90களின் ஃபேவரைட் தொடர்களுள் ஒன்று 'ரமணி Vs ரமணி'. குடும்பத்தில் நடக்கும் குட்டி, குட்டி விஷயங்களை அழகாய் காமெடி கலந்து கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது இந்தத் தொடர். தற்போது ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் 'ரமணி Vs ரமணி 3.0' தொடர் வெளியாகியிருக்கிறது. ரமணி Vs ரமணி ஷுட்டிங் நடக்கும் செட்டிற்குச் சென்றோம். அப்போது அந்தத் தொடரின் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமியிடம் பேசினோம்.

ரமணி Vs ரமணி இன்னும் மக்கள் மனதில் ஆழமா இடம் பிடிச்சிருக்குன்னு சமீபத்தில்தான் எங்களுக்கு தெரிஞ்சது. சமூக வலைதள பக்கங்களில் முன்னாடி ஒளிபரப்பான தொடரின் வீடியோ கிளிப்கள் வைரலாகிட்டு இருந்துச்சு. பலரும் எங்களுக்கே அந்த வீடியோக்களை ஷேர் பண்ணுவாங்க. சரி மக்களுக்கு இவ்வளவு பிடித்தமான தொடரின் அடுத்த பாகத்தை நாம ஏன் எடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு அப்படி ஆரம்பமானதுதான் ரமணி Vs ரமணி 3.0.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தொடர் ஆரம்பிக்கப் போறோம்னு சொன்னதுமே 90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் இந்த தொடர் ரீச் ஆச்சு. இப்ப உள்ள ட்ரெண்டிங்கில் உள்ள பசங்களுக்கு பிடிக்குமா என்கிற கேள்வி தான் எழுந்தது. பேமிலியில் நடக்கிற சண்டைகள் என்கிற கான்செப்ட் எல்லா கால கட்டத்துக்கும் பொதுவானது. அதுல, நாம பார்க்க வேண்டியது இந்த டிரெண்ட்டிற்கு ஏற்ற மாதிரியான விஷயங்களை புகுத்தணும் என்பது மட்டும் தான்.
எங்களுடைய முதல் சாய்ஸ் ராம்ஜி - தேவதர்ஷினி ஆகத்தான் இருந்துச்சு. தேவதர்ஷினி இப்ப படங்களில் பிஸியா இருக்கிறதனால அவங்களால தேதி ஒதுக்க முடியல. அவங்களுடைய ரசிகர்கள் நிச்சயமா அவங்களை மிஸ் பண்ணுவாங்க. ஆனாலும், எபிசோட் பார்க்கும்போது அவங்களை மிஸ் பண்ணின ஃபீலிங் நிச்சயம் வராது என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இயக்குனர் நாகாவிடம் பேசிய போது, நார்மலா என்னுடைய வீட்டில், என் ஃப்ரெண்ட்ஸ் வீட்டில் நடக்குற விஷயங்களை தான் கான்செப்ட் ஆக்குறோம். அதை நகைச்சுவை கலந்து கொண்டு போகிறதுன்னால பலருக்கு ரமணி Vs ரமணி பிடிச்சிருக்கு. ரமணி Vs ரமணி 1வது சீசன் கல்யாணம் ஆன புதியதில் வீட்டில் நடக்கிற விஷயங்களை மையப்படுத்தி இருக்கும். சீசன் 2 குழந்தை பிறந்த பிறகான விஷயங்கள் குறித்து இருக்கும். சீசன் 3 குழந்தைங்க வளர்ந்துட்டாங்கன்னா அவங்க என்னென்ன கேள்விகள் கேட்பாங்க.. நம்மளுடைய பதில் என்னவா இருக்கும் என்பது போன்ற கதைக்களத்தில் உருவாக்கியிருக்கிறோம். 20 வருடங்கள் கழித்து ரமணி Vs ரமணி மூன்றாவது சீசனில் என் பொண்ணு, என் பையன்கிட்ட நான் எப்படி ரியாக்ட் பண்ணுவேன் என்கிற கான்செப்டில் ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணியிருக்கோம். அதுவும் காமெடி கலந்து இருக்கும்போது ரசனைக்கு பஞ்சம் இருக்காது!' என்றார்.

மேலும், இந்தத் தொடர் குறித்து பல விஷயங்கள் நம்முடன் பகிர்ந்து கொண்டனர். அந்த வீடியோ காண லிங்கை கிளிக் செய்யவும்!