Published:Updated:

`வைரல் ஃபோட்டோஷூட்டிற்கான காரணம் இதுதான்!' - ராஜலட்சுமி செந்தில்கணேஷ்

ராஜலட்சுமி - செந்தில்கணேஷ்

ஃபோட்டோஷூட் பண்ணும்போதுதான் நம்மளை கொஞ்சம் புதுசா பார்க்கிற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். நாங்க ரெண்டு பேரும் எப்பவும் டிரெடிஷனல் ஆடைகளிலேயே இருக்கிறதனால எங்களுக்கும் அந்த லுக் வேற மாதிரி புதுசா தெரியும் என்பதால் சரி பண்ணலாம்னு முடிவு பண்ணினோம்.

`வைரல் ஃபோட்டோஷூட்டிற்கான காரணம் இதுதான்!' - ராஜலட்சுமி செந்தில்கணேஷ்

ஃபோட்டோஷூட் பண்ணும்போதுதான் நம்மளை கொஞ்சம் புதுசா பார்க்கிற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். நாங்க ரெண்டு பேரும் எப்பவும் டிரெடிஷனல் ஆடைகளிலேயே இருக்கிறதனால எங்களுக்கும் அந்த லுக் வேற மாதிரி புதுசா தெரியும் என்பதால் சரி பண்ணலாம்னு முடிவு பண்ணினோம்.

Published:Updated:
ராஜலட்சுமி - செந்தில்கணேஷ்

'கோர்ட் சூட்டிற்கு மேட்ச் ஆன கண்ணாடியுடன் செந்தில் கணேஷ்.. முழுநீள சல்வாரில் ராஜலட்சுமி.. என அவர்கள் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் இன்றைக்கு சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்டிங்! அந்த புகைப்படங்களுக்கு பின்னால் உள்ள கதைகள் குறித்து தெரிந்து கொள்ள ராஜலட்சுமி செந்தில்கணேஷ் தம்பதியிடம் பேசினோம்.

 ராஜலட்சுமி செந்தில்கணேஷ்
ராஜலட்சுமி செந்தில்கணேஷ்

"சென்னையில் பாவனா என்கிற மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கொலாபரேஷன் ஷூட்டிற்காக எனக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியிருந்தாங்க. ஃபோட்டோஷூட் பண்ணும்போதுதான் நம்மளை கொஞ்சம் புதுசா பார்க்கிற மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். நாங்க ரெண்டு பேரும் எப்பவும் டிரெடிஷனல் ஆடைகளிலேயே இருக்கிறதனால எங்களுக்கும் அந்த லுக் வேற மாதிரி புதுசா தெரியும் என்பதால் சரி பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். ஆனா, ஆரம்பத்திலேயே ஏற்கெனவே பண்ணின ஃபோட்டோஷூட் மாதிரியாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம்னு அவங்ககிட்ட சொல்லியிருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவங்களும் வெட்டிங் தீம் பண்ணலாம்னு சொன்னாங்க. அதுமட்டுமில்லாமல், நிஷா என்கிற காஷ்டியூம் டிசைனர் நாங்க இதுவரை டிரை பண்ணிடாத புது லுக்கில் ஆடைகள் டிசைன் பண்ணி தந்தாங்க. அந்த போட்டோகிராபரும் எங்களை பொறுமையாவும், வித்தியாசமாகவும் ரொம்பவே அழகா போட்டோ எடுத்து கொடுத்தார். கிராமத்து வீடு செட்டப்பில் வெட்டிங் தீமில் ஃபோட்டோஸ் எடுத்தோம். எங்க கல்யாணத்தின்போது சாதரணமா மேக்கப் போடுறதுக்குகூட எனக்கு டைம் இல்ல. வெரைட்டியான லென்ஸ் பயன்படுத்தி நாங்க எடுத்துகிட்ட முதல் வெட்டிங் புகைப்படம் இதுதான்!

 ராஜலட்சுமி செந்தில்கணேஷ்
ராஜலட்சுமி செந்தில்கணேஷ்

அவர் கோர்ட் சூட் போட்டுட்டு, நான் சல்வார் போட்டுட்டு அடுத்ததா புகைப்படம் எடுத்தோம். அந்த சல்வார் எனக்கு செட் ஆகலையோங்கிறது என்னோட ஃபீலிங் ஆக இருந்துச்சு. ஆனா, கோர்ட் சூட்டும் அந்த கண்ணாடியும் என் கணவருக்கு ரொம்ப அழகா இருந்துச்சு. போட்டோகிராபர்கிட்ட சொல்லி அவரை தனியா நிறைய ஃபோட்டோஸ் எடுக்கச் சொன்னேன். அவருக்கு நடிப்பிலும் ஆர்வம் இருக்கு. இந்த காஸ்டியூம் மூலமா இவருக்கு இப்படியான ஆடைகள் தான் செட்டாகும் என்கிற எண்ணமும் மாறும்னு தோணுச்சு. இந்த போட்டோஷூட்டிற்கும் பாசிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டு கம்மென்ட்ஸூம் வந்துட்டு தான் இருக்கு. நான் பாசிட்டிவை மட்டும் எடுத்துக்கிறேன்!" என்றார்.