Published:Updated:

"உங்களுக்கு மட்டுமா, விஜய் சேதுபதிக்கே அசெளகரியங்கள் இருந்திருக்கலாம்!" - சின்னத்திரை கலைநிகழ்ச்சி சர்ச்சை

"'நிகழ்ச்சியால சிலர் பெர்சனலா லாபமடைஞ்சிருக்கிற மாதிரி தெரியுது'ன்னு பேசியிருக்காங்க. நான் மூணு முறை தேர்தல்ல தோல்வியடைஞ்சு, நாலாவது முறை ஜெயிச்சிருக்கேன்."

`மலேசியாவில் நடந்த கலைநிகழ்ச்சியில் ஏக குளறுபடிகள்; சோறு தண்ணி இல்லாம அவதிப்பட்டோம்' எனச் சின்னத்திரைக் கலைஞர்கள் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா, கலைநிகழ்ச்சி தொடர்பாக சில விஷயங்களை இங்கே பகிர்கிறார்.

Ravi Varma with Vijay Sethupathy
Ravi Varma with Vijay Sethupathy

"தொடக்கத்துல ஆகஸ்ட் கடைசியில ஒரு தேதியில இந்தக் கலைநிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். சிறப்பு விருந்தினர்களா சினிமா நட்சத்திரங்களை அழைச்சுட்டுப்போக நினைச்சு, அதுக்கு முயற்சி செஞ்சதுல யாரையும் எங்களால அந்தத் தேதிக்குக் கமிட் பண்ண முடியல. அந்த நாள்ல நாங்க அழைக்க நினைச்ச பலருக்கும் ஷூட்டிங் இருந்ததுதான் காரணம். அதனால, அந்த நாளை மாத்தி, செப்டம்பர் 28-ம் தேதி நடத்தலாம்னு முடிவெடுத்தோம். ஆனா, இந்தத் தேதி, நடிகை குஷ்பு, சங்கச் செயலாளர் `ஆடுகளம்' நரேன் ஆகியோருக்குச் சிக்கலாச்சு. குஷ்பு அந்த நாள்ல தன்னோட மகளுடன் லண்டன்ல இருக்கணும்; நரேனுக்கும் வெளிநாட்டுல ஷூட்டிங்.

தன்னால ஷோ அன்னைக்குக் கலந்துக்க முடியாதுங்கிற ஒரே காரணத்துனாலதான், நிகழ்ச்சி ஏற்பாடுகள்ல இருந்து நரேன் ஒதுங்கியிருந்தாரே தவிர, சிலர் சொன்னமாதிரி நிதி விவகாரம் என்பதெல்லாம் அப்பட்டமான அவதூறு. `சங்கச் செயலாளரே கலந்துக்கல; சங்கத்துல தலைவருக்கும் செயலாளருக்கும் இடையே பிரச்னைனு எல்லாம் பேசுறவங்கள்ல எத்தனை பேருக்குத் தெரியும், விஜய் சேதுபதியை நிகழ்ச்சிக்கு வரவெச்சதுல நரேனுடைய பங்குதான் முக்கியமானதுன்னு! வாய் புளிச்சதோ, மாங்காய் புளிச்சதோன்னு பேசுறதை நினைக்கிறப்போதான் வருத்தமா இருக்கு.

Ravi Varma team
Ravi Varma team

நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து சொல்லியிருந்தார். மலேசிய அரசாங்கம் ஒத்துழைப்பு தந்ததையும் நாங்க மறக்கக் கூடாது. இப்போ மலேசியத் தூதரகத்துல இருந்து பேசினாங்க. `மலேசியாவுல எங்களுக்குச் சோறு தண்ணி இல்லை'னு போயிட்டு வந்த சிலர் பேசுனது எங்க காதுக்கும் வந்தது'ன்னு ரொம்பவே வருத்தப்பட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்பாடுகள்ல சின்ன சின்னதா குழப்பங்கள் இருந்ததை நான் மறுக்கல. அதுக்குக் காரணம், 120 பேர் செல்லத் திட்டமிட்டு கடைசியில அந்த எண்ணிக்கை 180 ஆனதுதான். டிவி ஒளிபரப்புக்காகக் கடைசி நேரத்துல டெக்னீஷியன்களெல்லாம் போகவேண்டிய சூழல் வந்ததால, கூடுதலான எண்ணிக்கையைத் தவிர்க்க முடியல. அதனால, சின்ன சின்ன அசௌகரியங்கள் எல்லோருக்குமே இருந்தது.

180 கோடி பட்ஜெட், `ட்ரிபிளிங்' விஜய், கண்ணீர் கன்ஃபார்ம்! - `பிகில்' ஹைலைட்ஸ் சொல்லும் அர்ச்சனா கல்பாத்தி

பி.வாசு, நாசர் போன்ற சீனியர்கள் இதைப் புரிஞ்சுகிட்டாங்க. விஜய் சேதுபதிக்கேகூட சில அசௌகரியங்கள் இருந்திருக்கலாம். அவர் எதையும் எங்ககிட்ட சொல்லாம, பின்னிரவு வரை அரங்கத்துல இருந்து நிகழ்ச்சிகளை ரசிச்சார். ஒருசிலரால சூழ்நிலையைப் புரிஞ்சுக்க முடியல, அவ்வளவுதான்!

மத்தபடி, ஆர்ட்டிஸ்டுகள் ஒவ்வொருத்தருமே சங்கத்துக்காகப் பணம் எதுவும் வாங்கிக்காம வந்து ஒத்துழைப்பு தந்தாங்க. அவங்க செய்த உதவி வீண்போகல. ஷோ மூலமா சங்கத்துக்கு ஒரு தொகை கிடைச்சிருக்கு. நிகழ்ச்சியின் வரவு, செலவெல்லாம் முறைப்படி கூட்டம் நடத்தி உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும். இந்த இடத்துல என்னை ரொம்பவே காயப்படுத்திய ஒரு விமர்சனத்துக்கும் பதிலளிக்க விரும்புறேன். `ஷோவால ஒரு சிலர் பெர்சனலா லாபமடைஞ்சிருக்கிற மாதிரி தெரியுது'ன்னு பேசியிருக்காங்க. நான் மூணு முறை தேர்தல்ல தோல்வியடைஞ்சு, நாலாவது முறை ஜெயிச்சிருக்கேன். திரும்பத் திரும்ப இந்தச் சங்கத்துக்கு வரணும்னு நினைச்சது, இங்கே வந்து சம்பாதிக்கறதுக்காக அல்ல. அது எனக்குப் பக்கத்துல இருக்கிறவங்களுக்கு நல்லாவே தெரியும்.

Aadukalam Naren
Aadukalam Naren

கடந்த தேர்தல்ல உறுப்பினர்கள் மெஜாரிட்டியில ஜெயிக்க வெச்சாங்க. ஆனாலும் தலைவரா பதவி ஏற்ற நாளிலிருந்து, மற்ற அணிகள்ல இருந்து ஜெயிச்சு வந்தவங்க சொல்ற கருத்துக்கும் காதுகொடுத்து எந்தவொரு முடிவையும் எடுக்குறேன். வருடக் கணக்குல எந்தவொரு நிகழ்ச்சியும் நடக்காம இருந்த சூழல்ல, நாம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருக்கோம். வருடத்துக்கு ஒரு ஷோ இந்த மாதிரி நடத்தினாலே சங்கம் வளரும், சங்கம் வளர்கிறப்போ நிச்சயம் நாலு பேருக்கு அதனால பலனிருக்கும். இதையெல்லாம் யோசிக்காம பேசுறாங்களேன்னுதான் வருத்தமா இருக்கு!" என்கிறார், ரவிவர்மா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு