Published:Updated:

`பாண்டியன் ஸ்டோர்ஸ்'-ல் நடித்த விக்ராந்த்தின் அம்மா... திடீரென சீரியலில் இருந்து தூக்கப்பட்டது ஏன்?

ஷீலா - விக்ராந்தின் அம்மா

சீரியல் தொடங்கியதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நடித்து வந்த ஷீலாவின் கேரக்டர் திடீரென முடிக்கப்பட்டதன் பின்னணியில், ஓப்பனாக விவாதிக்க முடியாத சில காரணங்கள் இருப்பதாகக் கிசுகிசுக்கிறது டிவி ஏரியா.

`பாண்டியன் ஸ்டோர்ஸ்'-ல் நடித்த விக்ராந்த்தின் அம்மா... திடீரென சீரியலில் இருந்து தூக்கப்பட்டது ஏன்?

சீரியல் தொடங்கியதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நடித்து வந்த ஷீலாவின் கேரக்டர் திடீரென முடிக்கப்பட்டதன் பின்னணியில், ஓப்பனாக விவாதிக்க முடியாத சில காரணங்கள் இருப்பதாகக் கிசுகிசுக்கிறது டிவி ஏரியா.

Published:Updated:
ஷீலா - விக்ராந்தின் அம்மா
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில், கதையின் முக்கியக் கேரக்டர்களான நான்கு அண்ணன் தம்பிகளின் அம்மாவாக நடித்த நடிகை ஷீலாவை, திடீரென இறந்து விட்டதாகக் காட்டி அவரது கேரக்டரை முடித்திருக்கிறது சீரியல் டீம்.

சீரியல் தொடங்கியதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நடித்து வந்த ஷீலாவின் கேரக்டர் திடீரென முடிக்கப்பட்டதன் பின்னணியில், ஓப்பனாக விவாதிக்க முடியாத சில காரணங்கள் இருப்பதாகக் கிசுகிசுக்கிறது டிவி ஏரியா.

"கதையின் போக்குனு இதைச் சாதாரணமாகக் கடந்து போக முடியலை" என்கிற சிலர், "புள்ளை மேல உள்ள கோபத்தை அம்மாகிட்டக் காட்டிட்டாங்கனு தோணுது" என்கிறார்கள். "அதாவது ஷீலாவின் மகனும் நடிகருமான‌ விக்ராந்த்தை பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராகக் கூப்பிட்டிருந்ததாகவும், அவரும் சரி எனச் சொல்லியிருந்ததாகவும் நியூஸ் வந்திருந்தது. இந்தச் சூழல்ல திடீர்னு அவர் இன்னொரு சேனல்ல புதுசா தொடங்கின ஷோவுக்குப் போயிட்டார். நம்மகிட்ட வர்றேன்னு சொல்லிட்டு திடீர்னு போட்டி சேனலுக்குப் போயிட்டாரேங்கிற ஆத்திரத்துலதான் இந்த அம்மாவை இறந்து போனதா காட்டிட்டாங்க'' என்கிறார்கள்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்னத்திரை வட்டாரத்தில் ஸ்கிரீனுக்குப் பின்னால் இதுபோன்ற விஷயங்கள் அவ்வப்போது நடக்குமென்பதால் இந்தத் தகவலைப் புறந்தள்ள முடியவில்லை.

அதேநேரம், இன்னொரு தரப்பினரோ, "டி.ஆர்.பி.க்காகத்தான் இறக்குற மாதிரி எடுத்திருக்காங்க. ரேட்டிங்காக ஆர்ட்டிஸ்டுகளை இந்த மாதிரி தூக்கறதெல்லாம் டிவியில சகஜம்தானே?!" என இன்னொரு காரணத்தைச் சொல்கிறார்கள்.

" 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஒளிபரப்பாகிற அதே 8 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிற சீரியல் 'பூவே உனக்காக'. சமீபமா இந்த சீரியல் டி.ஆர்.பி-யில டாப் 5 பட்டியலில் இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கு. அதனால 8 மணி ஸ்லாட்டில் இந்த இரண்டு சீரியல்களுக்கும் இடையில் கடும் போட்டி. ஒரு வாரம் 'பூவே உனக்காக' முந்தினா அடுத்த வாரம் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முந்துது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுல தொடர்ந்து சில வாரங்கள் 'பூவே உனக்காக' நல்ல ரேட்டிங் வாங்க, 'அதிரடியா ஏதாச்சும் பண்ணுங்க'னு 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' யூனிட்டுக்கு உத்தரவாம். அதனாலயே முதல்ல நாலு சகோதரர்களில் கடைசித் தம்பி, வீட்டை எதிர்த்துக் கல்யாணம் செஞ்சிக்கிற மாதிரி சில நாள்களுக்கு முன் சீன் வச்சாங்க. இப்ப இந்த அம்மாவை இறந்து போனதாக் காட்டி அதிரடியை நிகழ்த்தியிருக்காங்க. இன்னும் என்னென்ன செய்யப் போறாங்களோ தெரியல" என்பதுதான் அந்த இன்னொரு காரணம்.

ஷீலா - விக்ராந்தின் அம்மா
ஷீலா - விக்ராந்தின் அம்மா

தன்னுடைய கேரக்டர் முடிந்த அடுத்த சில தினங்களில் அதுகுறித்துப் பேசியிருந்த ஷீலா, "என்னுடைய கேரக்டர் முடியப் போகுதுனு முதல் நாள்தான் கூப்பிட்டுச் சொன்னாங்க. நான் இதுவரை நடிச்ச சீரியல்கள்ல பாதியில வெளியேறினது இதுதான் முதல் முறை" எனக் கொஞ்சம் வருத்தம் தோய்ந்த குரலிலேயே சொல்லியிருந்தார். "பொதுவா இறந்துட்ட மாதிரிக் காட்டணும்னா ஒரு போட்டோவை மாட்டி மாலை போட்டுக் காண்பிச்சுடுவாங்க. ஆனா, என் விஷயத்துல பிரேதமாப் படுக்க வச்சு நெத்தியில காசெல்லாம் வச்சு ஷூட் பண்ணினாங்க. யூனிட்லயே பலருக்கும் இதுல வருத்தம்'' என்றும் சொல்லியிருந்தார் ஷீலா.

கேரக்டர் முடிக்கப்பட்ட பின்னணி என ஆளாளுக்கு இப்படிப் பல காரணங்கள் சொல்ல, இதுகுறித்து ஷீலாவின் மருமகளும் நடிகர் விக்ராந்தின் மனைவியுமான மானசாவிடம் பேசினேன்.

"விஜய் டிவியிலேயே இன்னொரு சீரியலுக்குக் கேட்டிருக்கறதா கூடச் சொன்னாங்க என் அத்தை. வெளியில பலவிதமாப் பேசறாங்கன்னா அதுக்கு நாங்க என்ன கருத்தைச் சொல்ல முடியும்?" என முடித்துக் கொண்டார்.