Published:Updated:

``ரம்யாவுக்கு ஆஜித்தை ஏன் பிடிச்சு போச்சுன்னா?!" - காரணம் சொல்லும் ரம்யாவின் சகோதரி

எப்போதுமே புன்னகையைச் சிந்தும் ரம்யா இயல்பில் எப்படி என்பதைப் பகிர்ந்துகொள்கிறார் ரம்யாவின் சகோதரி சுந்தரி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. கடந்த சீஸன்களைவிட இந்த சீஸனில் பரபரப்புகள் குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு போட்டியாளருக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் தன்னுடைய சிரிப்பின் மூலமும், எந்தச் சூழலையும் இயல்பாகக் கடந்து செல்வதன் மூலமும் நிறைய பேரின் மனங்களில் இடம் பிடித்துள்ளார் ரம்யா பாண்டியன். எப்போதுமே புன்னகையைச் சிந்தும் ரம்யா இயல்பில் எப்படி என்பதைப் பகிர்ந்துகொள்கிறார் ரம்யாவின் சகோதரி சுந்தரி.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்

``ரம்யா எங்க வீட்டோட செல்லப் பொண்ணு. எப்போதும் துறுதுறுன்னு இருப்பா. ரொம்பவே மெச்சூர்டு. யாரையும் காயப்படுத்தக் கூடாதுங்கிறதில் தெளிவா இருப்பா. நிறைய பேர் இன்னும் ரம்யாவோட கேரக்டர் பிக்பாஸ் வீட்டில் முழுமையாக வெளிய வரலைனு சொல்றாங்க. ஆனா, உண்மையில் இத்தனை வருஷமா என் தங்கச்சியா நான் பார்த்த ரம்யாவைத்தான் இப்போ மக்களும் பார்க்கிறாங்க. ஒருத்தரால் எப்படி 80 நாளைக்கு மேல் நடிக்க முடியும் சொல்லுங்க.

ரம்யா ரொம்ப ஸ்ட்ராங். சீக்கிரத்தில் அழவும், கோபப்படவும் மாட்டா. ஆனா, அடுத்தவங்களுக்கு தான் சொல்ல நினைக்கிறதை ரொம்ப ஷார்ப்பா சொல்லி முடிச்சுருவா. அது அவளோட ப்ளஸ்னுகூட சொல்லலாம். எந்த ஒரு விஷயத்தைப் பேசுறதுக்கு முன்னாடியும், செய்றதுக்கு முன்னாடியும் பல முறை யோசிச்சுட்டுதான் செய்ய ஆரம்பிப்பா. அதை நிறைய இடங்கள்ல மக்களே உணர்ந்து இருப்பாங்க. அதே மாதிரி அடுத்தவங்க விஷயத்திலும், வாழ்க்கையிலும் தேவையில்லாமல் தலையிடுறதும் அவளுக்குச் சுத்தமா பிடிக்காது. இதையெல்லாம் தாண்டி, ரொம்ப பாசமான பொண்ணு. ஒருத்தரை பிடிச்சுப் போச்சுனா அவங்களுக்காக நிறைய விட்டுக்கொடுப்பா.

ரம்யா - சுந்தரி
ரம்யா - சுந்தரி

எனக்கும் ரம்யாவுக்கும் ஒரு வருஷம்தான் வயசு வித்தியாசம். அதனால் என் கூட ஃபிரெண்ட் மாதிரி இருப்பா. ரெண்டு பேருடைய எண்ண ஓட்டமும் ஒரே மாதிரி இருக்கும். எங்க தம்பி எங்களைவிட 10 வருஷம் சின்னவன். என் தம்பிக்கு இன்னோர் அம்மாவாதான் ரம்யா இதுவரை இருந்திருக்கா. அவனை அவ்வளவு கேர் எடுத்துப் பார்த்துப்பா. அதனாலயோ என்னவோ பிக்பாஸ் வீட்டில் ஆஜீத்தைப் பார்த்ததும் தம்பியை கேர் பண்ற மாதிரி கேர் பண்றான்னு நினைக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரம்யா, எங்க அப்பாவோட செல்லம். அப்பா இறந்ததுக்கு அப்புறம் அவளே தனக்கான குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிட்டா. யாரையும் சார்ந்து வாழக் கூடாதுனு நினைப்பா. தன்னுடைய அடையாளத்தை உருவாக்க நிறைய தோல்விகளைச் சந்திச்சுருக்கா. ஆனால், ஒவ்வொரு தோல்வியிலும் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டு அடுத்த முறை சரியா செய்யணும்னு மெனக்கெடுவா.

