சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

நீலிமா ராணி
பிரீமியம் ஸ்டோரி
News
நீலிமா ராணி

கணவர் விபத்தில் சிக்கியதால் சீரியலுக்கு பிரேக் விட்டு உடனிருந்து அவரைக் கவனித்துவந்தார் வினோதினி

விகடன் TV: ரிமோட் பட்டன்

வெளிப்படையாகவே திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் வி.ஜே. மகேஸ்வரி. ‘திடீர்னு என்ன அரசியல்’ எனக் கேட்டால் “முப்பது வயசு தாண்டிடுச்சு, இன்னும் அரசியல் பத்திப் பேசாம இருந்தா எப்படி” என எதிர்க்கேள்வி கேட்கிறார். ‘`யாருக்கு ஓட்டு போடணும்கிறது என்னுடைய முடிவு. அதேபோல என் சர்க்கிள்ல என்னை ஃபாலோ செயுகிறவங்ககிட்ட யாருக்கு ஓட்டு போட்டா நல்லது’ன்னு சொல்றதையும் கடமையா நினைக்கிறேன்’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

’அக்னி நட்சத்திரம்’ தொடரில் நடித்துக் கொண்டிருந்த போது கணவர் விபத்தில் சிக்கியதால் சீரியலுக்கு பிரேக் விட்டு உடனிருந்து அவரைக் கவனித்துவந்தார் வினோதினி. இந்நிலையில் சமீபமாக தொடர்ந்து அவருக்குச் சில வாய்ப்புகள் வந்திருக்கின்றன‌. ஆனால் கடைசி நேரத்தில், ‘ஸாரி, நாங்க வினோதினி வைத்யநாதனுக்குப் பதிலா உங்களைக் கூப்பிட்டுட்டோம்’ எனச் சொன்னார்களாம். ‘அந்தப் பொண்ணு கூட எனக்கு அறிமுகம்கூடக் கிடையாது; ஆனா அவங்களுக்குப் பதிலா என்னைக் கூப்பிடுறாங்க. நடிகர் அதர்வாவுடன் ஒரு படம்னு சொல்லிக் கூப்பிட்டு ஏர்போர்ட் வரைக்கும் போய் இப்படி ஏமாந்தேன். அந்த வினோதினிக்கு ஒரே ஒரு ரெக்வஸ்ட்தான்... எல்லா இடத்துலயும் முழுப் பெயரைப் பயன்படுத்துங்களேன்’ என்கிறார் வினோதினி.

விகடன் TV: ரிமோட் பட்டன்

குழந்தை நட்சத்திரம், தங்கை, தோழி கேரக்டர் என சினிமாவில் முதல் இன்னிங்ஸ் வந்த நீலிமா ராணி சீரியல் பக்கம் வந்து ஒரு கட்டத்தில் சீரியல் தயாரிப்பிலும் இறங்கினார். தற்போது குழந்தை வளர்ந்து விட்டதால் மறுபடியும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சித்தி 2.’, ‘பாக்யலட்சுமி’ சீரியல்களில் நடித்துவரும் நேகாவுக்கு வயது 19. சில தினங்களுக்கு முன் இவருடைய அம்மாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. ‘பத்தொன்பது வயசுக்குப் பிறகு தங்கச்சிப் பாப்பாவா’ என இவருடைய சோஷியல் மீடியா பக்கத்தில் சிலர் கேலி செய்ய, கொதித்துவிட்டார். ‘நான் மகிழ்ச்சியான ஒரு தருணத்துல இருக்கேன்; குப்பையை அள்ளி வீசுகிறவர்கள் தயவுசெய்து என் முகத்துல முழிக்காதீங்க’ என, கேலி செய்கிறவர்களை பிளாக் செய்துவருகிறாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கொரோனா ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்படாததால் விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு ரொம்பவே சிம்பிளாக நடந்தது. சென்னை ஈவிபி பிலிம் சிட்டி வளாகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டவர்கள், விருது பெற்றவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக ஆர்ட்டிஸ்டுகளின் குடும்பத்தினர்கூட அனுமதிக்கப்படவில்லையாம். ஏப்ரல் 11-ம் தேதி அன்று டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

சமையல் நிகழ்ச்சி மூலம் ரொம்பவே அதிகமாகப் புகழடைந்தது அதே சேனலில் சீரியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர்தான். சீரியலில் நடித்துக் கொண்டிருந்த வரைக்கும் தேடுவார் இல்லாமல் இருந்தவரை இந்த ஒரேயொரு நிகழ்ச்சி உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டது. இந்த ஹீரோவுக்குப் பதில் முதலில் சேனல் அழைத்தது ஏற்கெனவே அங்கு சாக்லெட் பாயாக இருந்த ஹீரோவைத்தானாம். அந்த வாய்ப்பை மறுத்ததை நினைத்து இப்போது ஃபீல் பண்ணுகிறார் சாக்லெட் பாய் நடிகர்.

விகடன் TV: ரிமோட் பட்டன்