Published:Updated:

''அப்பா அம்மா என் ஆசைக்கு சம்மதிச்சாங்க... நான் அவங்க ஆசையை!'' – ’ராஜா ராணி’ வைஷ்ணவி

'ராஜா ராணி’ வைஷ்ணவி
'ராஜா ராணி’ வைஷ்ணவி ( hp )

'' 'நாயகி' சீரியல்ல நட்சத்திராவுக்கு தங்கச்சியா நடிச்சேன். அந்த கேரக்டர்தான் எனக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்துச்சு.''

''படிச்சது என்னமோ பிசியோதெரபி தாங்க... ஆனா, பிடிச்சது நடிப்பு!'' எனப் புன்னகைக்கிறார் வைஷ்ணவி சுந்தர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா ராணி சீசன்-2' வில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் வைஷ்ணவி. அவரிடம் பேசினேன்.

"என்னுடைய சொந்த ஊர் திருப்பதி. அம்மா தமிழ் டீச்சர். அம்மாவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆனதால் நாங்க புதுக்கோட்டைக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம். எங்க வீட்ல நான் ஒரே பொண்ணு. வீட்ல ரொம்ப செல்லம். அம்மா, அப்பாவை பொறுத்தவரைக்கும் நான் நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகணும். அவங்களுக்காகவே பிசியோதெரபி படிச்சேன். இந்த வருஷம்தான் பிசியோதெரபி முடிச்சேன். நான் பிளஸ்டூ படிக்கும்போது 'டிக்டாக்' எனக்கு அறிமுகமாச்சு. டிக்டாக் பண்ண எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னுடைய டிக்டாக் பார்த்துட்டு ஒரு யூடியூப் சேனலுக்காக ஆல்பம் சாங்கில் நடிக்க கேட்டாங்க. நானும் நடிச்சேன். அந்த பாட்டை எங்க ஊரை சுற்றி இருக்கிற லோக்கல் சேனல்ல எல்லாம் போட்டாங்க. முதன்முறையா அப்போதான் நானே என்னை டிவியில் பார்த்தேன். அது எனக்கு ரொம்ப பெருமையான தருணமாக இருந்துச்சு.

ராஜா ராணி வைஷ்ணவி
ராஜா ராணி வைஷ்ணவி

அந்த ஆல்பம் சாங்கை தொடர்ந்து நிறைய ஆடிஷன் கால் வந்துச்சு. நானும் நிறைய ஆடிஷனில் கலந்துகிட்டேன். அப்படித்தான் விகடன் புரொடக்‌ஷனில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. 'ரன்' தான் என்னுடைய முதல் சீரியல். பிறகு, அதே புரொடக்‌ஷன்ல 'நாயகி' சீரியல்ல நட்சத்திராவுக்கு தங்கையா நடிச்சேன். அந்த கேரக்டர் தான் எனக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்துச்சு. அந்த கேரக்டர் பார்த்துட்டு தான் 'ராஜா ராணி'யில் நடிக்க கூப்பிட்டாங்க.

என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான செட்னா அது நிச்சயம் 'ராஜா ராணி' செட் தான். நான் ஒரே பொண்ணுங்குறதனால அக்கா, அண்ணன், தங்கச்சின்னு கூட்டுக்குடும்பமா இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டுருக்கேன். அதுக்காக ஏங்கவும் செஞ்சிருக்கேன். 'நாயகி' சீரியல்ல அக்கா பாசம் கிடைச்சது. இப்போ 'ராஜா ராணி'யில் அண்ணன்கள் பாசத்தை அனுபவிச்சிட்டு இருக்கேன். ஷூட்டிங்ல மட்டும் இல்லைங்க ஷூட் இல்லாதப்பவும் அவங்க என்னை கூடப் பொறந்த தங்கச்சி மாதிரி தான் நடத்துவாங்க'' என்றவரிடம் மறக்கமுடியாத தருணம் குறித்துக் கேட்கவும் எமோஷனலாகப் பேச ஆரம்பித்தார்.

''அப்பா அம்மா என் ஆசைக்கு சம்மதிச்சாங்க... நான் அவங்க ஆசையை!'' – ’ராஜா ராணி’ வைஷ்ணவி

''ஆரம்பத்துல நான் நடிக்கப் போறேன்னு சொன்னப்போ வீட்ல அவ்வளவா சப்போர்ட் இல்லை. ஆனா, அவங்க ஆசைப்பட்ட மாதிரியே நான் நல்லா படிச்சதனால அவங்க என் ஆசைக்கு சம்மதிச்சாங்க. நானும் இப்ப பிசியோதெரபி முடிச்சு அவங்க ஆசையை நிறைவேத்திட்டேன். முதன்முறையா நான் நடிச்ச சீரியல் டிவியில் டெலிகாஸ்ட் ஆனதை பார்த்துட்டு என் அம்மா என்கிட்ட, 'நீ நல்லா பண்ணியிருக்க... இன்னும் நல்லா பண்ணு'ன்னு சொன்னாங்க. அந்த தருணத்தை எப்பவும் என்னால மறக்கமுடியாது. அம்மா, அப்பாகிட்ட இருந்து அந்த மாதிரி பாராட்டு கிடைக்கும்போது அதுதான் என்னை பொறுத்தவரை மிகப்பெரிய அவார்ட்'' எனப் புன்னகைக்கிறார் வைஷ்ணவி.

அடுத்த கட்டுரைக்கு