ரம்யா
ரம்யா

எங்க அம்மா பெரிசா வெளி உலகம் தெரியாதவங்க. அப்பா இறந்ததுக்கு அப்புறம் சின்னச் சின்ன விஷயத்திலும் அம்மாவை ரம்யாதான் வழிநடத்துவா. எங்க குடும்பத்தில் எந்த முடிவு எடுக்கிறதா இருந்தாலும், ரம்யாகிட்ட ஒப்பீனியன் வாங்கிருவோம். உறவுகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க கூடிய பொண்ணு ரம்யா. என் கணவரை எங்க குடும்பத்தோட மூத்த அண்ணன் மாதிரி நினைச்சு எல்லா விஷயங்களையும் ஷேர் பண்ணிப்பா. அவரு கொடுக்குற அட்வைஸையும் கேட்டு நடந்துப்பா" என்ற சுந்தரியிடம் ரம்யா பிக்பாஸ் ஷோவில் அணிந்து வரும் ஆடைகள் பற்றிக் கேட்டோம்.

ரம்யாவுக்கு விதவிதமா டிரெஸ் பண்ணப் பிடிக்கும். நிறைய நியூ லுக் டிரை பண்ணணும்னு நினைப்பா. முதல்ல ட்ரெண்ட் ஆன மொட்டை மாடி போட்டோ ஷூட்கூட அப்படிப் புதுசா முயற்சி பண்ணதுதான். ரம்யா பிக்பாஸ் ஷோவுக்கு போகப்போறதே ஷோ ஆரம்பிக்குறத்துக்கு 10 நாளைக்கு முன்னாடிதான் உறுதியாச்சு. நான் ஒரு ஃபேஷன் டிசைனர் என்பதால் நிறைய ஐடியாக்கள் கொடுத்தேன்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன்
"ஆக்ச்சுவலா மொட்டைமாடி போட்டோஷூட்ல என்ன நடந்துச்சுனா...!?''  வைரல் க்ளிக் ரம்யா பாண்டியன்

ரம்யாக்கு ஏற்கெனவே ஒரு ஸ்டைலிஸ்ட் குழுவும் இருக்காங்க. நாங்க எல்லாரும் சேர்ந்து வடிவமைச்ச ஆடைகளைத்தான் பிக்பாஸ் ஷோவில் ரம்யா போட்டுருக்கா" என்றவரிடம், குக் வித் கோமாளியில் ரம்யா சமைக்கிறதைப் பார்த்தோம். சமையல் எப்படிக் கத்துக்கிட்டாங்க? சமையல் தவிர வேற என்னவெல்லாம் ரம்யாவுக்குப் பிடிக்கும் என்று கேட்டோம்.

எங்க அப்பா சூப்பரா சமைப்பார். அப்பாகிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான் சமையல். குக் வித் கோமாளி ஷோவுக்கு போகும்போது நிறைய ரெசிப்பிகளை வீட்டுலேயே செய்து பயிற்சி எடுத்துக்கிட்டா. சமையல் தவிர பெயின்டிங், டான்ஸ், கார்டனிங், யோகா, டெய்லரிங்கும் அவளுக்கு அத்துப்படி.

`ரூஃபிங் வேலைக்குப் போனேன்; 5 நரம்பு கட்டாகிருச்சு!' - கலங்கவைக்கும் `குக் வித் கோமாளி’ புகழ்

ரம்யா டைட்டில் ஜெயிச்சாலும் ஜெயிக்கலைன்னாலும் மக்களோட இதயத்தில் அவங்க வீட்டுப்பொண்ணுக்கான இடத்தைப் பிடிச்சுருக்கா. அதுவே வெற்றிதான். மக்களோட ஆதரவு இருந்தா டைட்டிலும் ஜெயிச்சு வருவா. பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார் சுந்தரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு