Published:Updated:

செந்தமிழ்... சென்னை தமிழ்! - ரம்யா பாண்டியனிடம் `கலகல' காதலை சொன்ன புகழ் #Video

ரம்யா பாண்டியன் - புகழ்
ரம்யா பாண்டியன் - புகழ்

`குக்கு வித் கோமாளி’ சாதாரண சமையல் நிகழ்ச்சிபோல் மசாலாக்களை மட்டும் தூவாமல், காமெடிகளையும் சேர்த்து கூவியதால், இந்த நிகழ்ச்சி செம ஹிட். 

விஜய் டிவியின் `குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முதல் சீஸன், கடந்த வாரத்தோடு நிறைவு பெற்றது. தில் வனிதா வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாதாரண சமையல் நிகழ்ச்சிபோல் மசாலாக்களை மட்டும் தூவாமல், காமெடிகளையும் சேர்த்து கூவியதால் இந்த நிகழ்ச்சி செம ஹிட்.

குக்கு வித் கோமாளி புகழ், ரம்யா பாண்டியன்
குக்கு வித் கோமாளி புகழ், ரம்யா பாண்டியன்

இந்த நிகழ்ச்சியின் மூலம் பயங்கரமாக வைரலான புகழும் நடிகை ரம்யா பாண்டியனும்தான், `குக்கு வித் கோமாளி’யின் ஃபேவரைட் ஜோடி. ரம்யாவை கவர்வதற்காகப் புகழ் செய்யும் அலுச்சாட்டியங்கள் எல்லாமே வேற லெவல் ஹிட்டடிக்க, அவர்கள் இருவரையும் அழைத்து பேட்டி எடுத்தோம்.

`குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் பயங்கர சோகத்தில் இருந்தவர்கள், இந்தச் சந்திப்பின் மூலம் சற்று ஆறுதலாகவே இருந்தார்கள். முதல் எபிசோடில் இருந்து ஃபைனல் எபிசோடு வரை நடந்த கலாட்டாக்கள், இருவருக்கும் பிடித்த குக் மற்றும் கோமாளிகள் யார் என்பதை எல்லாம் இந்தப் பேட்டியில் பகிர்ந்துகொண்டார்கள்.

இதுமட்டுமன்றி, புகழிடம் செந்தமிழ், ஆங்கிலம் மற்றும் சென்னை தமிழ் என மூன்று விதமாக, உங்கள் காதலை ரம்யா பாண்டியனிடம் சொல்ல வேண்டும் என ஒரு ஸ்வீட் டாஸ்க்கைக் கொடுத்தோம் (இது புகழுக்கு மட்டுமே ஸ்வீட்டான டாஸ்க்). இந்த டாஸ்க்கை சிறப்பாகச் செய்த புகழ், பல காமெடி கவுன்ட்டர்களை மழைச்சாரல் என இந்தப் பேட்டி முழுவதும் தூவியிருக்கிறார். `புகழ் மட்டும்தான் காமெடி பண்ணுவானா, நான் `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் நடுவர் தெரியுமா’ என ரம்யா பாண்டியனும் தன் பங்குக்கு பல கவுன்ட்டர்களைக் கொடுத்துள்ளார். அவையெல்லாம் இந்த வீடியோ பேட்டியில் பார்த்து சிரிச்சுக்கோங்க ஃபிரெண்ட்ஸ்...

அடுத்த கட்டுரைக்கு