Published:Updated:

அய்லா பார்ட் 2... இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சஞ்சீவ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'ராஜா ராணி' சஞ்சீவ் - ஆல்யா மானஸா
'ராஜா ராணி' சஞ்சீவ் - ஆல்யா மானஸா

'கயல்' சீரியல் தொடர்பான புரொமோஷனில் சஞ்சீவ், ஒரு குட் நியூஸ்... என்றதும் எல்லாரும் என்ன நியூஸ் என கேட்கவும், 'அய்லா பார்ட் 2' என்றார்.

சன் டிவியில் புதியதாக ஆரம்பமாகியிருக்கும் தொடர் 'கயல்'. இந்தத் தொடரில் 'யாரடி நீ மோகினி' தொடரில் நடித்து புகழ்பெற்ற சயித்ராவும், 'ராஜா ராணி' தொடர் மூலமாக மக்கள் மத்தியில் இடம் பிடித்த சஞ்சீவும் நடிக்கிறார்கள். இந்த சீரியல் தொடர்பான புரொமோஷன் கடந்த வாரத்தில் நடந்தது.
சஞ்சீவ் - ஆல்யா
சஞ்சீவ் - ஆல்யா

அந்த புரொமோஷனில் சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் இன்ஸ்டாகிராம் லைவ் மூலமாக கலந்துரையாடினார்கள். அந்த லைவ்வில் சஞ்சீவ் பேசியது தற்போது சமூகவலைதள பக்கங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

'ராஜா ராணி' தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போது சஞ்சீவும், ஆல்யா மானசாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். ஆரம்பத்தில் அவர்களுடைய திருமணத்திற்கு ஆல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறி சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிகளுக்கு அய்லா என்கிற பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா மானசா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா ராணி சீசன் 2'வில் நாயகியாக நடித்து வருகிறார்.

சஞ்சீவ் - ஆல்யா
சஞ்சீவ் - ஆல்யா
`பாரதி கண்ணம்மா' தொடரின் அடுத்த கண்ணம்மா இவர்தானா? யார் இந்த வினுஷா தேவி?

இந்நிலையில், 'கயல்' சீரியல் தொடர்பான புரொமோஷனில் சஞ்சீவ், ஒரு குட் நியூஸ்... என்றதும் எல்லாரும் என்ன நியூஸ் என கேட்கவும், 'அய்லா பார்ட் 2' என்றார். "இந்த லைவ்வில்தான் முதன்முதலா இந்த நியூஸை சொல்றேன்" என்றதும் லைவ்வில் இணைந்திருந்த அனைவரும் வாழ்த்துகள் கூறினார்கள்.

ஏற்கெனவே 'பாரதி கண்ணம்மா' தொடரிலிருந்து ரோஷினி வெளியேறப் போகிறார் என்பதே பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் கர்ப்பமான காரணத்தினால் ஆல்யாவும் சீரியலிலிருந்து விலகிவிடுவாரோ என்கிற எண்ணம் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு