Published:Updated:

சந்தேகம், தொடர் சண்டை, கையைக் கிழித்து மிரட்டல்... சித்ரா மரணத்தில் தொடரும் கேள்விகள்?! #Chithra

சித்ரா
சித்ரா

சித்ராவின் உடல் இருந்த கீழப்பாக்கம் மருத்துவமனைக்கு மாலை 5.30 மணியளவில்தான் ஆர்டிஓ வந்தார். இதனால் பிரேதப்பரிசோதனை நாளைதான் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் சித்ராவின் உடலைமீட்டு பிரதேசப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். இந்நிலையில் சித்ராவுக்குக் கடந்த அக்டோபரிலேயே பதிவுத்திருமணம் நடந்துவிட்டது என அவர் தந்தை சொன்னதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டது.

சித்ராவின் உடல் இருந்த கீழப்பாக்கம் மருத்துவமனைக்கு மாலை 5.30 மணியளவில்தான் ஆர்டிஓ வந்தார். இதனால் பிரேதப்பரிசோதனை நாளைதான் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சித்ரா
சித்ரா

பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம்சிட்டியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடப்பதால் கடந்த டிசம்பர் 4-ம் தேதி முதல் பூந்தமல்லியில் உள்ள ப்ளசென்ட் டே ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார் சித்ரா. இவருடன் ஹேமந்த்தும் தங்கியிருந்திருக்கிறார். நள்ளிரவுகளில் ஷூட்டிங் முடிவதால் திருவான்மியூர் வரை தினமும் சென்றுவரத் தாமதம் ஏற்படுகிறது என்கிற காரணத்தால்தான் ஹோட்டலில் சித்ரா தங்கியிருந்ததாகச் சொல்கிறார்கள். இந்நிலையில்தான் இன்று அதிகாலை சித்ராவின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. சித்ராவின் மரணம் குறித்து அவருக்கு நெருக்கமாக இருந்த நண்பர்கள் மற்றும் விஜய் டிவி தரப்பில் சிலரிடம் விசாரித்தோம்...

"நடிகர் விஷாலின் நண்பரான ரமணன் மூலமாகத்தான் சித்ராவுக்கு ஹேமந்த்தை தெரியும். கொரோனா காலத்தில்தான் இருவருக்குமே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் நண்பர்களாக, திடீரென சித்ராவின் வீட்டுக்கே வந்து ஹேமந்த் திருமண ஆசையை சொல்ல, வீட்டிலும் சம்மதம் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகுதான் நிச்சயதார்த்தம், திருமண ஏற்பாடுகள் நடந்தன.

சித்ரா - ஹேமந்த்
சித்ரா - ஹேமந்த்

சமீபமாகவே இருவருக்குள்ளும் தொடர்ந்து சண்டைகள் நடந்தன. ஒருநாள் ஹேமந்த் ஒரு சண்டையில் தன் கையை கிழித்துக்கொண்டதாகவும், சித்ராதான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்ததாகவும் சொன்னார்கள். இது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' டீமில் இருந்த பலருக்குமே தெரியும். இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் பதிவுத்திருமணம் நடந்ததாகத் தெரிகிறது. ஒருமுறை 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இயக்குநரிடமே நெருக்கமான காட்சிகள் வைக்கக்கூடாது என்று ஹேமந்த் பேசியிருக்கிறார். ஹேமந்த்தின் வீட்டைச் சேர்ந்தவர்களும் நெருக்கமான காட்சிகள் தொடரில் இருக்கக்கூடாது எனச் சொல்லியிருக்கிறார்கள். இதுபற்றி சித்ராவே தன் நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். நேற்று இரவும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. ஆனால், சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக் கோழை இல்லை. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என போலீஸார் முழுமையான விசாரணை நடத்தவேண்டும்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு