.’’